ஹைதராபாத்: முஸ்லிம்களின் வரலாற்று நகரமான ஹைதராபாத்தில் காதியானிகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதை கண்டித்தும் அவ்வமைப்பை தடைசெய்ய வலியுறுத்தி முஸ்லிம்கள் மாபெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
|
காதியானிகளை தடை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபடும் முஸ்லிம்கள் |
இஸ்லாத்தின் போர்வையில் இந்தியாவில் செயல்பட்டு வரும் அமைப்பான காதியானிகள் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை தகர்க்கும் விதமாக கொள்கைகளை வகுத்துக்கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்கள். இவர்களை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூக மக்களும் புறக்கணித்து வருகிறார்கள். சமீபத்தில் ஆந்திர மாநில வக்ஃப் போர்டு சார்பாக இவர்களுடைய திருமண நிகழ்ச்சிகளுக்கு எந்த உலமாக்களும், இமாம்களும் செல்ல வேண்டாம் என்று அறிவுருத்தப்பட்டார்கள். கடந்த மார்ச் 25ஆம் தேதி அன்று காதியானிசம் இயக்கம் தொடங்கப்பட்ட நாள் எனக்கூறி அவர்களுடைய அலுவலகத்தில் கொண்டாட்டங்களை நடத்தினர். தங்களுடைய அலுவலகத்திற்கு முஸ்லிம்களைப்போன்று "மஸ்ஜிதே ஹம்த்" என்று பெயர் வைத்திருக்கின்றனர்.
மார்ச் 25ஆம் தேதி அன்று நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன்னால் சர்ச்சையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளனர். அதில் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனிலிருந்து சில வசனங்களை அதில் குறிப்பிட்டிருக்கின்றனர். அவர்கள் முஸ்லிம்கள் அல்ல எனவே அவர்கள் குர்ஆன் வசனங்களை உபயோகப்படுத்தக்கூடாது என மக்கள் அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
|
காதியானிகளின் செயல்பாடுகளை தடைசெய்ய வேண்டுமென துணை ஆணையரிடம் மனு அளிக்கும் முஸ்லிம்கள் |
அவர்களுடைய அலுவலகத்திற்கும், செயல்பாட்டிற்கும் தடைவிதிக்க வேண்டுமென துணை ஆணையர் இஃக்பாலிடம் மனு அளிக்கப்பட்டது.
|
ஹைதராபாத்திலுள்ள காதியானிகளின் அலுவலகம் |
1 விமர்சனங்கள்:
Allaahu akbar. Ippodhe 7300 koottamaagivittadhe. Allah nichyam mu'mingalai ner vazhiyil selutthuvaan.
A.Sulaiman sait.
கருத்துரையிடுக