புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

புதிய மாநில அலுவலகம் திறப்பு விழா

14 ஜூலை, 2011

பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலமையகம் சென்னை மண்ணடியில் 12-07-2011 அன்று மாலை 5.00 மணி அளவில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!


மாநிலத்தலைவர் சகோதரர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய சகோதரர் இஸ்மாயில் அவர்கள் உரையாற்றும்போது பாப்புலர் ஃப்ரண்ட் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருவதை சுட்டிக்காட்டினார். குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வழங்கும் உதவித்தொகையை உரிய மக்களுக்கு பெற்றுத்தருவதற்காக இயக்க உறுப்பினர்கள் அறும்பாடுபட்டு அரசு அலுவலகங்களுக்கு சென்று உரிய விண்ணப்பங்களை பெற்று மாவட்ட அலுவலகத்தில் வைத்து பொதுமக்களுக்கு பூர்த்தி செய்வது போன்ற எண்ணற்ற சேவைகளை செய்துள்ளனர் என்றும் இதன் மூலம் சராசரியாக 55 லட்சம் ரூபாய் உதவித்தொகையை இதன் மூலம் பெற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

பாப்புலர் ஃப்ரண்டின் அலுவலகங்கள் மக்கள் சேவைக்காகவே திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றும் இறுதி வரை சமுதாயத்திற்கு பிரயோஜனம் தரும் வகையில் செயல்படும் என்று உறுதி அளித்தார். நிகழ்ச்சியை சென்னை மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம் தொகுத்து வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக தேசிய செயற்குழு உறுப்பினர் யா முஹைதீன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

செய்தி: முத்து







7 விமர்சனங்கள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல பொருத்தமான இடத்தில் நோன்பு நெருங்கும் வேளையில் கலக்சன் சென்டர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமூகப் பணியில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதைத் தேடிக் கண்டுபிடித்துத்தான் தெரிய வேண்டியதுள்ளது.

இதை ஆதங்கமாகவோ, கருத்துரையாகவோ, விமர்சனமாகவோ எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், இதை நிச்சயமாக பிரசுரிப்பீர்களா...?

ஆளனுப்பி மிரட்டக் கூடாது என்பதற்காகவே அநாமதேயராக அனுப்ப வேண்டியதுள்ளது.

சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் சொன்னது…

நீங்கள் சொல்வதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. நாங்கள் சமூகப்பணியில் எங்கு இருக்கின்றோம் என்பதை தேடி கண்டுபிடிக்கதான் வேண்டும். காராணம் எங்களுக்கென்று தனிப்பட்ட மீடியாக்கள் இல்லை விடியல் வெள்ளி என்னும் பத்திரிக்கை தவிற. நாங்கள் செய்யும் சமூகப் பணிகள் எந்த தொலைக்காட்சியிலும் வருவதில்லை, நாளிதழ்களிலும் வருவதில்லை.

நாங்கள் செய்துள்ள எண்ணற்ற சமூகப்பணிகளில் சிலவற்றை என்னுடைய வலைப்பூவில் பதிவு செய்துள்ளேன். நீங்கள் அதை பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அதை படிக்கவோ பார்க்கவோ மாட்டேன் என்று இருந்தால். நீங்கள் செய்வது வீண் பிடிவாதமே ஆகும்.

http://harbour-popularfront.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D

http://harbour-popularfront.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

http://harbour-popularfront.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

http://harbour-popularfront.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

"கலெக்ஸென் செண்டர்" ஆமாம்! ரமழான் காலங்களில் நாங்கள் செய்யும் கலெக்ஸன் மூலமாகத்தான் எங்களுடைய இயக்க பணிகளை மேற்கொள்கின்றோம். நாங்கள் மட்டுமல்ல எல்லா இயக்கங்களும் அப்படித்தான்.

குறிப்பு: எல்லா கருத்துக்களும் தானாகவே பிரசுரிக்கும்படி தான் எனது வலைப்பூவில் வைத்துள்ளேன். ஆபாசமான வார்த்தைகள் ஏதாவது பிரசுரித்தால் அதை நீக்கி விடுவேன். தைரியமாக நீங்கள் உங்களது பெயரை வெளியிடலாம். தங்களது கருத்துக்கு மிக்க நன்றி!

பெயரில்லா சொன்னது…

muthu ahameed unnkalai pathi samuthayathu

Abu Faheem சொன்னது…

அன்புள்ள சகோதரர் பெயரில்லாவுக்கு....அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்...
தாங்கள் இங்கு பதிந்துள்ள கருத்து தங்களின் சிறுபிள்ளை தனத்தை காட்டுகிறது சகோதரரே பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகள் இன்று ஊறரிய நாடறிய ஏன் உலகமே அறிய செயல்பட்டுவருவது அனைவரும் அறிந்ததே அல்லது ஒரு சில பத்திரிக்கைகளைமட்டுமே வேத வாக்குகளாக நினைத்து கண்னைமூடிக்கொண்டு படித்துவரும் உங்களுக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் அந்தியாவின் செயல்பாடுகள் தெரியாமலிருப்பதில் வியப்பில்லை. தனது சொந்த பணத்தை போட்டு யாரும் சமுதாயப்பணிகள் செய்யமுடியாது அந்தளவிற்கு எங்கள் இயக்கத்தவர்கள் ஒன்றும் கோடீஸ்வரர்கள் கிடையாது சமுதாயத்திற்க்கு சேவைசெய்யவேண்டுமெனில் சமுதாயத்தின் பங்களிப்பு மிகவும் அவசியம் அதேநேரத்தில் எங்களுடைய உடல்உழைப்புகளையும் பொருளாதாரத்தையும் தவறாது கொடுத்துவருகிறோம் அது பொதுமக்களுக்கும் தெரியும் பூனை கண்னை மூடிக்கொன்டால் உலகமே இருண்டுவிட்டதாக நினைக்குமாம் அப்படி தாங்களும் நினைத்து இருந்துவடவேண்டாம் உங்களது சிந்தனையை விரிவாக்குங்கள் என்பதே இந்த சகோதரனின் வேண்டுகோள்.

பெயரில்லா சொன்னது…

சகோதரரே... இன்று தமிழகம் முழுவதும் முஸ்லிம் பெண்கள் மாற்று சமூகத்தாருடம் ஓடிப் போவது வாடிக்கையாக நிகழ்ந்துவருகிறதே... இதற்காக உங்கள் அமைப்பு என்ன செய்தது என்பதைக் கொஞ்சம் தெரிவிக்கலாமே...? இதை எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதாகத் தெரிகிறது. நீங்கள் உட்பட. சொந்த பணத்தைப் போட்டு செயல்பட்டால்தான் அல்லாஹ்வின் உதவி கிட்டும். ஊரான் பணத்தை வாங்கி வங்கியில் போட்டு சேமிப்பதால் இறையுதவு கிட்டா. உங்களை நெருக்கமாக இருந்து கண்காணித்துக்கொண்டுதான் உள்ளேன். தூரமாக உள்ளவர்கள்தான் உங்களைப் பற்றி வேறு விதமாக விமர்சிக்கிறார்கள். சமூகம் எதிர்பார்க்கும் எத்தனையோ நல்லறங்களைச் செய்யும் அமைப்பாக உங்கள் மாற வேண்டும் என்ற நன்னோக்கே இதைச் சொல்வதற்குக் காரணம். முறையான பயிற்றுவிப்பு உங்கள் அமைப்பில் இல்லாததே இந்தக் கோளாறுகளுக்குக் காரணம்.

சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் சொன்னது…

முதலில் எங்களுடைய சமூக சேவை எங்கே நடக்கிறது என்பதை தேடித்தான் பார்க்கவேண்டியுள்ளது என்று கூறீனீர்கள், நாங்கள் செய்து வருகின்ற சமூகப்பணிகளில் சிலவற்றை உங்களுக்கு சுட்டிக்காட்டினோம். தற்போது நீங்கள் குற்றம் சாட்டும் இன்னொரு விஷயம் முஸ்லிம் இளம் பெண்கள் மாற்று மத இளைஞனுடம் ஓடிப்போவது. இதில் எல்லாருமே வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சுமத்துகிறீர்கள் எங்களை உட்பட. சகோதரரே! உங்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன்.. ஒரு முஸ்லிம் பெண் இன்னொரு மாற்ற மத இளைஞனுடன் ஓடிப்போவதை பார்த்து எந்த ஒரு மானம் உள்ள முஸ்லிமும் வேடிக்கை பார்க்க மாட்டான். அதனை தடுப்பதற்காக தன்னாலான் எல்லா முயற்சிகளை மேற்கொள்வான். எங்களது பார்வைக்கு வந்த எத்தனையோ இதை போன்ற சம்ப்வங்களில் தலையிட்டு பெண்ணை அவளது பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளோம். அல்லாஹ் அறிவான். மேலும் எங்களது பெண்கள் அமைப்பான நேஷனல் விமண்ஸ் ஃப்ரண்டின் மூலமாக எத்தனையோ பெண்களுக்கு அவர்கள் வீட்டிற்குச் சென்று கவுன்ஸிலிங்க் கொடுத்துள்ளோம். மேலும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் லெட்டர் மூலம் தகவல் கொடுத்து ஏதாவது ஒரு ஜும்மா தினத்தில் மக்களை விழிப்புணர்வு படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பயான் செய்ய வேண்டு கோள் கொடுத்துள்ளோம். இன்னும் இது போன்ற சம்பவங்கள் நடக்கும் பட்சத்தில் நமக்கு தெரிய வந்தால் தடுப்பதற்கான எல்லா முயற்சிகளை மேற்கொள்கின்றோம். இருப்பினும் சில நேரங்களில் ஒரு சில பெண்களை மீட்க முடியாத சூழ் நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. காவல் நிலையத்தில் இருந்து கொண்டு நான் அவனோடு தான் செல்வேன் என்று உறுதியாக இருக்கும் பெண்களும் இருக்கின்றனர். சகோதரரே! இத்தைகைய பணிகளை பத்திரிக்கைகளிலோ அல்லது மேடை போட்டுக்கொண்டோ இன்னார் வீட்டு பெண் இவனோடு ஓடி போனாள்! நாங்கள் மீட்டுக்கொண்டு வந்தோம் என்று கூற முடியாதே!

எங்களை கண்காணித்து கொண்டு வருகிறீர்கள் என்று கூறுகிறீர்கள்! மிகவும் சந்தோஷம். ஆனால் என்ன தவறு செய்யப்போகிறார்கள் என்பதனை எதிர்பார்த்தவர்களாக கண்காணிக்காதீர்கள். நாங்களும் மனிதர்கள் தான் தவறை சுட்டிக்காட்ட உங்களுக்கு உரிமை உண்டு. நிச்சயம் தவறை திருத்திக்கொள்வோம்.

நன்றி! வஸ்ஸலாம்

பெயரில்லா சொன்னது…

உங்கள் நிதானமான பதிலுக்கு நன்றி

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010