புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

தென் சென்னை மாவட்டம் SDPI சார்பில் மூன்றம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்

5 ஜூலை, 2011

 தென் சென்னை மாவட்டம் SDPI சார்பில் துவக்க விழா பொதுக்கூட்டம் அண்ணா நகர் M.M.D.A பகுதியில் நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்குதல், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ உதவித்தொகை வழங்குதல், மேலும் மாணவர்களுக்கு காமராஜர் மற்றும் காயிதே மில்லத் கல்வி விருது வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது.


பொதுக்கூட்டத்திற்கு அண்ணா நகர் தொகுதி தலைவர் P.M. ஜுனைத் தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட செயலாளர் S.R இஸ்மாயில், மாவட்ட துணைத்தலைவர் A.அகமது பாஷா, மாவட்ட பொருளாளர் A.ரிபாய் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதி தலைவர் K. சேக்முகைதீன், ஆயிரம் விளக்கு தொகுதி தலைவர் ஜுனைத் அன்சாரி, சைதை தொகுதி தலைவர் மஜீத் , M. அனீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணா நகர் தொகுதி துணைத்தலைவர் M. அப்துல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். தென் சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் A. புகாரி தொகுப்புரை வழங்கினார்.


அகில இந்திய மீனவர் சங்க தலைவர் G .ஆண்டன் கோமஸ், சுந்தராலயமுதியோர் இல்லத்தின் நிறுவனர் V.S.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். SDPI -ன் தமிழ் மாநில பொதுச்செயலாளர் B. அப்துல் ஹமீது மற்றும் தென்சென்னை மாவட்ட தலைவர் P.முகமது உசேன், R.K.நகர் தொகுதி செயலாளர் ரத்தினம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அண்ணா நகர் தொகுதி செயலாளர் நன்றியுரையாற்றினார். விழாவின் முத்தாய்ப்பாக கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென் சென்னை மாவட்ட செயலாளர் S.முகமது சாலிஹ் கொடியேற்றி வைத்தார்.தென்சென்னை மாவட்ட துணைத்தலைவர் A.அகமது பாஷா, தொழிலதிபர் S.சையது இப்ராஹிம் ஆகியோர் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கினர். தென் சென்னை மாவட்ட தலைவர் P.முகமது உசேன், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவ உதவியை வழங்கினார். M.M.D.A அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவிகளுக்கு காமராஜர் மற்றம் காயிதே மில்லத் கல்வி விருதை மாநில பொதுச் செயலாளர் B.அப்துல் ஹமீது வழங்கினார்

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010