பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் கல்வி
விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இப்பிரச்சாரத்தின் ஒரு
பகுதியாக ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏதுவாக கல்வி உதவி உபகரணங்கள்
இந்தியா முழுவதும் 1 லட்சம் மாணவ மாணவியருக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
தமிழகத்தில் இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சென்னை திரு.வி.க நகர்
தொகுதி சார்பாக புளியந்தோப்பு 4வது தெரு பகுதியில் கடந்த செவ்வாய் மாலை
7மணியளவில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 75 மாணவ மாணவிகளுக்கு "ஸ்கூல் கிட்" (கல்வி உபகரணங்கள்) வழங்கப்பட்டது. மேலும் பொருளாதார வசிதியற்ற நிலையில் இருக்கும் மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஷாஹித் தலைமை தாங்கினார். சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஃபக்கீர் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார்.
பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம், மாவட்ட பேச்சாளர் ஆலிம் ரிஸ்வான் ஷா காஸிமிய்யா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கொளத்தூர் தொகுதி தலைவர் பி. இபுராஹிம் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சிற்கு சிறப்பு விருந்தினராக எஸ்.டி.பி.ஐயின் திரு.வி.க நகர் தொகுதி தலைவர் ஜியாவுல்லாஹ், சென்னை கார்ப்பரேஷன் உருது பள்ளி தலைமை ஆசிரியர் ஆபிதா பேகம், டாக்டர் எஸ். அப்துர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக