புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்கிறது!

20 டிசம்பர், 2011



ஓ.பி.சி. (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) ஒதுக்கீட்டிற்குள் கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்ற மத்திய அரசின் செய்தியை கோழிக்கோட்டில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டம் வரவேற்றுள்ளது. மேலும், இந்த உள் ஒதுக்கீட்டின் மூலம் ஓ.பி.சி ஒதுக்கீட்டில் தற்போது நிலவி வரும் குறைபாடுகளை களைய முடியும் என்றாலும் முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைக்கும் இது ஒன்று மட்டுமே தீர்வாக  அமைந்து விடாது என்றும் அக்கூட்டம் சுட்டிக்காட்டியது.

நிலவில் உள்ள அரசாணைப்படி ஓ.பி.சி பிரிவினருக்கு அதாவது சில மாநிலங்களிலுள்ள ஒரு சில முஸ்லிம் பிரிவு உட்பட பல்வேறு ஓ.பி.சியினருக்கு 27% ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இதில் சில பிரிவினகளுக்கென்று தனி உள் ஒதுக்கீடு எதுவும் இல்லை. ஓ.பி.சியில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு இதனால் எந்தப்பயனும் இல்லை. ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் வரும் பெரும்பாலான இடங்கள் பிற்படுத்தப்பட்டவர்களில் உள்ள உயர் வகுப்பின்ருக்கே போய் சேருகின்றது.

ஆனால் இந்த பிரச்சனை நீண்ட காலத்திற்கு முன்பே தனியான உள் ஒதுக்கீட்டின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது. அதன் படி கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் செயல் திட்டத்தில் உள்ளதாக கூறப்படும் ஓ.பி.சியில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 8% ஒதுக்கீடும் அதில் 6% ஓ.பி.சி முஸ்லிம்களுக்கு என்பது போதுமானது இல்லை.

இந்த வகையில் நிலவில் உள்ள 50% ஓ.பி.சி இடஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 13.7% ஒதுக்கீடும் அதில் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் பரிந்துரை செய்தது போன்று முஸ்லிம்களுக்கு 10% ஒதுக்கீடும்  வழங்கப்படவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு வலியுறுத்துகிறது.

அதே வேளையில் இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஓ.பி.சி ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும், ஏனென்றால் சர்ச்சார் கமிட்டி தனது அறிக்கையில் இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களும் தற்போது இடஒதுக்கீட்டை அனுபவித்து வரும் அனைத்து பிரிவு இந்து ஓ.பி.சியினரை விட மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் தான் உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளது.

மற்றொரு தீர்மானத்தில் முல்லை பெரியார் அணை தொடர்பாக நிலவி வரும் பிரச்சனையை கருத்தில் கொண்டு மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் உடனடியாக தலையிட்டு இரு மாநிலத்திலும் அமைதியை ஏற்படுத்த வேண்டும். அதே போன்று இரு மாநில அரசியல் கட்சிகளும் உணர்ச்சிகளை தூண்டும் விதமான செயல்பாடுகளில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

மேலும் தமிழகத்தில் கூடங்குளம் அணுகூலை எதிர்ப்பில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு தனது ஆதரவை தெரிவித்த பாப்புலர் ஃப்ரண்ட் மக்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்பதையும் மத்திய அரசிற்கு தெரிவித்துக்கொள்வதாக கூறியது.

நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் டில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற "சமூக நீதி மாநாட்டில்" கலந்து கொண்ட மக்கள் வெள்ளம் மக்கள் அனுபவித்து வரும் அநீதி, உரிமை மீறல்கள் ஆகியவற்றின் அடையாளமாகவும், சமூக நீதிக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்ற உறுதியினையும் பார்க்க முடிந்தது என்று கோடிட்டுகாட்டியது செயற்குழு கூட்டம். மக்களின் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரும் 2012 பிப்ரவரி 10 முதல் 17 வரை "தேசிய பொது ஆரோக்கிய வாரத்தை" கடைபிடிக்க தீர்மானித்துள்ளது.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசியத்தலைவர் இ.எம் அப்துர்ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் கே/.எம்.ஷரீஃப் தீர்மானங்களை நிறைவேற்றினார். கூட்டத்தில் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மெளலானா உஸ்மான் பேக், பேராசிரியர் கோயா, முஹம்மது ஷஹாபுதீன், யா முஹைதீன், கே.பி.ஷரீஃப், ஹாமித் முஹம்மது, இல்யாஸ் தும்பே, கரமன அஷ்ரஃப் மெளலவி, ஓ.எம்.ஏ ஸலாம், மெளலானா கலீமுல்லாஹ் சித்தீகி, முஹம்மது ரோஷன், மற்றும் ஏ.எஸ். இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010