புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

சங்கரரெட்டி வகுப்புவாத வன்முறை - உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை

9 ஏப்ரல், 2012

மேடக்: ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டம் சங்கரரெட்டியில் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறை தொடர்பாக உண்மை கண்டறியும் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. சிவில் லிபர்டீஸ் மானிடரிங் கமிட்டி சார்பாக பேராசிரியர் ரெஹ்னால் சுல்தானா, லத்தீஃப் முஹம்மது கான், கனீஸ் ஃபாத்திமா, மண்டகினி, மசூது, முஹம்மது இஸ்மாயில் கான் ஆகியோரை உண்மை கண்டறியும் குழுவாக நியமித்து வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. இக்குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை விசாரித்த பின் தங்களுடைய அறிக்கையை வெளியிட்டுள்ளது.


முன்னுரை:

கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று இரவு பா.ஜ.க தலைவர் தன்னுடைய ஃபேஸ்புக் தளத்தில் முஸ்லிம்களின் புனித ஸ்தலாமான கஃபாவை இழிவுபடுத்தும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டிருந்ததால் அதனை கண்டித்து முஸ்லிம்கள் பா.ஜ.க தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனை சிறிதும் பொருட்படுத்தாத காவல்துறையினர் முஸ்லிம்களை கலைந்துவிடுமாறு மிரட்டியுள்ளனர். இதனை கேள்விப்பட்ட ஆர்.எஸ்.எஸ் குண்களில் சிலர் ஒன்றினைந்து முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்களுக்கு தீ வைத்தனர். இவ்வளவு தூரம் நடந்தும் வன்முறையாளர்களை கைது செய்து அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் மெளனம் சாதித்துள்ளனர்.


ஆர்.எஸ்.எஸ்  குண்டர்களின் இந்த வெறியாட்டத்தால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரூபாய் 2 கோடி மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்கள் சூரையாடப்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப்பாட்டில் கொண்டு வர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குஜராத்தில் ஏற்பட்ட வன்முறை போன்று ஏற்பட்டுவிடுமோ என முஸ்லிம்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது. காரணம் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மெஹபூப் நகர் தொகுதியில் முஸ்லிம் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். சங்கரரெட்டி பகுதியில் அதிக அளவில் முஸ்லிம்களே வாழ்ந்து வருகின்றனர்.




மன்னர் நிஜாமுதீன் காலத்தில் வாழ்ந்த ராணி சங்கரம்மா என்பவருடைய மகனான சங்காவின் பெயரைக்கொண்டே இந்நகரம் சங்கரரெட்டி என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தின் தொழிற்துறையின் தலைநகரம் என்றே சங்கரரெட்டி நகரம் அழைக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்திலிருந்து 55 கி.மீ தொலைவிலுள்ள சங்கரரெட்டில் ஒரு லட்சத்தி ஐம்பதனாயிரம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இங்குள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும் சிறு தொழில் செய்து தான் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

