புதுடெல்லி: டிசம்பர் 21, பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளுக்குப் பின்னனியில் உள்ள சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் மீது நடந்து வரும் விசாரணையை முடக்கவே பா.ஜ.க உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை குறிவைத்து வருகின்றனர்.
நாட்டில் நடந்த பல குண்டு வெடிப்புகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் சுனில் ஜோஷியின் படுகொலை ஆகியவற்றின் சூத்திரதாரியான ஆர்.எஸ்.எஸ்ன் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் உட்பட சங்க்பரிவார் மீது நடத்தப்பட்டு வரும் விசாரணையின் வேகம் குறைந்து வருவதைப் பார்க்கும் போது பாரதிய ஜனதா செய்து வரும் சதித்திட்டம் வெற்றி பெற்று வருவதை நம்மால் உணர முடிகிறது.
நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளான மாலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர், சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு ஆகியவற்றின் பின்னனியில் இருப்பது ஆர்.எஸ்.எஸ்ன் மத்திய தலைமை என்பதை என்.ஐ.ஏ மற்றும் இன்ன பிற விசாரணைக்குழுக்கல் நிரூபித்தன.
ஒரு குழு திட்டமிட்டு குண்டு வெடிப்புகளை நடத்தியிருப்பதையும் ஆர்.எஸ்.எஸ்ன் தேசிய செயற்குழு உறுப்பினர் அந்தக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு செயல்பட்டதையும் பட்டவர்த்தனமாக கண்டுபிடித்த பின்பும் அவரை இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. அதே போன்று இன்னும் 16 வழக்குகளில் இவர்களுடைய தொடர்பு குறித்து விசாரணை குழுக்கள் விசாரிக்க வேண்டும். என்ற கோரிக்கையும் தற்போது கானல் நீராகி வருகின்றது.
ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவியேற்ற பின்புதான் பா.ஜ.க மற்றும் அதனின் சக அமைப்புகள் செய்து வந்த குண்டுவெடிப்பு மற்றும் தகிடுதத்தங்கள் வெளி உலகிற்கு தெரியவந்தது. மேலும் இந்துத்துவா செய்து வந்த குண்டு வெடிப்புகளை தைரியமாக பகிரங்கப் படுத்தியவரும் இவரே! இவற்றையெல்லாம் மனதிற்கொண்டுதான் திருடனுக்கு தேள் கொட்டியது போன்று பா.ஜ.கவினர் ப.சிதம்பரத்திற்கு எதிராக "சதி"களை அரங்கேற்றி வருகின்றனர்.
பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர் மேலும் குறிப்பிடும் போது ஊழலுக்கு எதிரானவர்கள், நேர்மையானவர் என்று போலி பிரச்சாரம் செய்து வரும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ன் மதவாத வன்முறை செயல் திட்டத்தை மனதிற்கொண்டு இவர்கள் மீது மதசார்பற்ற கட்சிகள் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக