புதுடெல்லி: சிறப்பான ஒரு தருணத்தில் நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சி இனிதாக நடைபெற்றது. ஆம்! அஸ்ஸாம் மாநிலத்தில் இயற்க்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் உண்ணதாமான பணியை "ரிஹாப் இந்தியா ஃபளெண்டேஷன் டிரஸ்ட்" சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
கடந்த மே மாதம் 29ஆம் தேதின் அன்று பெரியவர்கள் சிறியவர்கள் என நூற்றுக்கணக்கான கிராம வாசிகளின் முன்னிலையில் ரிஹாப் கிராமம் இனிதே தொடங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
வட மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களின் நிலை மோசமாக இருக்கின்றது. மனிதனுக்கு அத்தியாவசிய தேவையான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்ற இந்த 3 வசதிகளும் கிடைகாத நிலையிலும், குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது தான் ரிஹாப் இந்தியா ஃபளெண்டேஷன் டிரஸ்ட்.
இந்தப்பணியின் முதல் கட்டமாக 45 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு அவர்களிடம் வீட்டுக்கான சாவிகள் ஒப்படைக்கப்பட்ட தருணம் இனிமையானது என்பதை இதற்காக உழைத்த, இதற்காக தங்களுடைய செல்வங்களை வாரி வழங்கிய, இதற்காக மனமு உருகி இறைவனிடம் மன்றாடிய யாராலும் மறுக்கமுடியாது.
இதனால் வரை இந்த மக்கள் சாலையோரங்களில் அநாதைகள் போல் வசித்து வந்தனர். இவர்களுக்கென்று அரசாங்கம் எந்தவித உதவியையும் செய்ததில்லை. 1000 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட வேண்டும் என்ற இந்தப் பணியில் முதல் கட்டமாக 51 வீடுகள் குடியேறுவதற்கு தயாராகிவிட்டது. 1000 வீடுகள் கட்டுவதற்கான நிலம் ஏற்கனவே வாங்கப்பட்டுவிட்டது என்பது சிறப்பு தகவல் ஆகும்.
இதன் பிறகு ரிஹாப் டிரஸ்ட் அடுத்தக்கட்ட பணிகளுக்கு ஆயத்தமாகி வருகிறது. அதில் இன்னும் சில வீடுகளும், ஒரு மஸ்ஜித் மற்றும் ஆரம்பப் பள்ளியை கட்ட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளது.
ரிஹாப் இந்தியா ஃபெளண்டேஷன் டிரஸ்டின் தலைவரும் சோஷியம் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவருமான ஈ. அபூபக்கர் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுக்குரிய சாவிகளை வழங்கினார். அஸ்ஸாம் மாநிலத்தில் பொங்கைகான் மாவட்டத்தில் ரிஹாப் கிராமம் தொடங்கப்பட்டுள்ளது.
ரிஹாப் டிரஸ்டின் செயலாள வழக்கறிஞர் ஹஃபீஸ் ரஷீத் வரவேற்புரை நிகழ்த்தினார். ரிஹாப் டிரஸ்டின் செயல்பாடுகள் பற்றி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கே.எம். அஷ்ரப் எடுத்துக்கூறினார். இன்னும் சமுதாய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர், ஈ.எம் அப்துர் ரஹ்மான் (தேசிய தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட்), டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் (பொருளாளர், ரிஹாப்), பேராசியர் முஹம்மது சுலைமான் (துணைத்தலைவர் ரிஹாப்), உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இறுதியாக இமாமுதீன் நன்றியுரை வழங்கினார்.
நன்றி: பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய இணைத்தளம்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமுதாய பிரமுகர்கள் |

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் |

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக