புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

ஆந்திர காவல்துறையினரின் முஸ்லிம் விரோத போக்கு - வன்மையாக‌ கண்டிக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட்

10 செப்டம்பர், 2011

கர்னூல்: சமீபத்தில் ஆந்திர மாநில உளவுத்துறை அதிகாரிகள் மாநிலத்தின் காவல் ஆய்வாளர்கள் அனைவருக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் ரமலான் மாதத்தில் வசூலிக்கும் ஜகாத் தொகையினை கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இதனை வன்மையாக பாப்புலர் ஃப்ரண்ட் கண்டிக்கிறது.

இது தொடர்பாக ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர் முஹம்மது ஆரிஃப் அஹமது அவர்கள் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய செய்திகளில் கூறியதாவது "முதலைமைச்சரும், உளதுறை அமைச்சரும் உடனே இதில் தலையிட்டு உடனடியாக இந்த அறிக்கையை திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்டும் என கூறியுள்ளார்.

முஸ்லிம் உறுப்பினர்களை கொண்டு தன் சமூகத்தை வலிமைப்படுத்துவதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் என்ற ஒரு சமூக இயக்கம் இன்று ஆந்திர மட்டுமல்லாது இந்தியாவின் பல மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு சட்டத்திற்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்ட இயக்கமாகும். இதன் தேசிய தலைமையகம் புதுடெல்லியிலும், மாநில தலைமையகம் கர்னூலிலும் அமைந்துள்ளது. முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்க்காவும் பல சமூக பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் செய்து வருகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் ஜாதி, மத பேதமின்றி இயற்க்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட இடங்களில் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

நாங்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட சமூகத்தின் நீதிக்காகவும், இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் ஃபாசிஸ சக்திகளுக்கு எதிராகவும் போராடக்கூடியவர்கள் என்பது மறைக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. உண்மை செய்திகள் இவ்வாறு இருக்க ஆந்திர காவல்துறையின் இத்தகைய போக்கு மிகவும் கண்டிக்க்கத்தக்கது. இது மத உரிமையை பரிக்கக்கூடிய செயலாகும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஒன்றும் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல மறைந்திருந்து செயல்படுவதற்கு. இது நாள் வரை அதன் உறுப்பினர்கள் மீது எந்த ஒரு தீவிரவாத தாக்குதல் வழக்கும் இல்லை. மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு உள்நாடுகளிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் எந்த ஒரு இயக்கத்துடனும் தொடர்புகள் கிடையாது. ஆனால் காவல்துறையினரோ பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு தீவிரவாத இயக்கம் என்றும் அதற்கும் உலகத்தில் இயங்கும் பல தீவிரவாத அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக அபாண்டமான குற்றச்சாட்டுகளை அள்ளி தெளித்துள்ளனர். இப்படி அடிப்படை ஆதாரமில்லாம செய்திகளை வெளியிடுபவர்கள் நிச்சயமாக ஃபாசிஸ சிந்தனையுடைய காவல்துறையினராகவே இருக்கிறார்கள்.

சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக செயல்படுவது இது ஒன்றும் ஆந்திர அரசுக்கு புதிதல்ல, மாறாக மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் போது எண்ணற்ற அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் விசாரணை என்கின்ற பெயரில் காவல்துறை கஸ்டடியில் வைத்து துன்புறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் பின்னர் அந்த குண்டுவெடிப்பிற்கு காரணம் ஹிந்துத்துவ தீவிரவாதிகள் என்ற உண்மை வெளிவந்தது. முஸ்லிம்கள் தங்களது மார்க்க கடமையான ஜகாத்தை வசூலிப்பதை கூட குற்றமாக பார்க்கும் இந்த காவல்துறை ஹிந்துத்துவ அமைப்பினர் கோடிக்கோடியாக பணத்தை வசூலித்து தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்துவது ஏன் காவல்துறையின் கண்களுக்கு தெரியவில்லை?

ஃபாசிஸ சிந்தனைகொண்ட கொடியவர்களிடமிருந்து மாநிலக் காவல்துறையை சுத்தப்படுத்த வேண்டும்.  இவ்வாறு மாநிலத் தலைவர் முஹம்மது ஆரிஃப் அஹமது கூறியுள்ளார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் அனைத்து சிறுபான்மை மற்றும், சமூக ஆர்வலர்களை ஒன்று திரட்டி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் என அவர் தெரிவித்தார்.

தமிழில்: முத்து

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010