திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதி கடலோரக் கரையில் அமையப்பெற்றுள்ள கூடன்குளம் அனுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஜனநாயக ரீதியிலான தொடர் போராட்டங்களை கடந்த 2 மாதங்களூக்கு மேலாக நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள சமூக அமைப்பைச் சார்ந்தவர்களும், அரசியல் கட்சியினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அணு உலை எதிர்ப்பாளர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக, மத்திய அரசின் சார்பாக நாகர்கோவில் நூருல் இஸ்லாம் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் முத்து விநாயகம் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அதே போன்று மாநில அரசின் சார்பாக அமைக்கப்பட்ட மற்றொரு குழுவில் நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி போன்றோர் இடம் பெற்று இருந்தனர்.
31.01.2012, நேற்று மத்திய, மாநில குழுவினர் மற்றும் அணு உலை எதிர்ப்பு குழுவினர்க்கு இடையே 4வது கட்ட பேச்சுவார்த்தை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. அணு உலை எதிர்ப்பாளர்களில் பெரும்பாலோர் சிறுபான்மையினர் என்பதால் அணு உலைக்கு ஆதரவாக கலெக்டரிடம் மனு கொடுக்கப் போகின்றோம் என்ற பெயரில் அணு உலை எதிர்ப்பாளர்களை தாக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி இந்து முன்னனியினர் கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத வன்முறையை மட்டுமே நம்பி செயல்படக்கூடிய வன்முறை விரும்பிகளான இந்து முன்னனியினர் அங்கு வந்து அணு உலை எதிர்ப்பு குழுவினரை கலெக்டர் அலுவலகம் என்று கூட பாராமல், கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே வைத்து கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன் இத்தகைய ஜனநாயக விரோத சக்திகளின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதுடன் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவினருக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து அவர்களுடன் மீண்டும் பேச்சு வார்த்தையை சுமூகமான முறையில் நடத்த வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக