புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

எதற்கும் தடையில்லாத ஹிஜாபிற்கு தடையா?

2 ஜூலை, 2011

பளு தூக்கும் போட்டியில் ஹிஜாப் அணிந்து புரட்சி செய்யும் முஸ்லிம் பெண்மணி!

"ஹிஜாப்" அல்லது "பர்தா" என்ற வார்தைகளை கேட்டால் போதும் மேற்கத்திய நாடுகளுக்கும் சரி அவர்கள் நடத்தும் மீடியாக்களுக்கும் சரி நல்ல வாய்புதான். காரணம் "பர்தா" பற்றிய விமர்சனங்களும் விவாதங்களுக்கும் இன்று வரை முற்றுப் புள்ளி ஏற்பட்டதில்லை. "இஸ்லாம்" பெண்களை அடிமைப்படுத்துகிறது என்றும் பெண்களுக்குண்டான் உரிமைகளை மறுக்கிறது என்றும் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் அவதூறுகளுக்கும் பஞ்சம் கிடையாது.

அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தினைச் சார்ந்த 35 வயதான‌ குல்சூன் அப்துல்லாஹ் பொறியியல் துறையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். அவர் பழு தூக்கும் போட்டி நேராக தூக்கும் (டெட்லிஃப்ட்) 111 கிலோ பிரிவிலும், மற்றும் தாங்கிப் பிடித்து தூக்கும் (ஸ்னேச்) 47.5 கிலோ பிரிவிலும் சாதனை செய்துள்ளார். ஆனால் அந்த சாதனையாளருக்கு வந்தது ஒரு சோதனை.

குல்சூன் அப்துல்லாஹ் மற்ற பழுதூக்கு வீராங்கனைகளைப் போன்று அரைகுறை ஆடையுடன் இல்லாமல் முழுமையான் இஸ்லாமிய ஒழுக்க நெறியுடன் ஹிஜாப் அணிந்து போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார். போட்டியின் நடுவர்கள் அனைவரும் மேலை நாட்டின் போலியான நாகரீகவாதிகள். அமெரிக்காவின் பழு தூக்கும் சங்கத்தினர் உலக பழுதூக்கும் சட்டத்தினை மேற்கோள் காட்டி பழுதூக்குபவர்கள்  கைகளையும், கால் முட்டிகளையும் முடக்குவதினை வெளிப்படையாக காட்ட வேண்டுமென்றும் ஆனால் ஹிஜாப் அணிந்திருந்தால் அவ்வாறு பார்க்க முடியாது, ஆகவே அவர் இனிமேல் ஹிஜாப் அணிந்தால் பழு தூக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளமுடியாது என அறிவித்திருக்கிறார்கள்.


இன்றைய கால கட்டத்தில் டென்னிஸ் போட்டிகளில் விளையாடும் வீராங்கனைகளின் ஆடைகள் படு மோசமாகிப்போனைதை பார்க்கின்றோம். குறிப்பாக அமெரிக்க வீராங்கனைகளான் வில்லியம்ஸ் சகோதரிகளின் ஆடைகள் படு கவர்ச்சியாக இருப்பதை நாம் அறிவோம்.

நாகரீகத்தில் கேடுகெட்ட உச்ச நிலைக்கு சென்றுள்ள அமெரிக்கா போன்ற நாடுகளில் பெண்களின் ஆடைகளின் நிலமை இவ்வாறுதான் போய்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விளையாட்டையும் காண வரும் ரசிகர்கள் அந்த விளையாட்டின் வீரர் வீராங்கனைகளின் விளையாட்டு திறமைகளை ரசிப்பார்கள். ஆனால் இன்று பெரும்பாலும் பெண் வீராங்கனைகளின் ஆட்டத்தை காண வரும் ரசிகர்கள் அந்த வீராங்கனையும் கவர்ச்சியான ஆடைய ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே விளையாட்டுப் போட்டிகளை காண வருகிறார்கள்.

ஒரு ஓட்ட பந்தய வீரர் ஓடும் வேகத்தினையும், காற்றின் வேகத்தினையும் தூரத்திலிருந்தே கணிக்கக் கூடிய ஸ்கேனுடன் இணைந்த நவீன கருவிகள் இருக்கும்போது ஒரு பழு தூக்கும் வீரர் கால், கை முட்டிகள் தெரிந்தால் தான் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும் என்று கூறுவது மடத்தனமான கூற்றாகும்.

சகோதரி குல்சூனுக்கு ஆதரவாக அமெரிக்க முஸ்லிம் நல்லுறவு கவுன்சிலின் இயக்குனர் நிகாட் அவாட் குரல் கொடுத்துள்ளார். அமெரிக்க ஒலிம்பிக் கவுன்சிலுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில்  "அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் அமெரிக்க வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் பங்கு பெற்றுள்ளனர். அவர்களின் மத உணர்வுகளை செயற்கையான உடையினைக்கொண்டு வேறு படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். அவருடைய கோரிக்கைக்கு பல் வேறு அமெரிக்கரிடையே ஆதரவு பெருகியுள்ளது.

இதனையறிந்த சகோதரி குல்சூன் மகிழ்ச்சியுடன் கூறும்போது "எனது மத உணர்வுகளை மதித்து எனக்கு ஆதரவு பெருகுவதினை அறிந்து சந்தோஷத்தில் மிதக்கிறேன். அதுவும் நான் ஹிஜாப் அணிந்து பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்கு அனுமதியளிக்க உலக குத்துச் சண்டை கழகம் மலேசியாவில் விவாதிக்க உள்ளது என்பதே என் மதக் குறிக்கோளில் பாதிக் கிணறு தாண்டியது போல் உள்ளது என்று கூறினார்.

சமீபத்தில் ஈரான் நாட்டின் பெண்கள் கால் பந்தாட்டக் குழு முழுக்கால் சட்டையணிந்து கொண்டு விளையாடுவதினை அனுமதிக்க முடியாது என உலக பெண்கள் கால் பந்தாட்ட சங்கம் அறிவித்திருந்தது. ஆனால் உலக பளு தூக்கும் போட்டியில் சகோதரி குல்சூனுக்கு அனுமதி கிடைத்து விட்டால், ஈரான் பெண்கள் கால் பந்தாட்ட குழுவிற்கும் இன்னும் மற்ற விளையாட்டுப் போட்டிகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கலந்து கொள்ள எந்த தங்கு தடையும் இருக்காது.


விளையாட்டுப் போட்டிகளில் போதை, ஊக்க மருந்து சாப்பிட்டு அவமானப்பட்டு ஒலிம்பிக் போட்டியின் பதக்கங்களை கூட பறி கொடுக்கும் இந்தக் காலத்தில் மத கோட்பாடுகளுடன் ஹிஜாப் அணிந்து போட்டிகளில் பெண்கள் பங்கு பெறுவதின் மூலம் விளையாட்டுப் போட்டிகளில் ஒழுக்கங்களை கடைப் பிடித்து நல்ல உடல் நலத்தோடு வாழ வழி வகுக்க சகோதரி குல்சூன் முயற்சி வெற்றி பெற இறைவன் அருள் புரிய வேண்டும்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010