சென்னை: ஆக. 27 பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, "சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா வின் (SDPI) தமிழ் மாநில தலைவர்,K.K.S.M.தெஹ்லான் பாகவி, கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனநாயக நெறிமுறைக்கு முரணான "தடா" சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சித்திரவதை மூலம் அவர்களிடமிருந்து பெறப்பட்ட, வாக்கு மூலங்களை சாட்சியமாக கொண்டு, வழங்கப்பட்டுள்ள இந்த மரண தண்டனையை, மனித நேயம் உள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழக சட்டமன்றத்தில், இந்த மரண தண்டனைக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் மூலம் இம்மரண தண்டனையை ரத்து செய்ய வாய்ப்புள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக அரசு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, 3 தமிழர்களின் உயிர்களையும் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என செய்தி வெளியிட்டுள்ளார்.

அதே சமயம் தமிழகத்தில் முகவரி இல்லாத கட்சியான பா.ஜ.கவின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறும்போது மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் பாரதிய ஜனதாவுக்கு உடன்பாடு கிடையாது எனக்கூறியுள்ளார். ஏனென்றால் பாராளுமன்ற தாக்குதலில் குற்றவாளியக்கப்பட்டு தூக்கு தண்டனை கைதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் அஃப்சல் குருவை தூக்கில் போட வேண்டுமாம். இதனால் நேரடியாக கூறாமால் குற்றவாளியாக்கப்பட்ட 3 தமிழர்களோடு அஃப்சல் குருவையும் தூக்கில் போட வேண்டும் என்பதே பா.ஜ.கவின் விருப்பம் என்பது இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
தமிழகம் முழுவது அம்மூவரையும் தூக்கில் போடக்கூடாது என்ற ரீதியில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்க பொன் ராதா கிருஷ்ணனின் இந்த பேட்டி தமிழர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக