இன்றைய பத்திரிக்கை உலகில் அங்கில பத்திரிக்கையான் "தி ஹிந்து" தனி ஒரு அந்தஸ்த்தை பெற்ற நாளிதழாக விளங்குகிறது. செய்திகளை கலப்படமில்லாமல் தருவதும், உரிய நேரத்தில் உரிய செய்திகளை தருவதில் ஹிந்து பத்திரிக்கை தனி ஒரு சிறப்பை பெற்றுள்ளது. தொழில் அதிபர்கள் முதற்கொண்டு பாமர மக்கள் வரை படித்த அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்த பத்திரிக்கை என்று கூறலாம். பெரும்பான்மயான பத்திரிக்கைகள் அனைத்தும் ஆபாசம் நிறைந்த செய்திகளை வெளியிட்டு தனது பத்திரிக்கைளை விற்றபோதும், ஹிந்து பத்திரிக்கை இதிலிருந்து விலகி தனித்துவம் பெற்ற பத்திரிக்கையாக விளங்கி வருகிறது என்று கூறலாம்.
ஆனால் சமீபகாலமாக தனது தரத்திற்கு தானே கேடு விளைவிக்கும் வகையில் ஆதரமற்ற, செய்திகளை வெளியிட்டு வருகிறது. தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் பிரவீன் சாமி வாந்தி எடுத்த ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு தன்னுடைய தரத்தை குறைத்திருக்கிறது ஹிந்து பத்திரிக்கை.
பிரவீன் சாமி என்பவர் கடந்த 2004-2005 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து விட்டு திரும்பி வரும் போது, அமெரிக்காவின் அடிவருடியாக மாறி அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு ஆதாரமற்ற பேச்சுக்களையே பேசி வருகிறார். அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு இஸ்லாத்திற்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் நச்சுக்கருத்துக்களை வெளியிட்டு வரும் பிரவீன் சாமி, இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்து ஃபாஸிச கட்சியான பா.ஜ.கவின் அடிவருடியாகவும் செயல்பட்டுவருகிறார். இஸ்லாமிய தீவிரவாதம் என்றும் முஸ்லிம் தீவிரவாதி என்றும் வழக்கம் போல் ஹிந்துத்துவா சக்திகளுடன் கைகோர்த்துக்கொண்டு மீடியாக்களில் பேட்டி கொடுத்து வருவது பிரவீன் சாமியின் வாடிக்கையாகி விட்டது.
ஹிந்து பத்திர்க்கையின் மூத்த ஆசிரியர் ஒருவர் கூறும்போது ஹிந்து பத்திரிக்கை பிரவீன் சாமியை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு காரணம் பிரவீன் சாமிக்கு புலனாய்வு அதிகாரிகளுக்கு உள்ள நெருங்கிய தொடர்பே காரணம் என்று கூறியுள்ளார். உளவுத்துறை தாமாகவே உருவாக்கிய கற்பனை செய்திகளை முக்கிய செய்திகளை போன்று பிரவீன் சாமி பரப்பி வருகிறார். தனித்துவம் பெற்ற பத்திரிக்கைகள் அனைத்தும் இவை போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை ஆனால் ராம் அவர்களுக்கு பிரவீன் சாமி ஒரு விலைமதிப்பற்ற ஒரு சொத்தாக கருதுகிறார் என ஹிந்து பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய சமூகத்தினுடைய எத்தனையோ அறிஞர்கள் பிரவீன் சாமிக்கு எதிராக கண்டன குரல் எழுப்பியும், அத்தனையும் கண்டு கொள்ளாது அதிக அளவில் பிரவீன் சாமிக்கு சுதந்திரத்தை கொடுத்துள்ளது ஹிந்து பத்திரிக்கை. பிரவீன் சாமியின் இரட்டை நிலைபாடான செய்திகளை தினம் தினம் பிரசுரித்து வருகிறது ஹிந்து பத்திரிக்கை.
இன்று எத்தனையோ தீவிரவாத செயல்களுக்கு பின்னால் ஹிந்துத்துவா ஒளிந்திருக்கிறது. அவை அனைத்து இன்று வெளியாகிக்கொண்டிருக்கும் போதிலும் இந்தியாவில் நடக்கும் அத்துனை தீவிரவாத செயல்களுக்கு பின்னால் ஏதோ ஒரு முஸ்லிம் தான் ஈடுபட்டு வருகிறான் என்பது போலவே பிரவீன் சாமியின் பிரச்சாரம் இருந்து வருகிறது.
"இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற தலைப்பில் ஒப்பாரிவைக்கும் பிரவீன் சாமிக்கு எதிரான விமர்சனங்கள் சமீபத்தில் அதிகரித்துள்ளது. புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அமைப்பான "ஜாமியா மில்லியா இஸ்லாமியா" என்ற அமைப்பு பிரவீன் சாமியை எதிர்த்து கடுமையாக விமர்சித்துள்ளது. பாட்லா ஹவுஸ் போலி எண்கவுண்டர் விவகாரத்தில் பிரவீன் சாமி வெளியிட்டு செய்தியே அந்த விமர்சனத்திற்கு காரணமாக அமைந்தது. தீவிர விசாரணைக்கு பிறகு பாட்லா ஹவுஸ் எண்கவுண்டர் ஒரு போலி எண்கவுண்டர் என்றும் அதில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள் என்றும் நிரூபணமாகி இருந்த சமயத்தில் இந்த பிரவீன் சாமி மட்டும் எண்கவுண்டர் செய்யப்பட்டவர்கள் தீவிரவாதிகள் தான் என்றும் அதை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆனால் இந்த பிரவீன் சாமியின் கருத்தினை எதிர்த்து "ஃபேஸ் புக்" தளத்தில் அதிக அளவில் விமர்சனங்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிரவீன் சாமி வாந்தி எடுத்து அதை பரப்பரப்பாக்கி கொண்டிருக்கும் செய்தி அல்கொய்தா பற்றியானது. சமீபத்தில் அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் உஸாமா பின் லாடன் அமெரிக்கப்படைகளால் கொல்லப்பட்டதாகவும், அதன் பிறகு அவ்வியக்கம், அல்-ஜவாஹிரியை புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அல் ஜவாஹிருக்கு இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டம் இருப்பதாகவும் இரவு முழுக்க சோறு தண்ணீர் இல்லாமல் எழுதிய கதையை ஏற்பாடு செய்துள்ளார். பிரவீன் சாமி எடுத்த வாந்தியை அப்படியே விழுங்கி மீண்டும் அதை தன்னுடைய பத்திரிக்கையில் தயங்காமல் வெளியிட்டது ஹிந்து பத்திரிக்கை. இந்த செய்தி ஜூன் 17ஆம் தேதி நாளிதழில் வெளிவந்துள்ளது. அத்தோடுமட்டுமல்லாமல் அல் ஜவாஹிரி இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தானை உபயோகப்படுத்த இருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது ஹிந்து பத்திரிக்கை.
அல்கொய்தா இயக்கத்தினர் இந்தியாவிலேயே இல்லை என்று மத்திய அரசும், காஷ்மீர் அரசும் திட்டவட்டமாக அறிவித்த போதும், பிரவீன் சாமி மட்டும் அல்கொய்தாவை இந்தியாவிற்குள் நுழைக்க படாத பாடு பட்டு வருகிறார் போலும். அத்தோது ஒரு புதிய தகவலாக பிரவீன் சாமி எடுத்த வாந்தி, அல்ஜவாஹிரி தனது 14 வயதிலேயே "இஹ்வானுல் முஸ்லிமீன்" இயக்கத்தில் சேர்ந்தார் என்பது தான்.
பிரவீன் சாமி ஒரு தீவிரவாத விற்பனையாளர். உலகில் எத்தனையோ ஆதரபூர்வமான செய்திகள் வெளிவந்த போதிலும் அதையெல்லாம் படிப்பதற்கும், தெரிந்து கொள்வதற்கும் அவருக்கு நேரம் என்று நினைக்கிறேன். அல்கொய்தா என்ற இயக்கம் உலகத்திலேயே இல்லை, அது அமெரிக்காவின் சி.ஐ.ஏவினால் உருவாக்கப்பட்ட ஒரு போலியான இயக்கம் என்று எண்ணற்ற ஆதாரங்கள் இருந்த போதிலும் பிரவீன் குமார் போன்ற துவேஷ எண்ணம் கொண்ட சிலர் தேவையில்லாத பதடத்தை ஏற்படுத்துவதிலேயே முனைப்புடன் செயல்படுகின்றனர்.
சத்தியம் வந்தது! அசத்தியம் அழிந்தது! அசத்திய அழிந்தே தீரும்! அதே போல் பிரவீன் சாமி போன்ற போலி வேடம் போடுபவர்களின் முகத்திரை கிழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.!
நன்றி: மில்லிகெஜட்
தமிழில்: முத்து
தமிழில்: முத்து
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக