புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

அஃப்சல் குருவின் நிலை என்ன?

2 செப்டம்பர், 2011

உமர் அப்துல்லாஹ்
ஜம்மு: ராஜிவ் கொலையாளிகள் 3 பேர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரும் தமிழக சட்டசபை தீர்மானம் போல, அப்சல்குருவின் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானம் கொண்டு வர ஜம்மு காஷ்மீரில் சுயேச்சை எம்.எல்.ஏ., ஒருவர் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.



காஷ்மீர் சுயேச்சை எம்.எல்.ஏ.,வும், மனித உரிமைக்கு குரல் கொடுப்பவருமான, ஷேக் அப்துல் ரசீத், சட்டசபை செயலரிடம் 2 தீர்மானங்கள் கொண்டு வரவேண்டும், என கடிதம் கொடுத்துள்ளர். இது குறித்து இவர் கூறுகையில்.,
அப்சல் குருவை தூக்கில் இருந்து, விடுவித்து மன்னிப்பு கோருவது, இது தொடர்பான விவாதம் நடத்த வேண்டும், என 2 தீர்மானம் கொண்டு வர கேட்டுக்கொண்டுள்ளேன். ‌


முதல்வர் உமர் அப்துல்லா, இதற்கு துணை நிற்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது இவ்வாறு ரசீத் கூறினார். மாநிலத்தில் உள்ள முக்கிய எதிர்கட்சியான, மக்கள் ஜனநாயக கட்சி செய்தி தொடர்பாளர், நயீம் அக்தர் கூறுகையில்; அப்சல் குருவின் தண்டனையை குறைக்க வேண்டும், என ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்து விட்டோம்.
இதுவே எங்கள் நிலை என்றார். 

அஃப்சல் குரு

இதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக சாயல்குடியில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ராஜிவ் கொலையாளிகளின் தூக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது,.... எதிர்க்கட்சியினர் எதுவும் கூறவில்லை.

பொன் ராதாகிருஷ்ணன்


அதேபோல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, அப்சல் குருவின் தண்டனையை குறைக்கக் கோரி, காஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் சும்மா இருப்பார்களா? என, உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியிருந்தார். உமர் அப்துல்லா இவ்வாறு கூறுவது, இந்தியாவின் ஜாதி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்று கூறியுள்ளார்.

ஆனால் அஃப்சல் குருவுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை படியுங்கள்:

\"குற்றவாளிக்கு எதிராக வேறு சாட்சியங்கள் எதுவும் இல்லை\".... எனினும், “மரண தண்டனை விதிக்கப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி திருப்தி அடையும்”.... எனவே அப்சல் குருவிற்கு தூக்கு உறுதி செய்யப்படுகிறது -சுப்ரீம் கோர்ட்


இச்சூழலில் பாஜகவின் தோழமை கட்சியும் பீகாரை ஆளும் கட்சியுமான ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாலர், சிவானந்த் திவாரி பாஜகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில் “ உமர் அப்துல்லா சொல்வது சரியே. காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சல் குருவை தூக்கிலிட கூடாது, என்று தீர்மானம் நிறைவேற்றினால், கடும் எதிர்ப்பு ஏற்படும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது” என்றார். மேலும் அவர் கூறுகையில், இது பாஜகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக கூறினார்.
பாஜக இதற்கு முன்பு பஞ்சாபை சேர்ந்த, தேவேந்தர் சிங் புல்லருக்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று, பாஜகவின் இன்னொரு கூட்டணி கட்சியான, சிரோமணி அகாலி தள் கூறிய போது ஏன் எதிர்க்கவில்லை?




அப்போது எதிர்க்காமல் அப்சல் குருவுக்கு மட்டும் எதிர்ப்பது பாரபட்சமானது. என பதிலடி கொடுத்துள்ளார்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010