புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

மங்களூரில் பா.ஜ.க அரசை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்

17 மார்ச், 2012

Mangalore Campus

மங்களூர்: கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மங்களூரில் கடந்த 14ஆம் தேதி அன்று துணை ஆணையர் அலுவலகத்திற்கு அருகே ஆளும் பா.ஜ.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜ.க அரசு வர்ணாசிரமக்கொள்கையான ஜாதி முறையை இந்துத்துவாவினரின் தூண்டுதலோடு கல்வி முறையில் புகுத்த முற்பட்டுள்ளது.

பி.யு தேர்வு எழுதுவதற்கான விண்ணப்ப படிவத்தில் ஜாதியை குறிப்பிடும்படி நிர்பந்தித்துள்ளது பா.ஜ.க அரசு. இதனை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய மாவட்ட தலைவர் ஹைதர் ஹபீப் "மதச்சாற்பற்று, மக்களாட்சி கொள்கையின் படி நடக்க வேண்டிய பா.ஜ.க அரசு கல்வித்துறையில் ஜாதி முறையை புகுத்த முயற்சி எடுத்து வருகிறது, இப்படி செயல்படுத்துவதினால் மக்களின் வாழ்க்கை தரம் கீழ் நோக்கி செல்லுமே தவிர முன்னேற்றம் அடையமுடியாது."

கல்வித்துறையில் பிரம்மணிச கொள்கையை முழு அளவில் புகுத்தி விடவேண்டும் என பா.ஜ.க முயற்ச்சித்து வருகிறது. அதனாலேயே ஜாதியின் பெயரை குறிப்பிடும்படி விண்ணப்படிவங்களை தயாரித்துள்ளது. இதன் மூலம் யார் பிராமணன், யார் பிராமணன் அல்லாதவன் என சுலபமாக கண்டுபிடித்து பிராமணர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதற்காகவே இவ்வாறு பா.ஜ.க அரசு செய்துள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பிறகு மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010