சென்னை: வடசென்னை காசிமேட்டில் இருக்கின்ற கப்ருஸ்தானின் சுற்றுச்சுவர் கண்டைனர் லாரி இடித்ததில் முற்றிலுமாக சேதமடைந்தது. பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர்கள் மற்றும் அங்குள்ள ஜமாத்தாரின் துணையோடு லாரி உரிமையாளர்களை வற்புறுத்தியதால் மீண்டும் அச்சுவர் கட்டப்பட்டது.
வடசென்னை இராயபுரம் அருகே உள்ள காசிமேடு பகுதியில் முஸ்லிம்களின் அடக்கஸ்தலமான கப்ருஸ்தான் இருக்கின்றது. துறைமுகத்திலிருந்து பெரும் கண்டைனர்களை ஏற்றி வரும் லாரிகளால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிறமத்திற்குள்ளாகிவருகின்றனர். அவ்வப்போது இந்த லாரி கண்டைனர்களால் விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் கூட பலியாகி இருப்பதுண்டு.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கண்டைனர்களை ஏற்றிக்கொண்டு காசிமேடு வழியாக வந்து கொண்ட லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து அங்கே இருந்த கப்ருஸ்தான் சுற்றுச்சுவர் மீது பலமாக மோதியது. இதில் அச்சுவர் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவம் நிகழ்ந்த பின்பு அப்பகுதி ஜமாத்தார்கள் விரைந்து சென்று விசாரித்தனர். தகவலை கேட்டறிந்த பாப்புலர் ஃப்ரண்டின் ஆர்.கே. நகர் தொகுதி உறுப்பினர்களும் உடனடியாக களத்திற்குச் சென்று லாரி உரிமையாளர்களை தொடர்பு கொண்டு உடனடியாக அச்சுவரை கட்டிக்கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தித்தனர். இறுதியில் அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு அன்று மதியமே அச்சுவரை கட்டி முடித்தனர்.
இவ்வழியாக வரும் கண்டைனர் லாரிகளால் விபத்துகள் ஏற்படுவதுமட்டுமல்லாமல், போக்குவரத்து நெரிசல், மாசுக்கட்டுப்பாடும் நிலவி வருகிறது. தமிழக அரசு இந்த கண்டனைர் லாரிகள் செல்வதற்கு மாற்றுவழியை வெகுசீக்கிரமே ஏற்படுத்தினால்தான் இது போன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக