புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!
பிரச்சாரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரச்சாரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கோவையில் நடைபெற்ற நீதிக்கான முழக்கம்


கோவை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? என்ற தலைப்பில் மாபெரும் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நேற்றைய தினம் (21.10.2012) அன்று கோவையில் மாபெரும் மண்டல மாநாடு நடைபெற்றது.

சிறுபான்மை சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் வலிமைக்காகவும் போராடக்கூடிய சமூக இயக்கங்கள் மீது அவதூறை பரப்பி அவப்பெயரை ஏற்படுத்தி அவர்களின் போராட்டங்களை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள சில ஃபாசிஸ சிந்தனை கொண்ட உளவுத்துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இதற்கு ஊடகங்களை மிகப்பெரும் ஆயுதங்களாக பயன்படுத்தி ஜனநாயக உரிமைக்காக போராடி வரும் இயக்கங்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு வருகிறது. இதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மீது விதிவிலக்கு இல்லாமல் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இதனை கண்டிக்கும் வகையிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாட்டினை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும் என்றடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? என்ற தலைப்பில் மாபெரும் பிரச்சாரம் அக்டோபர் 10 முதல் நவம்பர் 10 வரை நாடு முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மாபெரும் நிகழ்ச்சியாக சென்னை, கோவை மற்றும் மதுரை ம்ண்டல மாநாட்டினை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

"குறிவைக்கப்படும் முஸ்லிம் சமூகம்! நீதிக்கான முழக்கம்!" என்ற கோஷத்தை முன்வைத்து "மக்களை சந்திப்போம்! உண்மையை சொல்வோம்" என்ற அடிப்படையில் மாபெரும் மண்டல மாநாடு கோவையில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில், துணைத்தலைவர் முஹம்மது இஸ்மாயில், தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐயின் பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சிற்கு ஆண்கள் பெண்கள் என பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மற்றும் மதுரை மண்டல மாநாடுகள் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.








Ler Mais

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம்


சென்னை: சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த ஒரு மாத காலமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் நாடுமுழுவதும் நடைபெற்றுக்கொண்டிருந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இறுதி கட்டத்தை அடைந்தது.


தமிழகத்தில் கடந்த மாதம் கோவையில் வைத்து துவங்கப்பட்ட இப்பிரச்சாரம் நேற்று (14.09.2012) சென்னையில் நிறைவுபெற்றது. அப்பாவி சிறைவாசிகளின் விடுதலைக்காக போராட்டிக்கொண்டிருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இப்பிரச்சாரத்தை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்க்கும் விதமாக பொதுக்கூட்டங்கள், தெருமுனைப்பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் வாயிலாக மேற்கொண்டது.  சென்னையில் மட்டும் கிட்டதட்ட 30ற்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனைக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

நேற்றைய தினம் இப்பிரச்சாரத்தின் இறுதியாக மாபெரும் பொதுக்கூட்டம் மண்ணடி தம்புச்செட்டி தெருவில் நடைபெற்றது. இதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஷாஹித் வரவேற்புரை நிகழ்த்தினார்.


மாநில பொருளாளர் இபுராஹிம் மற்றும் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஷேக் முஹம்மது அன்சாரி, பொதுச்செயலாளர் ஏ. காலித் முஹம்மது மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

முஸ்லிம் சமூகத்தை வலிமைப்படுத்தவும், சமூகத்திற்கு எதிராக நடந்து வரும் அநியாயங்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னின்று போராடும் இதற்கு அனைவரும் தோள் கொடுக்க வேண்டும் என பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டார். சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோ. ரஃபீக் அவர்கள் பொதுக்கூட்டத்தின் தீர்மானங்களை வாசித்தார். சகோ முத்து அகமது நன்றியுரை நிகழ்த்த இக்கூட்டம் நிறைவுபெற்றது. 500ற்கும் மேற்பட்டவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



Ler Mais

மண்ணடியில் இன்று மாபெரும் பொதுக்கூட்டம்


சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை ஒரு மாத காலம் இந்தியா முழுவதும் "சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!" என்ற கோரிக்கையை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

இப்பிரச்சாரம் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. சென்னையில் 30ற்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனைக்கூட்டங்கள், வீதி பிரச்சாரங்கள், துண்டு பிரசுரம் விநியோகம், சுவரொட்டி பிரச்சாரம் என பல முறைகள் மூலமாக இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இப்பிரச்சாரத்தின் இறுதி கட்டமாக இன்று (14.09.2012) அன்று மாலை சரியாக 7:00 மணியளவில் மண்ணடி தம்புச்செட்டித்தெருவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம் தலைமையில் நடைபெற இருக்கும் இக்கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது, எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் மற்றும் பேராசிரியர் மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.
Ler Mais

மண்ணடி மூர் தெரு சந்திப்பில் தெருமுனைப்பிரச்சாரம்

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் நடைபெற்று வரும் சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை என்னும் பிரச்சாரம் மண்ணடி மூர் தெரு சந்திப்பில் கடந்த 10ஆம் தேதி இரவு 8 மணியளவில் நடைபெற்றது.

இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட ஊடக அதிகாரி சகோ முத்து அஹமது அவர்கள் தலைமை தாங்கி தலைமை உரை நிகழ்த்தினார். துறைமுகம் தொகுதி உறுப்பினர் சகோதரர் சாகுல் ஹமீது இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாவட்ட பேச்சாளர் சகோ முஹம்மது ரஃபீக் சிறப்புரையாற்றினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் துறைமுகம் தொகுதி செயற்குழு உறுப்பினர் ஹாஜி முஹைதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். துறைமுகம் தொகுதி உறுப்பினர் சகோ இபுராஹிம்ஷா நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி நிறைவுற்றது.




Ler Mais

மேலப்பாளையத்தில் பாப்புலர் ப்ரண்ட் நடத்திய மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம்

நெல்லை : நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் செப்டம்பர் 08 , 2012 அன்று இரவு 7 .15 மணி முதல் 11 .00 மணி வரை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக " சட்டப்படி பிணையில் விடு அப்பாவிகளை விடுதலை செய் " எனும் தலைப்பில் மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் நெல்லை மாவட்ட தலைவர் அன்வர் முகைதீன் அவர்கள் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார். அதனை தொடர்ந்து SDPI கட்சியின் நெல்லை மாவட்ட துணை தலைவர்களான நசீர் கான் மற்றும் சாகுல் ஹமீது உஸ்மானி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து NCHRO வின் தேசிய செயற்குழு உறுப்பினர் அட்வகேட்.தங்கசாமி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அவர் தனது சிறப்புரையில் " மிக குறைந்த சதவீதமுள்ள பார்ப்பனிய ஆதிக்கத்தை குறித்தும் அதை துரத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் " அழகுற எடுத்துரைத்தார்.


அடுத்ததாக கோரிக்கையுரையாற்றிய பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயற்குழு உறுப்பினர் பக்ருதீன் அவர்கள் " இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக சங்க்பரிவார பாசிசம் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் குறித்தும், அப்பாவி முஸ்லிம்கள் இந்தியா முழுவதிலுமுள்ள சிறைகளில் அனுபவித்துக் கொண்டிருக்ககூடிய வேதனைகள் குறித்தும், அதிகார வர்க்கம், ஆளும் அரசாங்கம், நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் செய்து கொண்டிருக்கக்கூடிய இரட்டை நிலைப்பாடுகள் குறித்து பல்வேறு உதாரணங்கள் மூலம் தனது கருத்தை அழகுற எழுச்சிப்பொங்க " எடுத்துரைத்தார்.


அதனை தொடர்ந்து உரை நிகழ்த்திய SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் அவர்கள் " மேலப்பாளையம் மாநகரம் முஸ்லிம்களின் உரிமைகளை மீட்டெடுக்க குரல் கொடுக்கும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் அரவணைத்து செல்லும் மாண்பு கொண்டது எனவும் பாப்புலர் ப்ரண்ட் கையிலெடுத்துள்ள இந்த தேசிய அளவிலான பிரசாரத்திற்கு SDPI கட்சி என்றும் துணை நிற்கும்" என்றார்.


இறுதியாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மேலப்பாளையம்  நகர தலைவர் அப்துல் லத்தீப் அவர்கள் கோரிக்கை தீர்மானம் வாசித்து நன்றியுரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் ஏர்வாடி கனி மற்றும் அவரது குழுவினர் சார்பாக கோரிக்கை பாடல் ஒன்று பாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு SDPI கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா, மாவட்ட செயலாளர் ஹயத் முகம்மது, பாளை தொகுதி தலைவர் அப்துல் ஹமீது, தொகுதி செயலாளர் நஜீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Ler Mais

துறைமுகம் தொகுதியில் தெருமுனைப்பிரச்சாரம்

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துரைமுகம் தொகுதி சார்பாக மண்ணடியில் "சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!" என்ற பிரச்சார தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் துறைமுகம் தொகுதி தலைவர் அப்துல் லஃத்தீஃப் தலைமை தாங்கினார். மாவட்ட பேச்சாளர் முஹம்மது ஷாஃபி சிறப்புரையாற்றினார்.



