புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

"குஜராத்" பத்து ஆண்டுகளுக்கு முன்....

29 பிப்ரவரி, 2012

"27 பிப்ரவரி 2002"ஆம் நாள் துரதிஷ்டவசமான நாளாக குஜராத் மக்களுக்கு அமைந்தது. கோத்ரா இரயில் நிலையம் அருகில் சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலில் தீ விபத்து ஏற்பட்டு அயோத்தியிலிருந்து அஹமதாபாத் வந்து கொண்டிருந்த கரசேவகர்கள் 59 பேர்  உயிரிழந்தனர். எவ்வாறு இரயிலில் தீ விபத்து ஏற்பட்டது? எவ்வாறு அவர்கள் உயிரிழந்தார்கள் என்பது பற்றிய தெளிவான விஷயங்கள் இன்று வரை தெரியவில்லை. ஒரு தரப்பினர் இதை விபத்து தான் என்றும் வாதிட மறு தரப்பினரோ பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனத்தின் உதவியுடன் வேண்டுமென்றே எஸ்-6 பெட்டியின் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைத்து கொழுத்தப்பட்டது என்று கூறுகின்றனர்.
அப்போது இரயில்வே துறை மந்திரியாக இருந்த லல்லு பிரசாத் யாதவ் இது தொடர்பாக முழு விசாரணையை மேற்கொள்வதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பானர்ஜியை நியமித்தார். அவரும் இது தொடர்பாக முழு விசாரணையை மேற்கொண்டு இது விபத்து தான் என்றும் யாரும் திட்டமிட்டு வெளியிலிருந்து பெட்ரோல் ஊற்று தீ வைத்ததற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என்று திட்டவட்டமாக தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார், எனினும் இது தொடர்பான முழு அறிக்கையும் மர்மமாகவே உள்ளது, காரணம் இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஹுஸைன் உமர் செசன்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சரியான சாட்சிகள் இல்லை என்று கூறு அவரை சமீபத்தில் விடுதலை செய்தனர். அதே சமயம் 31 நபர்களை குற்றவாளிகள் என்று தீர்பளித்து ஆயுள் தண்டனை வழங்கி 63 நபர்களை குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்தது.

கலவரத்தில் ஈடுபடும் ஃபாசிஸ பயங்கரவாதிகள்

 இந்த துரதிஷ்டவசமான சம்பவம் நடைபெற்று அடுத்த 24 மணி நேரத்திற்குள் எவருமே எதிர்பார்த்திராத அளவிற்கு மிகப்பெரும் இனப்படுகொலை அரங்கேறியது. 28 ஆம் தேதி அஹமதபாத்தில் மட்டும் 200ருக்கும் அதிகமான அப்பாவி மக்கள் கலவரக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டனர். கலவரத்தின் முதல் நாள் அன்று குல்பர்கில் 63 மக்களும், நரோடாபாட்டியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். வடக்கு குஜராத் மற்றும் மத்திய குஜராத் மாவட்டங்களில் கலவரங்கள் வேகமாக பரவியது. அதேசமயம் தென் குஜராத் மாவட்டங்கள் கலவரத்தால் அவ்வளவாக பாதிக்கவில்லை.


இது ஒன்றும் எதேர்ச்சையாக நடைபெற்ற கலவரமாக தெரியவில்லை, மாறாக நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரம் என்பது பின்னரே தெரியவந்தது. கலவர நேரத்தில் காவல்துறை மூத்த அதிகாரிகளாக பணியாற்றிக்கொண்டிருந்தவர்கள் தற்போதும் அன்று நடந்த விஷயங்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் உளவுத்துறை அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமார் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோரின் வாக்குமூலம் படி 27 பிப்ரவரி 2002 அன்று குஜராத் முதலைமைச்சர் நரேந்திர மோடி காவல்துறை அதிகாரிகளை அழைத்து ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் கலவரத்தில் ஈடுபடும் இந்துக்களை தடுக்க வேண்டாம் என்றும் முஸ்லிம்களுக்கெதிராக அவர்களது கோபத்தை அவர்கள் வெளிப்படுத்த அனுமதியளிக்க வேண்டுமென்றும் கட்டளையிட்டிருக்கிறார்.

ஆனால் இதனை நரேந்திர மோடி மறுத்து வருகிறார். குல்பர்கில் முன்னால் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃபரி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் இச்சம்பவத்தை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுத்துறை அதிகாரி ராகவனும் இத்தகைய கூட்டம் நரேந்திர மோடியால் நடத்தபடவில்லை என்று கூறுகிறார்.

எதுவாகினும் கலவரம் அதிகமாகிக்கொண்டே போனதோடு மட்டுமல்லாமல் மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டதோடு கலவரக்காரர்களுக்கே உதவியும் செய்திருக்கின்றனர். இந்தியா சந்தித்த மாபெரும் இனப்படுகொலைகளில் ஒன்றுதான் குஜராத்தில் 2002ல் நடைபெற்ற இனக்கலவரம். 3 மாதங்களுக்கு நீடித்த இந்த கலவரத்தில் 2000ற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பலஹீனமான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அநியாயம் செய்யப்படும்போது, அந்த அநியாயக்காரர்களை எதிர்த்து அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஆனால் பாதிக்கப்பட்ட அந்த மக்களோ, எங்கள் இறைவா! அநியாயக்காரர்கள் வாழ்கின்ற இந்த ஊரை விட்டு எங்களை அப்புறப்படுத்துவாயாக்! மேலும் உன் புறத்திலிருந்து எங்களுக்கு ஓர் உதவியாளனையும் அனுப்பி வைப்பாயாக! என்று பிரார்தனை செய்கின்றார்கள். (அல்-குர்ஆன்)

தனிப்பட்ட விசாரணைக்குழுவால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் மக்கள் நீதிமன்றம் இதனை விசாரிப்பதற்கும் ஓய்வு பெற்ற இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தது. நீதிபதி கிருஷ்ண ஐயர், பி.பி. சவந்த மற்று ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் ஹோஸ்பட் ஆகியவர்கள் கூறும்போது குஜராத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு முக்கிய காரணம் அம்மாநில முதலைமைச்சரான நரேந்திர மோடியும் அவரது அரசும் தான் என திட்டவட்டமாக அறிவித்தனர். அதே போன்று தெஹல்கா பத்திரிக்கையும் இதுதொடர்பாக விசாரணையில் இறங்கி கலவரக்காரர்களின் வாக்குமூலங்களை ரகசியமாக வீடியோ பதிவு செய்தனர். அவர்கள் அனைவரும் கூறும்போது நரேந்திர மோடிதான் தங்களுக்கு உறுதுணையாக இருந்தார் எனக்கூறினர்.


குஜராத் கலவரம் மதச்சார்பற்று விளங்கும் இந்தியாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரும் கலங்கமாகும். எந்த கலவரமாக இருந்தாலும் சரி அது சிறியதோ, பெரியதோ அதனை தடுப்பதற்கான முயற்ச்சிகளில் தான் அரசு கவனம் செலுத்தவேண்டுமே தவிர அரசாங்கத்தின் துணையோடு எந்தக் கலவரமும் நடக்கக்கூடாது. ஆனால் குஜராத்தை பொறுத்தவரை அரசின் உதவியோடு கலவரக்காரர்கள் இனப்படுகொலைகளை அரங்கேற்றியுள்ளனர். இந்த மகாபாதக செயலை கண்டிக்காத நரேந்திர மோடி ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்று கூறி கலவரத்தை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டார். கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது முஸ்லிம்கள் தான் என்றும் அதற்கு பழி தீர்த்துக்கொள்வதற்காகத்தான் இந்துக்கள் முஸ்லிம்களை கொலை செய்தனர் என்று வெளிப்படையாகவே கூறினார்.
கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளே எந்த விசாரணைக்கும் உத்தரவிடாமல் இதனை செய்தது முஸ்லிம்கள் தான் என்று பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தார் நரேந்திர மோடி. பின்னர் பா.ஜ.கவும் விஹெச்பியும் மறுநாள் பிப்ரவரி 28 அன்று பந்திற்கு அழைப்பு விடுத்தது. அதனை தொடர்ந்து கலவரத்தை மூட்டுவதற்காகவும், இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக கோபப்படுத்துவதற்கும் தீ விபத்தில் உயிரிழந்த கரசேவகர்களின் உடல்கள் தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.






கலவரத்திற்கு பின் நடைபெற்ற குஜராத் தேர்தலின் போது நரேந்திர மோடியே மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத்தின் வரலாற்றை பார்க்கும் போது எப்போதெல்லாம் இனக்கலவரம் நடைபெறுகிறதோ அதன் பிறகு நடத்தப்படும் தேர்தலில் பா.ஜ.கவே வெற்றி பெற்று வருகின்றனர்.

இவை அனைத்தையும் பார்க்கும்போது கலவரம் எதற்காக யாரால் நடத்தப்பட்டது என்பது தெளிவாக புலப்படுகிறது. 2002ஆம் ஆண்டுக்கு முன் குஜராத்தில் ஜில்லா தேர்தல் முதற்கொண்டு எல்லா தேர்தல்களிலும் பா.ஜ.க தோல்வியடைந்தது. இப்படியே சென்றால் சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க தோல்வியை தழுவும் அபாயம் ஏற்பட்டது. எனவே இந்துக்களின் வாக்குகளை ஒருமைப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற இயலும் என்ற நிலை உருவானது. அதுநாள் பா.ஜ.கவின் முதலைமைச்சராக இருந்த பட்டேல் காலத்தில் பா.ஜ.கவிற்கு ஏற்பட்ட சரிவை சீர்செய்ய இந்துத்துவ சிந்தனை கொண்ட ஒருவரை முன்னிறுத்த முடிவு செய்தது பா.ஜ.க. அவ்வாறு தான் நரேந்திர மோடி தனது அரசியல் களத்தில் இனம் காணப்பட்டார். முதலமைச்சர் ஆனதோடு மட்டுமல்லாமல் இந்தியாவிலே தனி முத்திரை பதிக்கக்கூடிய இந்துத்துவ தலைவர் என்ற ரீதியில் பிரபலமடைந்தார். ஆனால் காலம் மாறி வரும் சூழலில் நரேந்திர மோடிக்கு எதிராக முக்கிய அரசாங்க ஊழியர்கள் இன்று போர்கொடி தூக்கி வருகின்றனர்.


குஜராத் கலவரம் மூலமாக கிடைத்த பாடம்


சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மற்ற கலவரங்களுக்கும் குஜராத் கலவரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கூற விரும்புகிறேன். குஜராத் கலவரம் மூலம் நமக்கு கிடைத்த பாடம் என்ன? குஜராத்தை போன்று இனியும் நடக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?


ஜபல்பூர் கலவரம் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற மற்ற கலவரங்களுக்கும் குஜராத் கலவரத்திற்கு நிறை வித்தியாசம் உண்டு. குஜராத்தில் நடைபெற்றது வகுப்புவாத கலவரமல்ல மாறாக திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை. இரு மதத்தைச்சார்ந்தவர்களுக்கு மத்தியில் நடைபெற்ற கலவரம் அல்ல, மாறாக நன்கு திட்டமிடப்பட்டு அரசு அதிகாரிகளின் உதவியோடு பெரும்பான்மை சமூக மக்களின் சில விரோதிகளால் நடத்தபட்ட தாக்குதலாகும். சில அமைச்சர்கள் கூட காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டு ஆணை பிறப்பித்தாகவும் கூறப்படுகிறது. இது போன்ற செயல்கள் இதற்கு முன்பு நடந்ததே இல்லை.

அரசு இயந்திரங்கள் கலவரத்தின் போதுமட்டுமல்லாமல், கலவரத்திற்கு பின்பும் ஒருதலைபட்சமாகவே நடந்துள்ளனர். அறை மனதுடனேயே நிவாரணம் முகாம்களுக்கு சென்று நிவாரணப்பணியை மேற்கொண்டனர். கலவரம் நடைபெற்று 10 வருடங்கள் ஆகியும் இன்னும் எத்தனையோ முஸ்லிம்கள் தங்களுடைய சொந்த கிராமத்திற்கும் வீட்டிற்கும் செல்ல முடியாமல் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணப்பணிகள் தொடர்பாக நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியபோது, பிள்ளைகளை பெற்றுக்கொள்ளும் தொழிற்ச்சாலைகளுக்கு (முஸ்லிம் பெண்கள்) பின்னால் செல்ல முடியாது என்று கொச்சைப்படுத்தி பதிலளித்தார். கலவரத்தின் போது கர்ப்பிணியாக உயிர் பிழைத்த சில முஸ்லிம் பெண்கள் நிவாரணம் முகாம்களில் குழந்தைகளை பெற்றனர். இதனை விமர்சித்து இவ்வாறு நரேந்திர மோடி மேற்கூறியவாறு கூறியுள்ளார்.


கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்கு விஷயத்திலும் ஈவு இரக்கமில்லாத செயலகளில் ஈடுபட்டது நரேந்திர மோடி அரசு. வீடுகளையும் கடைகளையும் முழுவதுமாக இழந்து தவித்த முஸ்லிம்களுக்கு ரூபாய் 500/- குறைவாகவே நிவாரணத்தொகைகளை வழங்கியுள்ளனர். நிவாரணத்தொகையை பெற மறுப்பவர்களை பொய் வழக்கு போடுவோம் என்று மிரட்டி முழு பணமும் பெற்றுக்கொண்டதாக வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கியிருக்கின்றனர். தற்போது இது தொடர்பாக மோடி அரசுக்கு உயர் நீதிமன்றம் இடிக்கப்பட்ட வணக்கஸ்தலங்களுக்கு உடனடியாக நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது.




முறையான ஆதாரங்கள் இல்லை என்று கூறி 300ற்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி அவை அனைத்து மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக பெஸ்ட் பேக்கரி வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அரசு தரப்பில் ஏற்படுத்தப்பட்ட வழக்கறிஞர்கள் அனைவருமே வி.ஹெச்.பி இயக்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். சாட்சிகள் அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் சாட்சி சொல்வதற்கே அஞ்சினார்கள்.

குஜராத் கலவரத்திற்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணைக்குழுவை ஏற்படுத்தியது. குல்பர்கில் 63 நபர்கள் கொல்லப்பட்ட வழக்கிற்காகவும், முன்னால் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃபரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் விசாரணைக்காக சிறப்பு விசாரணைக்குழு களம் இறக்கப்பட்டது. 1992-93ல் நடைபெற்ற மும்பை கலவரத்தின் போது கூட விசாரணைகள் இந்த அளவிற்கு தீவிரப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுவரை நடந்த கலவரங்களில் அது முடிந்து சில மாதங்களிலேயே மக்கள் தங்களது சொந்த இருப்பிடங்களுக்கு சென்றுவிடுவர் ஆனால் குஜராத் கலவரம் முடிந்து 10 வருடங்கள் ஆகியும் இன்னும் நிவாரண முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய குளறுபடிகளை வைத்துக்கொண்டு குஜராத் ஒளிர்கிறது என்றும் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் குஜராத் என்றும் சிறந்த முதலமைச்சர் நரேந்திர மோடி என்று கூறுவதும் வேடிக்கையாக இருக்கிறது.


குஜராத் கலவரம் மூலமாக என்ன பாடம் படித்துக்கொண்டோம்? ஃபாசிஸ சங்கப்பரிவார கும்பல்கள் மதத்தை பயன்படுத்தி தங்களது கட்சியான பா.ஜ.கவை வெற்றி பெற வைக்கின்றனர். மதச்சார்பற்ற சக்திகளை ஒன்று திராட்டி இந்துத்துவாவிற்கு எதிராக போராட வேண்டும். பா.ஜ.கவை மட்டுமே குற்றம் சுமத்துவதற்கு இல்லை, இதற்கு காங்கிரஸ் கட்சியும் உடந்தை தான். பா.ஜ.க தீவிர இந்துத்துவ கொள்கை கொண்டது என்றால் காங்கிரஸ் மிதமான‌ இந்துத்துவா கொள்கை கொண்டது என்றே கூறலாம். இந்துத்துவ ஃபாசிஸத்திற்கு எதிராக போராடக்கூடிய பணியை நாம் ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக எத்தகைய தியாகத்தினையும் செய்வதற்கு மக்கள் தயாராக வேண்டும்.


பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் மதச்சார்பின்மை என்பது பலவீனமாக வருகிறது. மத்திய பிரதேசத்தில் இந்துக்களின் வழிபாட்டு முறையான சூரிய நம்ஸ்காரம் என்பது எல்லா பள்ளி மாணவ மாணவிகளிடத்தில் திணிக்கப்படுகிறது. இந்துத்துவாவின் அபாய கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். இந்தியாவில் இருக்கக்கூடிய கல்வி முறை அனைத்தும் மதச்சார்பற்றதாக மாற்றப்படவேண்டும். இனவாதம் என்கிற போர்வையில் பரவிவரும் ஃபாசிஸம் இந்த தேசத்திற்கே ஆபத்தானதாகும்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010