கடந்த ஞாயிற்றுகிழமை அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை பற்றிய அவதூறு செய்திகளை தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் நாடுமுழுவதும் தனது பதிப்பில் வெளியிட்டுள்ளது. அதில் சமீபத்தில் இஸ்ரேலிய கார் எரிக்கப்பட்ட விவகாரத்தில் பாப்புலர் ஃப்ரண்டிற்கு தொடர்பு இருப்பதாகவும், இதனால் உளவுத்துறையினர் இது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருவதாகவும் இரண்டு பக்கத்திற்கு கதை அளந்துள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்தும் அப்பத்திரிக்கையை கண்டிக்கும் விதமாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுகிழமை தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை "அடிப்படைவாதிகளால் அச்சம்" என்ற தலைப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய அவதூறு செய்தியை வெளியிட்டது. இதனை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் வெளியிட்டுள்ள பதில் கடிதத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பற்றி வெளியிடப்பட்டுள்ள செய்திகளை அனைத்தும் ஆதாரமற்றது எனவும் முழுக்க முழுக்க தவறானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
"லவ் ஜிஹாத்" என்ற போலியான பிரச்சாரத்தை சங்கப்பரிவாரங்கள் மேற்கொண்டது. இது முழுக்க முழுக்க பொய் பிரச்சாரம் என கேரள உயர் நீதிமன்றமே தீர்பளித்த பிறகும் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் தொடர்ந்து "லவ் ஜிஹாத்" என்ற ஒரு செயல் நடைபெற்றுவருவதாகவும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தான் இதனை செயல்படுத்தி வருவதாகவும் செய்தி வெளியிட்டிருக்கிறது. இன்னும் எத்தனையோ அவதூறுகள் கூறப்பட்டிருந்து ஒவ்வொன்றிற்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை காரணம் அதனை படிக்கும் மக்களுக்கு அது பொய் என்று நன்றாகவே விளங்கும். எனவே ஒரு இயக்கத்தை பற்றிய செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு அது உண்மைதானா என்றும் ஆதாரமானதுதானா என்று விசாரித்த பின்பு செய்திகளை வெளியிடவேண்டும். எனவே இது தொடர்பாக உங்களது பதிலை தரவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக கே.எம். ஷரீஃப் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
"மிகவும் வெறுக்கத்தக்க பொய்கள் எங்கள் மீது கூறப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்தியாவில் தலை சிறந்து விளங்கும் பத்திரிக்கைகள் கூட பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்களை தொடர்பு கொண்டு இது பற்றிய கருத்துக்களை கேட்காமல் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத அவதூறு செய்திகளை பரப்பி வருவது ஆச்சரியமளிப்பதாக இருக்கின்றது."
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஓர் புதிய சமூக நல இயக்கமாக செயல்பட்டு வருகிறது. தேசத்திற்கு எதிராக செயல்படக்கூடிய அனைத்து சக்திகளையும் வன்மையாக கண்டிக்கின்றோம். இஸ்ரேலிய தூதரின் கார் தாக்கப்பட்ட விவகாரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு தொடர்பு இருக்கிறது என்றும் இதனால் உளவுத்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தீவிரவமாக கண்காணித்து வருவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில் இவ்வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் எவரும் இத்தாக்குதலில் பாப்புலர் ஃப்ரண்டிற்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் கூட தெரிவிக்கவில்லை. மேலும் இது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்டின் தலைர்கள் அல்லது உறுப்பினர்கள் என்று இதுவரை யாரையுமே விசாரணை கூட செய்யப்படாத நிலையில் ஒரு சில பத்திரிக்கைகள் பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்பாக அபாண்டமான பழியை சுமத்தி வருகிறது.
இஸ்ரெலுடனான உறவை கடுமையாக கண்டித்து தீர்மானம் ஒன்றை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுக்குழு நிறைவேற்றிய ஒரே காரணத்திற்காக இஸ்ரேலிய தூதரின் கார் தாக்கப்பட்ட சம்பவத்தில் பாப்புலர் ஃப்ரண்டை தொடர்பு படுத்துவதற்கான சூழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது. இதனை கேட்கும் இஸ்ரேலியர்கள் கூட இப்பத்திரிக்கையின் இந்த செயலை கேட்டு சிரிக்கக்கூடும். பாப்புலர் ஃப்ரண்ட் மட்டுமல்லாது இன்னும் எத்தனையோ இயக்கங்கள், அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் மத்திய அரசின் இஸ்ரேலுடனான உறவை கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறது.
"லவ் ஜிஹாத்" என்ற போலியான பிரச்சாரத்தை சங்கப்பரிவாரங்கள் மேற்கொண்டது. இது முழுக்க முழுக்க பொய் பிரச்சாரம் என கேரள உயர் நீதிமன்றமே தீர்பளித்த பிறகும் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் தொடர்ந்து "லவ் ஜிஹாத்" என்ற ஒரு செயல் நடைபெற்றுவருவதாகவும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தான் இதனை செயல்படுத்தி வருவதாகவும் செய்தி வெளியிட்டிருக்கிறது. இன்னும் எத்தனையோ அவதூறுகள் கூறப்பட்டிருந்து ஒவ்வொன்றிற்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை காரணம் அதனை படிக்கும் மக்களுக்கு அது பொய் என்று நன்றாகவே விளங்கும். எனவே ஒரு இயக்கத்தை பற்றிய செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு அது உண்மைதானா என்றும் ஆதாரமானதுதானா என்று விசாரித்த பின்பு செய்திகளை வெளியிடவேண்டும். எனவே இது தொடர்பாக உங்களது பதிலை தரவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக கே.எம். ஷரீஃப் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
1 விமர்சனங்கள்:
பேன்னர் ஒரு பிரச்சினையா ? இதே போன்ற ஒரு மன நிலையில் நாம் உருவாக்கப்பட்டுள்ளது பரிதாபத்திற்குரியது . அழைப்பு பணி செய்வது அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் இருந்தால் போதும் . அல்லா நமக்கு நிரம்ப கூலி தருவான் . நீ பெரிய முஸ்லிமா அல்லது நான் பெரிய முஸ்லிமா என்று காட்டுவதற்காக இருந்தால் விளம்பரத்திற்காக இருந்தால், அது நமக்கு நன்மையை தராது , நம்முடைய முடிவு அல்லாஹ்விடம் தான் உள்ளது . உலகத்தில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். சாதிக்க வேண்டிய துறைகளோ ஏராளம் உள்ளது . நம்முடைய வளங்களோ மிக குறைவு . இந்த குறைவான மனித வளத்தையும் நேரத்தையும் மிக சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் நம்முடைய முன்னேற்றத்தில் தான் கவனம் செலுத்தவேண்டும் . அனைவருடனும் நன்மையான விசயத்தில் இணங்கி வாழ்வோம் . குறைகூறி திரிவதில் நமக்கு உடன்பாடு இல்லை.
http://popularfrontindia.com/pp/story/activists-intellectuals-writers-condemn-smear-campaign
கருத்துரையிடுக