சுதந்திர தினத்தை கௌவுரவிக்கும் விதமாக தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட, ரத்தம் சிந்திய தியாகிகளை போற்றும் விதமாகவும் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் விதமாகவும், போராடிப் பெற்றசுதந்திரத்தை பாதுகாக்க அனைத்துத் தரப்பு மக்களும் உறதிமொழி ஏற்கும் விதமாகவும், சுதந்திரப் போராட்ட நினைவலைகளை மக்கள் மனதில் பூத்துக்குலுங்கச் செய்யும் விதமாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம்.
அதன் ஒரு பகுதியாக கடந்த 2007 முதல் 2010 வரை மதுரை, கும்பகோணம் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி வந்தோம். 2011 ஆகஸ்ட்ல் நெல்லையில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த தீர்மானித்திருந்தோம். ஆனால் சிறுபான்மை விரோதப் போக்குடன் செயல்பட்ட காவல்துறை நீதிமன்றத்தை அணுகக்கூட எங்களுக்கு வாய்ப்பு கிடைத்து விடாத அளவிற்கு கடைசி நேரத்தில் அனுமதியை ரத்து செய்தது.
இவ்வருடம் மதுரை, இளையான்குடி மற்றும் நாகை ஆகிய இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த அனுமதி கோரினோம். கடந்த வருடம் போன்று காலதாமதம் ஏற்படாதவாறு விரைவாக மனுவை பரிசீலிக்க மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு அளித்தோம். மனுவை விசாரித்த நீதிபதி 9,10,11,/08/12 தேதிகளில் இளையாங்குடி மற்றும் மதுரை நிகழ்ச்சி அனுமதி குறித்து பதில் அளிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். காவல்துறை இம்முறையும் கற்பனைகளைக் கூறி அனுமதி மறுத்ததுள்ளது. நாகையும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்குக் கூட தொடர்ந்து பல தடைகளை ஏற்படுத்தி வரும் காவல்துறையின் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.
மூன்று வருடங்கள் சுதந்திர தின அணிவகுப்பை பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தியது. எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை. சென்றவருடம் மற்றும் இவ்வருடம் சுதந்திர தின அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்தது துரதிஷ்டமானது.
காவல்துறையின் இத்தகைய சிறுபான்மை விரோதப் போக்கை கைவிட வேண்டும். தமிழக அரசு காவல்துறையின் விரோதப் போக்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து சட்ட ரீதியாகப் போராடும்.
சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை சுதந்திர தினம் கொண்டாடுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை. சுதந்திர தின போராட்ட வரலாற்றில் சிறுபான்மை மக்களின் தியாக வடுக்களை மறைக்கவியலாது. அவர்கள் தங்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கும் அதிகமாக தியாகம் செய்துள்ளார்கள்.
எனவே, வரும் ஆகஸ்ட் 15, அன்று மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேசிய கொடியேற்றி, தியாகிகளை நினைவுகூர்ந்து, இனிப்பு வழங்கி சுதந்திர தினத்தை கொண்டாடுவது என்றும் சுதந்திர தின அணிவகுப்பு இவ்வருடம் நடத்த வேண்டாம் என பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு செய்துள்ளது என பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அறிக்கை விடுத்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக