அஹமதாபாத்: தேவ்பந்த் தாருல் உலூம் மதரஸாவின் புரோகிதர் மெளானா குலாம் முஹம்மது வஸ்தன்வி மற்றும் பிரபல முன்னனி வணிகருமான ஜாபர் சரேஷ்வாலா ஆகிய இருவரை தொடர்ந்து தற்போது பாலிவுட் திரை உலகின் இசை அமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது முஸ்லிம் சமூகம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரேல்வி உலமாவாகிய அப்துல் சத்தார் ஹம்தனியும் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு இந்திய தேசமே தலை குனியும் அளவிற்கு அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பெண்கள், சிறுமிகள், முதியவர் என வயது வித்தியாசமின்றி பாஸிச காம வெறியர்களாள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இத்துனை கொடுமைகளும் அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியின் ஆதரவோடு தான் நடைபெற்றது என்ற உண்மையை தற்போது பல காலவல் துறை அதிகாரிகள் சாட்சியம் அளித்து வரும் வேலையில் முஸ்லிம்களில் சிலர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவது முஸ்லிம் சமூகம் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
"குஜராத் ஒளிர்கிறது" என்ற மாயை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் மற்ற எல்லா மாநிலங்களை விடவும் சிறந்து விளங்குவதாக பொய்யை பரப்பி அதன் மூலம் நரேந்திர மோடி தன்னை சிறந்த முதலமைச்சராக காட்டிக்கொண்டார். இதை நம்பி ஏமாறும் பல பேர்களில் முஸ்லிம்களும் உண்டு என்பது தான் வேதனையான விஷயம்.
பாலிவுட் இசை அமைப்பாளரான தர்பார் அரசியல் செல்வாக்கு உள்ளவர். குஜராத் மாநிலத்தில் 2012 டிசம்பர் மாதம் நடக்க இருக்கின்ற சட்டமன்றத்தேர்தலில் சூரத் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
நாக்பூரில் வைத்து பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி தர்பார் தங்களுடைய கட்சியில் இணைய வேண்டும் என்று அழைப்புவிடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் நிதின் கட்காரி கூறியதாவது, "முஸ்லிம்கள் கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்துவிடவேண்டும், குறிப்பாக குஜராத்தில் 2002 ஆம் நடந்த சம்பவங்களை மறந்துவிட்டு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மோடி அரசுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமாம்.
நரேந்திர மோடிக்கு ஆதரவாக பேசிய மற்றொரு நபர் அப்துல் சத்தார் ஹம்தானி, இவர் 1993 பம்பாய் குண்டு வெடிப்பில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து மற்றும் துப்பாக்கி வைத்திருந்ததாக இவர் மீது வழக்கு உள்ளது. மேலும் மும்பை புகழ் தாவூத் இபுராஹிமுடன் தொடர்பு இருந்ததாகவும் வழக்கு உள்ளது.
60 வயதாகும் ஹம்தானி பரேல்வி முஸ்லிம்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உள்ளவர், தாவூத் இபுராஹிமுடைய கூட்டாளிகளுக்கு உதவியதற்காக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. ஹமதானியுடன் மேலும் போர்பந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 21 நபர்கள் தீவிரவாதிகளாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னால் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக செயல்பட்ட ஹமதானி அக்கட்சியில் இருந்து வெளியேறி அரசியலில் எதிர்மறையான வழியை தேர்ந்தெடுத்துள்ளார். அதன் பிறகு எந்த கட்சியிலும் சேராத ஹமதானி சமீபத்தில் போர்பந்தரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் நரேந்திர மோடியை புகழ்ந்துள்ளார். மேலும் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஹமது பட்டேலை "தீவிரவாதிகளின் ஆதரவாளர்" எனக்கூறியுள்ளார்.
மேலும் ஹமதானி தப்லிக் ஜமாத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார். தப்லிக் ஜமாத் அடிப்படைவாதிகளை உருவாக்குகிறது என்றும், தீவிரவாதத்தை ஆதரிக்கிறது என்றும் அபாண்டமாக பழி சுமத்தி வருகிறார். அஹமது பட்டே தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர் என்றும் தப்லிக் ஜமாத்தைச்சேர்ந்தவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என கூறியுள்ளார்.
நரேந்திர மோடி பற்றி கூறும்பொழுது, அவர் தீவிரவாதத்திற்கு எதிராக போராடி வருவதாகவும் முஸ்லிம்கள் 2002ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை மனதில் எடுத்துக்கொண்டு நரேந்திர மோடியை வெறுப்பதாக கூறியுள்ளார்.
முஸ்லிம்கள் ஒரு போது 2002 ஆம் ஆண்டு நடந்த கொடூரங்களை மறக்க மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். அத்துனை கொடூரங்களுக்கு நரேந்திர மோடிதான் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் நடத்தி முடித்தார் என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் இன்று வெளிவந்து கொண்டிருக்கிறது. குஜராத் முஸ்லிம்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கிட்ட இருக்கிறது. அதுதான் அடுத்த வருடம் வருகின்ற சட்டமன்றத் தேர்தல். நரேந்திர மோடியை பிரதமராக ஆக்குவதற்கு முயற்ச்சித்து வருகிறது. இதனை உடைத்து நரேந்திர மோடிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். செய்வார்களா குஜராத் முஸ்லிம்கள்? பொறுத்து இருந்து பார்ப்போம்!
செய்தி: முத்து

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக