கடந்த 2007 ஆம் ஆண்டு அஜ்மீர் தர்ஹாவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. வழக்கம் போல் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற கோணத்தில் தான் விசாரணைகள் நடைபெற்றன. உண்மை வெளிபட்டே தீரும் என்ற அடிப்படியில் இந்துத்துவ தீவிரவாதிகள் தான் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தினார்கள் என்ற செய்தி தெரியவந்தது. இந்த செய்தி பிற மக்களுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியான செய்தியாக இருக்கலாம். ஆனால் நாம் இதை ஆரம்பம் முதலே கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
இந்துத்துவ தீவிரவாதியான் சந்திரசேகர் மற்றும் அவனோடு தொடர்புகொண்ட 7 நபர்களை ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினர் மே1, 2010 ஆம் ஆண்டு கைது செய்தனர்.
தற்போது இந்த குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்திரசேகரை நிபந்தணையின் அடிப்படையில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்துள்ளது. ரூபாய் 2 லட்சத்திற்கான பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக்கொண்டு நிபந்தனை ஜாமீனில் நீதிபதி ஆ.எஸ்.ரத்தோர் விடுதலை செய்துள்ளார்.
செய்தி: முத்து
1 விமர்சனங்கள்:
Bhai check the photo of chandrasekhar
கருத்துரையிடுக