சாட்சியங்கள்:
இந்த வன்முறையினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும்போது அவர்கள் தங்களுடைய ஆதங்கத்தையும், அவர்களுக்கு ஏற்பட்ட வலியையும் யாரிடமாவது கூற வேண்டும் என்றே எதிர்பார்த்து இருந்ததாக உண்மை கண்டறியும் குழு உணர்ந்து கொண்டது. உண்மை கண்டறியும் குழு அங்கு சென்றதும் லப்பைக் ஹோட்டலின் உரிமையாளர் அதீகுர் ரஹ்மான் அவர்களை அழைத்து அன்று இரவு நடந்த சம்பவத்தை விளக்கி கூறினார். 20 முதல் 25 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல், இரும்பு கம்பிகளுடன் அப்பகுதியில் இருந்த சிறு சிறு கடைகளை அடித்து நொறுக்கி தீ வைத்திருக்கின்றனர். அதன் பின்னர் அதீகுர் ரஹ்மானின் ஹோட்டல் கதவை திறந்து தீ வைக்க முயன்றுள்ளனர். இதனைக்கண்ட பக்கத்து கடைக்காரர் முரளிதர் தன்னுடைய துணிக்கடை அருகில் இருப்பதால் பாதிப்பு தனக்கும் ஏற்படும் என்று கூறி அவர்களை விரட்டியுள்ளார். இருந்த போதிலும் தீ அவரது கடைக்கும் பரவி 1.50 லட்சம் மதிப்புள்ள துணிகள் எறிந்து சாம்பலாகியுள்ள‌ன. அதீகுர் ரஹ்மான் மேலும் கூறும்போது தன்னுடைய 40 ஆண்டுகால வாழ்க்கையில் சங்கரரெட்டியில் இப்படியொரு வன்முறை சம்பவம் நிகழ்ந்ததே இல்லை எனக்கூறினார். உண்மை கண்டறியும் குழு முரளிதரின் கடைக்கும் சென்று பார்வையிட்டது. அவர் கூறும்போது அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்ததாகவும், மக்கள் அங்கும் இங்கும் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்ததாகவும் கூறினார்.




அப்பகுதியில் உள்ள தபால் நிலையத்தின் சுற்றுச்சுவர் அருகே 10 முதல் 15 வரை இருந்த முஸ்லிம்கள் கடைகள் எரித்து சாம்பலாக்கப்பட்டது. ஒவ்வொரு நபரும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷடத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு கடைகளும் பற்றி எரிந்து கொண்டிருந்த போது அதனை அணைப்பதற்கான எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபடாமல் காவல்துறையினர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாக ஷேக் குடு என்பவர் தெரிவித்தார். பெரும்பாலும் கடைகளுக்கு தீ வைக்க பெட்ரோ குண்டுகளையே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கும் இவ்வன்முறையில் தொடர்பு இருப்பதாக மற்றொருவர் கூறினார்.
புக்கடை நடத்தி வந்த தாஜுதீன் என்பவரும் 1.5 லட்சம் மதிப்பிலும், பேக்கரி நடத்தி வந்த அஹமதுல்லாஹ் என்பவருக்கு 5 லட்சம் மதிப்பிலும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. தனக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பற்றி அஹமதுல்லாஹ் கூறும்போது தன்னுடைய பேக்கரி கதவை உடைத்து பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகைவிட்டதாக அவர் கூறினார். இது திட்டமிட்டே நடத்தப்பட்ட தாக்குதல் எனவும், இதற்காக 15 நாட்களுக்கு முன்பாகவே திட்டம் தீட்டி இருக்க வேண்டும் என அவர்கள் கூறினர். அச்சிறு கடைகளில் வேலை செய்து வந்தவர்கள் தற்போது வேலை இழந்து தவிக்கின்றனர். இவர்களை பற்றி எவரும் அக்கறை கொண்டதாக தெரியவில்லை என கூறினார்கள்.

மாடர்ன் பேக்கரி நடத்தி வந்த மஜீத்திற்கு ரூபாய் 8 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முஹம்மது இஸ்மாயில் மற்றும் முஹம்மது ஆரிஃப் ஓட்டி வந்த ஆட்டோக்கள் வன்முறையாளர்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது. உண்மை கண்டறியும் குழு அப்பகுதிக்குச் சென்று மீத இருந்த கடைகளை பற்றி விசாரித்தபோது முன்னால் முதல்வரும் சந்திரபாபு நாயுடு வருவதற்கு ஒரு நாள் முன்பாக சேதமடைந்த அனைத்து பொருட்களையும் இங்கிருந்து அகற்றி விட்தாகவும், தற்போது தங்களுடைய கைகளில் புகைப்படங்களும், எஃப்.ஐ.ஆர் காப்பி மட்டுமே மிஞ்சி இருப்பதாகவும் கூறினார்கள். வன்முறையில் ஈடுபட்டவர்கள் பா.ஜ.கவைச் சேர்ந்த சோம்நாத், ஜகன், சேகர், வாசு, நாகராஜ், சீனு, கிட்டு, சந்தர் என அவர்கள் தெளிவாகவே பெயரை குறிப்பிட்டனர்.










இத்தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், ஹிந்து வாஹினி அமைப்பினர்கள்தான் ஈடுபட்டிருக்கிறார்கள் என அனைவரும் குற்றஞ்சாட்டினர்.அவர்கள் மஸ்ஜிதின் கதவுகளுக்கும் தீ வைத்தனர். கதவு மூடியிருந்ததால் அவர்களால் மஸ்ஜிதிற்குள் நுழைய இயலவில்லை என மஸ்ஜிதே நொமானியாவின் தலைமை இமாம் தெரிவித்தார்.
இறுதியாக இக்குழு காவல்துறை அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பாக விசாரணை செய்தது. மாவட்ட எஸ்.பி. விக்டர், மற்றும் டி.எஸ்.பிகளான வெங்கடேஷ் மற்றும் லக்ஷ்மி நரசையா ஆகியோரிடம் விளக்கம் கேட்டது. அவர்கள் தரப்பில் கூறும்போது வன்முறையை கட்டுப்பாட்டில் கொண்டு வர தங்களாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டதாக அவர் கூறினார். உரிய நேரத்தில் வன்முறையை தடுக்காமல் இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலேயே காவல் நிலையம் இருந்த போதிலும் ஏன் வன்முறை இவ்வளவு தூரம் வீரியமடைந்தது என கேட்டதற்கு போதிய பாதுகாப்பு படை தமது காவல் நிலையத்தில் அச்சமயம் இல்லை என்று தெரிவித்தார்.




தற்போது அதிக அளவில் காவல்துறையினர் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், நிலைமை சீரடைந்துவிடும் எனவும் அவர் கூறினார். இவ்வன்முறைக்கு யார் காரணம் என்று கேட்டதற்கு முதலில் நிலமை சீரடைந்த பின்னர் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இது வரை வன்முறை தொடர்பாக 109 புகார்கள் வந்துள்ளதாகவும் அதில் 97 புகார்களுக்கு எஃப்.ஐ.ஆர் வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.


1. தங்களுடைய ஃபாசிஸ அஜண்டாவை நடைமுறை படுத்துவதற்காக‌ சமூக நல்லிணக்கத்தோடு வாழும் மக்களிடம் பகையை ஏற்படுத்த  ஆர்.எஸ்.எஸ். வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், ஹிந்து வாஹினி போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகிறது.

2. இவ்வன்முறை சம்பவம் நன்கு திட்டமிடப்பட்டு நடந்தேறியுள்ளது.

3. தங்களுடைய அரசியல் லாபத்திற்காக காங்கிர கட்சியினர் வகுப்புவாத வன்முறையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர்.

4. முஸ்லிம்களை பொருளாதார ரீதியில் முடக்குவதற்காகவே அவர்களின் வியாபார ஸ்தலங்கள் தீக்கரையாக்கப்பட்டுள்ளது.

5. எம்.எல்.ஏ ஜெயபிரகாஷ ரெட்டி வன்முறையை தடுப்பதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை என்பதோடு அவருக்கும் இவ்வன்முறையில் தொடர்பு இருந்திருக்கிறது.

6. காவல்துறையின் செயல்பாடுகள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.காரணம் நிலமையை கட்டுக்குள் கொண்டு வர எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

7. இவ்வன்முறையால முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது வரை அரசு தரப்பிலிருந்து எவ்வித நிவாரண நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

8. முஸ்லிம் சமூகம் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. மாநில அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், ஹிந்து வாஹினி போன்ற இந்துத்துவ அமைப்பினர்களை தீவிரவாக கண்காணிக்க வேண்டும் என இக்குழு அரசுக்கு பரிந்துரை செய்கிறது.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010