மங்களூர்: பாராளுமன்ற தாக்குதலில் குற்றவாளியாக்கப்பட்டு அநீதியான முறையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அஃப்சல் குருவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றினால் நீதித்துறையில் பயங்கரவாதம் ஊடுறுவிட்டதாக அர்த்தம் என கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.பாலன் தெரிவித்துள்ளார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக "கறுப்புச் சட்டங்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றி பாலன் மேற்கூறியவாறு தெரிவித்தார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக "கறுப்புச் சட்டங்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றி பாலன் மேற்கூறியவாறு தெரிவித்தார்.
அஃப்சல் குரு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டார், சமூக விரோத பேச்சுகளை பேசினார் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இருந்த போதிலும் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளார் அஃப்சல் குரு. தனக்காக நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு வழக்கறிஞரை நியமிப்பதற்குக்கூட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அரசு சார்பாக வாதாடிய அரசு வழக்கறிஞர் எதிர் தரப்பு வழக்கறிஞரிடம் எதிர் கேள்வி கூட கேட்டதில்லை. ஆனால் அஃப்சல் குருவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தடா சட்டமும் இத்தகையை தண்டனையைத்தான் நிர்ணயித்துள்ளது. ஆங்கிலேயர்களால் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை தடுப்பதற்காக ஏற்படுத்திய கடுமையான சட்டமான தடா சட்டம் இன்றும் நமது நாட்டில் இருந்துவருவதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சமூக நீதி என்ற தலைப்பில் பேசிய வி.டி இராஜசேகர் கூறும் போது, நமது நாட்டில் வெறும் 15% மட்டுமே இருக்கக்கூடிய உயர் ஜாதியினர் நம் நாட்டின் அனைத்து வளங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். சமூக நீதிக்காக உறுதியாக போராடிய ஒருவர் உண்டு என்றால் அது அம்பேத்கர் தான் என்று கூறினார்.
.
3 விமர்சனங்கள்:
Can we pusblish supreme court judgment regarding Afzal Guru's case in tamil. how it's possible without evidence (true/lie) justified?
சகோதர அபூ முஹம்மது அவர்களே!
நல்ல யோசனை அளித்தமைக்கு நன்றி. அஃப்சல் குருவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கான ஆங்கில நகல் தங்களிடம் இருந்தால் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ் மொழி பெயர்த்து வெளியிட தயாராக இருக்கிறோம்.
Dear Brother, You are not suppose to ask this kind of question as you are the news publisher (reporter). Anyway you can find the the judgement details in follows link "http://www.scribd.com/doc/6494032/Afzals-Supreme-Court-Judgement". I tried to read but it's really very difficult to understand for me. Please note that I fully agreed that we are not getting justice/security, etc. But I am not able to convinece my non muslim collegues regarding Afzal's case. Hope you understand. Please do not misunderstand. Salam- Abu Muhammadh
கருத்துரையிடுக