புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

மும்பையில் நடந்து சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன!

13 ஆகஸ்ட், 2012


 அஸ்ஸாம் கலவரம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அழித்தொழிப்பு ஆகியவற்றை கண்டித்து ராஸா அகாடமி சார்பாக மும்பை ஆஸாத் மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. இச்சம்பவத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். 50 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது போடோ தீவிரிவாதிகள் நடத்திய தாக்குதல்கள் மற்றும் மியான்மரில் ராகேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அரசு உதவியுடன் புத்தர்கள் நடத்தி வரும் இன அழித்தொழிப்பைக் கண்டித்து  மும்பையில் ஆஸாத் மைதானத்தில் ராஸா அகாடமி என்ற அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடந்து நடந்த ஆர்ப்பாட்டட்த்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில் எதிர்பாராத விதமாக கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றதை தொடந்து நடந்த வன்முறையில் இருவர் பலியாகியுள்ளனர்.

முதல் கட்ட தகவலின் படி முஹம்மது உமர் (17), அல்தாஃப் ஷேக் ஆகியோர் பலியாகியுள்ளனர். 50ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முஸ்லிம்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்று நடந்த ஆர்பாட்டத்தில்  இரண்டு முஸ்லிம்கள் பலியாகியுள்ளனர். இதற்குப் பின்னால் சமூக விரோத சக்திகளின் கைகள் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எனவே பொதுமக்கள், முஸ்லிம்கள் வதந்திகள் மற்றும் கட்டுக்கதைகளை நம்பாமல் அமைதிகாத்து, சமூக விரோத சக்திகளின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010