உணவு துறந்து, உறக்கம் துறந்து, இறைபயந்து, ஒரு மாத காலம் நாம் மேற்கொண்ட பயிற்சி வாழ்நாள் முழுவதும் நிலைபெறச்செய்ய முயற்சிக்க வேண்டும். நம்முடைய தனி மனித வாழ்வு மட்டுமல்லாது சமூக வாழ்வும் மேம்பட இந்த ஈகை பெருநாளில் உறுதி பூண்டிடுவோம்.
கல்வி,பொருளாதாரம், சமூகபாதுகாப்பு போன்றவற்றில் சமூகம் மேம்பட நாம் உழைக்க வேண்டும். மகிழ்ச்சி நிறைந்த இந்நன்னாளில் அஸ்ஸாம்,பர்மா, இந்திய சிறைகளில் வாடும் அப்பாவி சிறைவாசிகள், மற்றும் சிரியா என முஸ்லிம் சமூகத்தின் அவலநிலை மாற இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம்.
இன்று மனிதர்களிடத்தில் மற்றும் சமூகத்தில் புரையோடி போயிருக்கும் சுயநலம், சோம்பல், வீண்விரயம், நேரத்தைவீzடித்தல் , கலாச்சார சீரழிவு, உறுதியின்மை, ஊழல், ஆணவம், பாரபட்சம், அநீதி ஆகியவை வேரோடும் வேரடி மண்ணோடும் மாய்ந்திட பிரார்த்திப்போம்.
ரமலான் நம்மிடம் விட்டுச்சென்றுள்ள தீமைக்கு எதிரான போராட்டம், உறுதி ஒழுக்கம், ஈகைத்தன்மை, ஆகியவற்றைக்கொண்டு சமூக மாற்றத்தில் முழு வீச்சுடன் செயல்பட்டு, உலக மக்கள் சுபிட்சமாக ,அமைதியாக வாழ இந்த நாளில் சங்கல்பம் எடுப்போம்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக