புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

இ-மெயில் மூலமாக வரும் தாக்குதல்கள் - 2

25 ஆகஸ்ட், 2011


pearl: hai

i was expecting your mail...
i never harmed you before... y are you having hate thought about me?  

Vicky: oru madham yenga thondricho anga erukuradu than nalladu mathatha parapa kudadu... babar kaalathula pore kaithigala adichu koduma paduthi madham mathinaanga... apo hindus neraya adi vaanginaanga adhan epo neenga vaanguringa... india la eruka sakipputhanmai erukanum yellar kumdurathum kadavul nu. illa na ne arabia vuke poidu... yen peruku artham vivegam maanavanu artham thaizh per than...



pearl:






அப்பாடா? என்ன பதில் அனுப்பிவிடாமல் இருந்து விடுவீர்களோ என்று நினைத்தேன்... தங்களுடைய பதிலுக்கு நன்றி...

ஒரு மதம் எங்க தோன்றிச்சோ அங்க இருக்குறதுதான் நல்லதா? சரி நீங்க சொல்றபடியே வச்சுப்போம்....

இந்து மதம் இந்தியாவில் தோன்றியதுதான் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். இன்று இந்து மதத்தை பின்பற்றுகிறவர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். நேபாளம், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமேரிக்கா போன்ற நாடுகளிலும் இருக்கிறார்கள். அப்படியானால் உலகத்தில் மத்த நாடுகளில் உள்ள அனைத்து இந்துக்களையும் அந்தந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்கு துரத்திவிடலாமா?

புத்த மதம் தோன்றியது இந்தியாவில் தான். ஆனால் இன்று புத்தமதம் இந்தியாவிலேயே இல்லை. அதற்கு யார் காரணம் தெரியுமா? இந்த நாட்டிற்கு வந்தேரியாக வந்து நீங்கள் கூறியது போல இந்துக்கள் மத்தியில் வர்ணாசிரமக்கொள்கையை ஏற்படுத்தி கீழ் ஜாதி, மேல் ஜாதி, இவனைத்தொட்டாலே தீட்டு என்று ஏற்படுத்தினார்களே அந்த ஆரியர்கள் அவர்கள் தான் புத்த மதத்தை இந்தியாவிலிருந்து வேறோடு அழித்தார்கள். இன்று உலகில் உள்ள அனைத்து புத்த மத மக்களையும் இந்தியாவிற்குள் குடியேறிவிடலாமா?

சுவாமி விவேகானந்தர் அவர்கள் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அங்கு இந்து மதத்தின் பெறுமைகளை அமெரிக்க மக்களிடம் எடுதுக்கூறினாரே அது ஏன்?

மதம் என்பது ஒரு நம்பிக்கை. அது தனி மனித உரிமை, அதை தடுப்பதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் கூறும் அடுத்த குற்றச்சாட்டு பாபர் தன்னுடைய ஆட்சிகாலத்தில் இந்துமக்களை அடித்து மதம் மாற்றினார் என்று. 

இந்த பொய்யான வரலாறுகள் இன்று இந்துத்துவ வெறியர்களால் பரப்பட்டு வருவது தான் எதார்த்தம். முதலில் பாபர் இந்தியாவை ஆட்சி செய்ததையும், வெள்ளையர்கள் ஆட்சி செய்ததையும் ஒன்றாக பார்பதை நிறுத்துங்கள். ஒரு இந்து அரசனிற்கு உதவி புரிந்து டெல்லியை ஆண்ட முஸ்லிம் மன்னன் இபுராஹிம் லோடியை தோற்கடிப்பதற்காகவே பாபர் இந்தியா வந்தார், யாருக்காக ஒரு இந்து மன்னன் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில்.... இந்தியாவிற்குள் வந்த பாபர் இந்தியனாகவே மாறினாரே தவிற அந்நியனாக இருக்கவில்லை வெள்ளையர்களைப்போன்று.

முகலாய மன்னர் பாபர் தன் மகன் ஹுமாயுனுக்கு எழுதிய உயில் இன்று டெல்லி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் மகனே! பல்வேறு சமூக மக்கள் வாழும் இந்த நாட்டில் நீதி நிலை நாட்டு. இங்குள்ள இந்துக்கள் பசுக்களை தெய்வமாக கருதுகிறார்கள், ஆதலால் நீ பசு மாமிசம் உண்பதை நிறுத்திவிடு!"

இப்படியிருக்க பாபர் இந்துக்களை அடித்து துன்புறுத்தி மதம் மாற்றினார் என்பது வேடிக்கையாக இல்லையா? சகோதர் விவேக் அவர்களே மதம் மாற்றம் என்பது மனமாற்றம், அடித்து துன்புறுத்துவதினால் மனம் மாறாது.

எல்லாவரும் கும்பிடுறதும் கடவுள்னு நினைக்கனும்னு சொல்றீங்களே அப்படி நினைக்கிற நீங்க ஏன் எல்லா மனிதர்களும் ஒன்றுதான் என்று நினைப்பதில்லை?

பிராமணனை உயர்ந்த ஜாதி என்றும், சூட்திரணை தாழ்ந்த ஜாதி என்றும் பிரித்துப்பார்ப்பது ஏன்? இன்னும் ஏன் தமிழகத்தில் பல கிராமங்களில் இரட்டை குவலை முறை இருந்து வருகிறது? இவற்றிற்கெல்லாம் பதில் இருக்கிறதா?

நாங்கள் எங்கள் நம்பிக்கையதான் இறக்குமதி செய்துள்ளோமே தவிற நாங்கள் ஒன்று அந்நிய தேச மக்கள் அல்ல அரேபியா செல்வதற்கு.

நாங்கள்,

 பிறப்பால் - இந்தியர்கள்
மொழியால் - தமிழர்கள்
நம்பிக்கையால் - இஸ்லாமியர்கள்

விவேகமானவன் என்றால் விவேகமானவன் என்று பெயர் வைத்துக்கொள்ளவேண்டியதுதானே? "விவேக்" என்பது என்ன ஷார்ட் ஃபார்மா? சிரிப்பு வருகிறது....


தொடர்கிறது இன்ஷா அல்லாஹ்....

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010