புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக அவதூறுப் பிரச்சாரம்! பலரும் இதற்கு கண்டனம்!

8 மார்ச், 2012

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக மீடியாவின் ஒரு பகுதியினர் செய்து வரும் அவதூறுப் பிரச்சாரத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது வலதுசாரி மதவாத இயக்கங்கள் வேண்டுமென்றே திட்டமிட்ட சதிச் செயல்களின் மூலம் பரப்பி வரும் விஷக் கருத்துக்கள் என்று தன்னுடைய அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பயோனியர் என்கின்ற ஆங்கில தினசரிதான் இந்தப் போலிப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தது. டில்லி சாணக்கியபுரியில் நடந்த குண்டுவெடிப்பில் இஸ்ரேலிய தூதரக அதிகாரி காயமடைந்தார்.


இந்த குண்டுவெடிப்பில் பாப்புலர் ஃப்ரண்டின் பங்களிப்பு இருக்கின்றதா என விசாரணை அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும், சமீபத்தில் கேரளாவில் நடந்த பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுக்குழுவில்  இந்திய இஸ்ரேலிய உறவை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்டா நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் இதன் பின்னனி எனவும் எழுதியது பயோனியர்.

பயோனியர் சங்கப்பரிவாரத்தின் அறிவிக்கப்படாத‌ பத்திரிக்கை என்பதை அனைவரும் அறிவர். பின்னர் அதே கதை சில சிறிய மாற்றங்களுடன் நியு சன்டே எக்ஸ்பிரஸ், டைனி ஜாக்ரன், நவ் பாரத் டைம்ஸ், இன்கிலாப், டெக்கான் கிரோனிக்கல் மற்றும் சி.என்.என், ஐபிஎன் ஆகிய மீடியாக்களில் வெளிவந்ததன் மூலம் யாரோ சிலர் டெல்லியில் இருந்து பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக வேலை செய்து கொண்டும் அப்பாவி வாசகர்கள் பாப்புலர் ஃப்ரண்டை சந்தேக கண் கொண்டு பார்க்கவும் சதி செய்து வருகின்றனர்.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் மேலும் தெரிவிக்கையில் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை சக்திப்படுத்தும் பாதையில் வேண்டுமென்றே திட்டமிட்டு தடைகற்களை ஏற்படுத்தி வருவதை இதன் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது என்றார்.

உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி நாடகவும், பல நாடுகளுக்கு எதிராக சூழ்ச்சி மற்றும் குழப்பம் செய்து வரும் நாடான இஸ்ரேலுடன் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் உறவினை பல அமைப்புகள் கண்டித்துள்ளன. அதே போன்று இஸ்ரேலின் ஏஜெண்டுகள்  பல நாடுகளில் மதவாத பிரச்சனைகளை ஏற்படுத்தி வருவதும் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம்  மூன்று இஸ்ரேலிய பிரஜைகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இது போன்ற போலியான பிரச்சாரங்களில் பொதுமக்கள் அச்சமடையவும் , உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கவும் வாய்புள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இஸ்ரேலிய ஏஜென்டுகள் மீடியாவினரைக்கூட காசு கொடுத்து வாங்கும் திறன் படைத்தவர்கள். அதன் ஒரு பகுதியாகக்கூட இந்த பிரச்சாரங்கள் இருக்கலாம் என தெரிவித்தார் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான். அதே போன்று அவதூறுப் பிரச்சாரங்களைக் கண்டு மக்கள் ஏமாந்து விட வேண்டாம் எனவும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்த்யா இது விஷயத்தில் தலையிட்டு சட்டப்படி ஜனநாயக ரீதியில் போராடி வரும் இயக்கங்களுக்கு எதிராக இது போன்ற போலியான பிரச்சாரங்களை மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இந்த அவதூறுப் பிரச்சாரம் தொடர்பாக தேசிய அளவில் புகழ்பெற்ற தலைவர்களான செய்யது சஹாபுதீன் (முன்னால் எம்.பி), தொல் திருமாவளவன் எம்.பி, தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, டாக்டர். ஜஃபருல் இஸ்லாம் கான், பிரசிடென்ட், ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸ்-யே-முஷாவரத், டாக்டர் ஜான் த்யாள், உறுப்பினர் நேஷன் இன்டெக்ரேஷன் கவுன்சில், அப்துல் காலிக், பொதுச்செயலாளர் (லோக் ஜன சக்தி), பேராசிரியர் மார்க்ஸ், தலைவர் (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், தமிழ் நாடு), வழக்கறிஞர் பவானி ப. மோகன் மற்றும் பல சமூக, மனித உரிமை ஆர்வலர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பாடுபட்டு வரும் சமூக இயக்கங்களுக்கு எதிராக மீடியாக்கள் பரப்பி வரும் இது போன்ற போலி பிரச்சாரத்திற்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010