மும்பை குண்டுவெடிப்பு நிகழ்ந்து அதன் சுவடுகள் ஆறாத நிலையில் மீண்டும் தலை நகரம் டெல்லியில் குண்டு வெடித்து 11 அப்பாவி மக்களின் உயிரை பறித்த சம்பவம் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தேசம் இன்றைய காலகட்டத்தில் எதிர்கொண்டு வருகின்ற ஒரு சவாலான பிரச்சனையாக இத்தகைய தீவிரவாத தாக்குதல்கள் அமைந்துள்ளது. எங்கு? எந்த நேரத்தில்? எந்த இடத்தில் குண்டு வெடிப்பு நிகழுமோ என்று அறியக்கூட முடியாத நிலையில் உளவுத்துறை அதிகாரிகளும், இந்திய அரசாங்கமும் திணறி வருகிறது. ஏன் இத்தகைய நிகழ்வுகள் இந்தியாவில் நிகழ்ந்து வருகிறது? இதற்கு காரணம் யார்? இத்தகையவர்களின் நோக்கம் என்ன? என்பதை அரசாங்கமோ அல்லது ஊடகங்களோ தெரிவிக்க வேண்டும். ஆனால் இவைகளை அவர்கள் செய்வது இல்லை.
மும்பையில் நடந்த குண்டுவெடிப்யு யாரால் நிகழ்த்தப்பட்டது என்று அறியப்படாத நிலையில் மீண்டும் இந்தியாவின் தலை நகரை பதற்றத்திற்குள்ளாக்கிய இந்த குண்டுவெடிப்பை யார் நிகழ்த்தி இருப்பார்கள்? ஒரு நியாயமான சிந்தனையின் அடிப்படையில் சில கருத்துக்களை வெளியிடுகிறேன்.
இந்தியாவில் நடைபெற்ற எண்ணற்ற குண்டுவெடிப்புகளில் இதுவும் ஒன்று என்ற கோணத்திலேயே விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் பரப்பரப்பாக செயல்படும் டெல்லி உயர்நீதிமன்றத்தின் வாயில் அருகில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்து 11 பேர் பலியானார்கள். இன்னும் எண்ணற்றோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
வழக்கம் போல் புதிதாக ஒரு இயக்கத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது. ஹர்கத்துல்-ஜிஹாத் என்ற தீவிரவாத அமைப்பு இந்த குண்டுவெடிப்பிற்கு பொறுப்பேற்றுள்ளது என்று செய்தி ஊடகங்கள் தெரிவித்து வருகிறது. நாங்கள் தான் இந்த தாக்குதலை நிகழ்த்தினோம் என்று மின்னஞ்சல் மூலம் அவர்களே தகவல் தெரிவித்துள்ளார்களாம். நவீன தொழில் நுட்பம் நிறைந்த இந்த காலகட்டத்தில் மின்னஞ்சலை ஆதாரமாக வைத்து இன்று உளவுத்துறையும் சரி மத்திய அரசும் விசாரணை நடத்த இருக்கின்றது என்றே கூறலாம். குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு முன்பாக அந்த இடத்தில் 27 வயது மதிக்கத்தக்க ஒருவரும் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் என சந்தேகம் படும்படியாக இரு நபர்கள் நின்று கொண்டிருந்தார்களாம். குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிறகு நேரில் பார்த்தவர்களை அழைத்து அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் அவ்விருவரின் புகைப்படத்தையும் வரைந்து தேடப்படும் குற்றவாளிகளாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
"அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்ற பழமொழிக்கு ஏற்ப குண்டுவெடிப்பை கண்டு உரைந்துபோன பொதுமக்களை அழைத்து விசாரணை செய்து யாரென்றே தெரியாத இரு நபரை புகைப்படம் ஆதாரம் கூட இல்லாமல் அவர்களின் படத்தை வரைந்து இவர்கள் தேடப்படும் குற்றவாளிகள் என்று வெளியிட்டுள்ளனர் காவல்துறையினர். முன் பின் தெரியாத ஒரு நபரை அரை மணி நேரமாக பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். பின்னர் அவர் இப்படி இருந்தார் வாய்வார்த்தையாக கூறி அதை ஒருவர் வரைகிறார் என்றால் எந்தளவிற்கு அந்த நபருடைய படம் உருவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் குற்றவாளிகளா இல்லையா? என்று கூட முடிவு செய்யப்படாத நிலையில் தேடப்படும் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.
இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போதே பத்திரிக்கைகளில் இன்னொரு செய்தி வெளியாகியது. அதாவது அரசின் முக்கிய அலுவலகங்களுக்கு மீண்டும் ஒரு மின்னஞ்சல் சென்றதாகவும், அதில் ஹர்கதுல் ஜிஹாத் அமைப்பிற்கும் இந்த குண்டுவெடிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இதை நாங்கள் தான் செய்தோம் என்றும், அஃஃப்சல் குருவை விடுதலை செய்யாவிட்டால் இந்தியாவில் இருக்கும் பல உயர்நீதிமன்றங்கள் முன்பு இதே போன்று குண்டுவெடிப்பு நிகழும் என்று எச்சரிக்கை விடுப்பதாக இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்தவர்கள் அனுப்பியுள்ளனராம்.
இதுவரை இத்தகைய அமைப்புகள் உண்மையிலேயே செயல்படுகிறார்களா என்பது கூட உறுதி செய்யப்படாத நிலையில் இமெயில் மூலம் வரும் தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு அரைகுறை செய்திகள் பரப்பப்பட்டு வருவதை காணலாம்.
யார் இதை செய்திருப்பார்கள்?
முன்னால் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யபட்ட மூன்று தமிழகர்களையும் தூக்கில் போடக்கூடாது என்ற கருத்து வலுத்துவருகிறது. அதே போல் தமிழ சட்டமன்றத்திலும் அவர்களுடை தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க தீர்மானம் எடுத்துள்ளது. உலகத்தில் பல்வெறு நாடுகள் தூக்கு தண்டனையை ரத்து செய்த நிலையில் இங்கும் அதே சட்டம் கொண்டு வரவேண்டும் என்ற அடிப்படையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதே சமயம் பாராளுமன்ற தாக்குதலில் குற்றம் சுமத்தப்பட்டு வேடிக்கையான தீர்ப்பின் மூலம் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட அஃப்சல் குருவின் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனுடைய விவாதம் இன்னும் கஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் விவாதிக்கப்படாத நிலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. மேலும் அஃப்சல் குருவை விடுவிக்க வேண்டும் என்ற மிரட்டலையும் குண்டு வைத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனராம். படிப்பறிவில்லாத பாமர மனிதனால் கூட இது உண்மையா? பொய்யா? என்பதை அறிந்துகொள்ளமுடியும்.
13 (கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்போதே உயரி பலி 13ஆக உயர்ந்தது ) அப்பாவி மக்களை குண்டு வைத்து கொன்று விட்டு ஒரு தூக்கு தண்டனை கைதியை விடுதலை செய்ய வேண்டும் என்று மிரட்டினால் அனைவருக்கும் கோபம் ஏற்பட்டு அந்த கைதியினை உடனே தூக்கில் போட வேண்டும் என்ற எண்ணம் தான் ஏற்படும். எனவே அஃப்சல் குருவை தூக்கில் போட வேண்டும் என்று யார் கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறார்களோ அவர்களே இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தி விட்டு பழியை வழக்கம் போல் இழித்தவாயாக இருக்கும் முஸ்லிம் சமூகத்தின் மீது போட்டுள்ளனர்.
ஆக டெல்லியில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி 13 அப்பாவி மக்களை கொன்றுகுவித்தது அஃப்சல் குரு என்ற ஒரு நபரை தூக்கில் போட வேண்டும் என்பதற்காகத்தான் என தெளிவாக தெரிகிறது. கண்டிப்பாக இத்தகைய செயலை ஒரு முஸ்லிம் செய்திருக்கவே முடியாது என்பது தான் உண்மை.
ஒரு குற்றம் நடைபெறுகிறது என்றால், அந்த குற்றத்தை செய்பவர்களை சரியாக அடையாளம் கண்டு கைது செய்யப்பட்டு தண்டிக்க்கப்பட்டால் தான் அதே குற்றம் மீண்டும் நிகழாமல் இருக்கும். அதை விடுத்து அப்பாவிகளை கைது செய்வதினால் எந்த பயனும் இருக்க போவதில்லை. தடா, பொடா போன்று சட்டங்கள் இயற்றுவதினால் எந்த பயனும் இல்லை. உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படாத வரை இத்தகை குண்டுவெடிப்புகளை தடுத்து நிறுத்திவிடமுடியாது என்பதே பெரும்பாலான மக்களின் கருத்து.
கட்டுரை : முத்து

1 விமர்சனங்கள்:
well say muthu.,
கருத்துரையிடுக