புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

சிறுபான்மை சமூகத்தின் அரசியல்வாதிகளால் சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை!

3 ஏப்ரல், 2012

மைசூர்: கர்நாடக மாநிலத்தில் அரசியல் விழிப்புணர்வை சிறுபான்மை சமூக மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மாநிலம் முழுவதும் மாவட்டம் ரீதியாக‌ பல இடங்களில் "பீப்புல்ஸ் பொலிடிக்கல் கான்ஃபரென்ஸ்" (மக்கள் அரசியல் மாநாட்டை) எஸ்.டி.பி.ஐ கடந்த மாதம் முழுவதும் நடத்தி வந்தது. கடந்த மாதம் இறுதியில் மைசூர் கல்யான்கிரியிலுள்ள லித்கார் மைதானத்தில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இதில் 15,000ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

Mysore Political Conference
 
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பிற்படுத்தப்பட்ட மக்கள் குழுவின் முன்னால் தலைவர் டாக்டர் பி.எஸ். துவார்கந்த் கூறும்போது "தலித், சிறுபான்மை மற்றும் இன்ன பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலனவர்கள் தாங்கள் சார்ந்த கட்சியின் பிரதிநிதிகளாகவே செயல்படுகிறார்கள். தங்களை வெற்றி பெறச் செய்த தன் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், வலிமைக்காகவும் எத்தகைய பணிகளையும் அவர்கள் செய்வதற்கு தயாராக இல்லை. தங்களை பாதுகாப்பாக வளர்த்தெடுத்த தம் சமூக மக்களை அவர்கள் மறந்துவிட்டார்கள்." இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் உரை நிகழ்த்திய கர்நாடக மாநில தலைவர் பின்னர் உரை நிகழ்த்திய கர்நாடக மாநில தலைவர் அப்துல் மஜீத் கொடிலிபேட் கூறும்போது "இன்றைய காலகட்டத்தில் தலித்களுக்கும், இன்ன பிற பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கும் சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் துறைகளில் நீதி கிடைப்பதில்லை. நமது தேசத்திற்கென்று முறையான சட்டங்கள் வகுக்கப்பட்டு 62 ஆண்டுகள் ஆகியும் இதே நிலைதான் தொடந்து கொண்டிருக்கிறது. ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய அரசுகள் அனைத்தையும் தனியார் மயமாக்கி ஏழைகளில் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்." இவ்வாறு அவர் கூறினார்.

மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹன்னன், தேசிய துணைத்தலைவர் நஜ்னின் பேகம், மைசூர் மாவட்ட தலைவர் முஹம்மது ஃபைஜல், பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப், மாவட்ட தலைவர் கலீம், தேசிய செயற்குழு உறுப்பினர் மெளலானா கலீமுல்லாஹ் சித்தீகி மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 
Mysore Political Conference
 
 Mysore Political Conference
 
 Mysore Political Conference
 
Mysore Political Conference

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010