Ler Mais

சென்னை பெரியமேடு பகுதியில் நடந்த தெருமுனைக் கூட்டம்

அரசியல் கட்சிகளின் இலாபங்களுக்காக இந்தியா முழுவதும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத பழி சுமத்தப்பட்டு கைது செய்யப்படுவதும் அவர்களுக்கு ஜாமீன் கூட மறுக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றது. அதோடு அவர்கள் மீது யு.ஏ.பி.ஏ. (சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்) போன்ற காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

இப்படி கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை விடுவிக்ககோரி சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!! என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் பிரச்சாரம் செய்து வருகிறது.

இப்பிரச்சாரத்தில் துண்டு பிரசுரங்கள் வினியோகித்தல், கையேடுகள் வினியோகம், போஸ்டர் பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், தெருமுனைக்கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை பெரியமேடு பேரக்ஸ் ரோடு பகுதியில் 09.09.12 அன்று மாலை 7 மணி அளவில் தெருமுனைப்பிரச்சாரம் மாவட்டச் செயலாளர் உ. முஹம்மது ஷாஹித் தலைமையில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் O.M. பக்கீர் முஹம்மது வரவேற்புரை  நிகழ்த்தினார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் எழும்பூர் தொகுதி தலைவர் புரசை மீரான் வாழ்த்துரை வழங்கினார். இதில் பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட பேச்சாளர் மவ்லலி ரிஸ்வான் ஷா அவர்கள் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பெரியமேடு பகுதி தொழில் அதிபர் பாஷா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் எழும்பூர் தொகுதி  இணைச் செயலாளர் பெரியமேடு ஃபஹிம் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர் ஜக்கரியா நன்றியுரையாற்றினார்.
Ler Mais

இராயபுரத்தில் தெருமுனைக்கூட்டம்

சென்னை : பாப்புலர்  ப்ரண்ட் ஆப் இந்தியாவின் இராயபுரம் தொகுதி சார்பாக "சட்டப்படி பிணையில் விடு அப்பாவிகளை விடுதலை செய்" என்ற கோரிக்கையை முன்வைத்து தெருமுனைகூட்டம் லாலாகுண்டா மற்றும் காத்பாடா ஆகிய பகுதிகளில் நடைபெற்றது  இதில் பாப்புலர்  ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட பேச்சாளர்கள் ஜுனைத் அன்சாரி மற்றும் ரிச்வான்ஷா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.




Ler Mais

வியாசர்பாடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய தெருமுனை கூட்டம்

சட்டப்படி பிணையில் விடு நிரபராதிகளை விடுதலை செய் என்ற தலைப்பில் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனைத்து மானிலங்கலிலும்  ஒரு மாதக்காலம் பல்வெரு பிரச்சாரங்கள் செய்து வருகின்றன இதன் அடிப்படையில் சென்னை வியாசர்பாடி பகுதியின் புது நகர் 8வது தெருவிள் இன்ரு பிரச்சார தெருமுனை கூட்டம் சகோ.முஸ்தஃபா தலைமயில் நடைபெட்றது

 

இந்த நிகழ்ச்சியை சகோ.ரஃபீக் அறிமுக உரையாட்ரி துவக்கி வைத்தார் அவரை தொடர்ந்து சென்னை மாவட்ட செயர்க்குழு உருப்பினர் சகோ.ஜுனைது அன்சாரி அவர்கள் சிறப்புரை ஆட்ரினார்கள்



இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தஃவா மஸ்ஜித் கௌரவ தலைவர் P.M. அப்துல் காதர் மற்றும்  SDPI கட்சி யின் பெரம்பூர் தொகுதி தலைவர் சகோ.சீனி முஹம்மது அவர்கலும் கலந்து கொண்டனர்.

சகோ.அப்துர் ரஹ்மான் நன்றியுரை ஆற்ற நிகழ்ச்சி இனிதாய் நிரைஉற்றது


Ler Mais
 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010