பணி இடைநீக்கம் செய்யப்பட்ட குஜராத் மாநிலத்தின் முன்னால் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ்பட் அம்மாநில முதலைமைச்சர் நரேந்திர மோடிக்கு நரோடாபாட்டியா கூட்டுப்படுகொலை தீர்ப்பு தொடர்பாக மனம் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் குஜராத் இனப்படுகொலைக்கு முக்கிய காரணம் நரேந்திர மோடிதான் என்ற உண்மையை தைரியமாகவும் பகிரங்கமாகவும் வெளியிட்டார். மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்களும் செய்தார். இதனால் அவரை பணி இடை நீக்கம் செய்து அவர் மீதே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தது மோடி அரசு. இந்துக்கள் தங்களுடைய கோபத்தை சிறுபான்மையின மக்கள் மீது வெளிப்படுத்தட்டும், அதனை காவல்துறையினர் தடுக்க வேண்டாம் என நரேந்திர மோடி கூறியதாக சஞ்சீவ் பட் கூறியிருந்தார்.
தற்போது நரோடாபாட்டியா கூட்டுப்படுகொலை தொடர்பாக தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து நரேந்திர மோடி, மாயாபென் கோத்னானி மற்றும் பஜ்ரங்தள் தலைவர் பாபுலால் பஜ்ரங்கி ஆக்யோருக்கு சஞ்சீவ் பட் மனம் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில் "உங்களுடைய விசுவாசமான தளபதிகளான மாயா கோத்னானி, பாபுலால் பஜ்ரங்கி மற்றும் இந்துத்துவா என்ற தீய சிந்தனையினால் தவறான வழிக்கு இட்டுச்செல்லப்பட்ட உங்களுடைய அடிவருடிகளுக்கு அவர்கள் செய்த தவறினால் ஆயுள் தண்டனை பெற்றுள்ளதை தாங்கள் நன்கு அறிவீர்கள். இவ்வேளையிலே தனக்கும் இந்த சம்பவத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்பது போன்று சாமர்த்தியாமாக விலகி இருப்பது சரிதானா?" என கேள்வி எழுப்பியுள்ளார். இக்கடிதம் தொடர்பாக இன்றுவரை மோடி, மாயாபென் கோத்னானி, பாப்புலால் பஜ்ரங்கி அல்லது இன்ன பிற பா.ஜ.கவின் அரசியல் தலைவர்களில் எவரும் சஞ்சீவ் பட்டின் இக்கடிதத்திற்கு பதில் அளிக்க வாய்திறக்கவில்லை.
"தற்போது ஆயுள் தண்டனை அடைந்திருக்கும் உங்களின் அடிவருடிகளின் குடும்ப நிலைப்பற்றி என்றைக்காவது சிந்தித்து பார்த்ததுண்டா? நீங்கள் அணிந்திருக்கும் முகமூடிக்கு பின்னால் இருக்கும் உண்மையான முகத்தின் பிரதிபலிப்பை என்றைக்காவது கண்டதுண்டா? உங்களின் காட்டளைப்படி உங்களது பொய்யான முகத்தை ஊடகத்தின் மூலமாக உலக மக்களுக்கு காட்டி வந்தீர்கள். என்றைக்காவது உங்கள் உண்மை முகத்தை நீங்களே அறிந்ததுண்டா?" என மோடியை நோக்கி தான் எழுதிய கடிதத்தில் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்களுடைய சகாக்களையே பலிகாடாவாக்கும் இத்தைகை செயல்கள் தங்களுடைய ஆட்சியை எப்பொழுதும் தக்கவைக்கும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா? உங்களுடைய மத நம்பிக்கை அல்லாது வேறு ஒரு நம்பிக்கையில் இருக்கிறார்கள் என்ற ஓரே காரணத்திற்காக மற்ற மனிதர்களை கொல்வதென்பது நியாயமானதுதானா?" என மோடியை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கோத்னானிக்கு எழுதிய கடிதத்தில் " ஒரு பெண்ணாகவும் மருத்துவராகவு இருக்கின்ற நீங்கள் பிறரின் தூண்டுதலினால் எவ்வாறு இது போன்ற மாபாதக செயலை செய்தீர்கள்? ஒரு சமூகத்தின் மீது இருக்கின்ற வெறுப்பின் காரணமாக அவர்களை படுகொலை செய்தது நியாயம் என உங்களுக்கு தோன்றுகிறதா? தங்களின் அரசியல் லாபத்திற்காக உங்களை தூண்டியவர்கள் அதே அரசியல் லாபத்திற்காக உங்களை பலிகாடாக்கிவிட்டார்கள் என்பதை புரிந்து கொண்டீர்களா? என கேள்வி எழுப்பினார்.

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக