நமது நாட்டின் பெருமைக்குரிய விசயங்களான ஜனநாயகம்,மதச்சார்பின்மை,சமத்துவம்,சட்டம் என பல்வேறு அங்கங்களை கொண்டும் நாம் எவ்வாறு சந்தோஷபடுகின்றமோ பெருமிதம் கொள்கிறோமோ அதேபோல நமது நாட்டின் பெருமிதம் சீர்குலைய கூடிய விசயங்களான கலவரம்,தீண்டாமை,ஊழல் போன்ற விசயங்களை கொண்டும் நாம் தாழ்நிலையை அடைவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
மேர்கூறப்பட்ட பெருமிதத்திற்கும் மோசமான சூழலுக்கும் காரணிகள் ஆட்சியாளர்களும் ஆட்சி கட்டிலை எதிர் நோக்குபவர்களும்தான்.
இவர்கள் நினைத்தால் நாட்டை பெருமிதத்திர்க்கு மட்டுமே கொண்டு செல்ல முடியும்.ஆனால் இங்கு நடக்கும் அரசியலோ மக்கள் மீதான கவனத்தில் நடக்கும் அரசியல் இல்லை நாட்டை மேம்படுத்தும் அரசியல் நடக்கவில்லை வல்லரசாக்க வேண்டும் என்ற கொள்கை திட்டத்தை வகுத்து நடக்கும் அரசியல் இல்லை.
மாறாக ஆட்சியில் இருப்பவனை விரட்டுவது அந்த நாற்காலியை நாம் பிடிப்பது என்ற நாற்காலி சண்டை மட்டுமே நடக்கிறது.
ஆம் இந்த நாட்டில் பிரதமரிளிருந்து எதிர் கட்சியில் இருப்பவர் வரை அவர்கள் இயக்கும் நிர்வாக துறைகள் வரை எல்லா மட்டத்திலும் தவறுகள் புரையோடிதான் கிடக்கின்றன.இத்தவறுகள் என்பது செய்பவனிளிருந்து கடைகோடி அதிகாரம் படைத்தவன் வரை அனைவருக்கும் தெரிகிறது.ஆனால் யாரும் அதனை அந்த சமயங்களில் தடுத்து நிறுத்துவதும் இல்லை தண்டனையை வழங்குவதும் இல்லை.
மாறாக தமக்கு ஒரு நலன் தமக்கு ஒரு ஆபத்து என்ற சமயத்தில் மட்டுமே அத்தவறுகள் பயன்படுகின்றன.இதற்கு எந்த கட்சியும் சளைத்து போகவில்லை.இந்த கொள்கையில் அனைத்து கட்சியும் கூட்டணியாகத்தான் இருக்கிறார்கள்.
இத்தத்துவம் தெரிந்து இருப்பதால்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட அண்மையில் கூறும் போது பிரதமருக்கு எதிராக அவரது நேர்மை என்ற நன்னடத்தை சீர்குலைக்கும் வகையில் விஸ்வரூபமாக்கபட்ட நிலக்கரி ஊழல் என்பது பா ஜ க எடுத்து இருக்கும் பிளாக் மெயில் கொள்கை என்பதாக சொன்னதை நாம் கவனிக்க வேண்டும்.
நமக்கெல்லாம் தெரியும் பிளாக் மெயில் என்றால் என்ன என்பது ஒருவர் செய்த தவறை அவருக்கே தெரியாமல் தெரிந்து வைத்து கொண்டு மிரட்டுவது.ஆக சோனியா அவர்கள் கூறியதில் பிரதமர் தவறு செய்ய வில்லை என்பதை கூட சொல்லாமல் பா ஜ க ஏர்கனவே தெரிந்து வைத்த தவறை ஏதோ ஒரு நலனுக்கு தற்போது சொல்லி மிரட்டுகிறது என்பதுதான் இதன் மறைமுக அர்த்தம .
அந்த நலன் குஜராத் கலவர வழக்கில் வழங்கப்பட்ட (வழங்கப்படவிருந்த) தீர்ப்பை மாற்றுரவதர்க்கு கூட இருக்கலாம்.அந்த நலன் கர்நாடகா மற்றும் ஆந்திரா என தீவிரவாதிகள் என்ற பெயரில் முஸ்லிம்களை வேட்டையாட கூட இருக்கலாம்.
இதே போல 2004 பாராளுமன்ற தேர்தலில் பா ஜ க தோல்விக்கு குஜராத் கலவரமும் மோடியும்தான் காரணம் என்று வரும் போது தன்னை மீண்டும் கதாநாயகனாக்குவதர்க்கு தன்னை கொள்ள சதி என்ற நாடகத்திற்கு எவ்வாறு இர்ஷத் ஜகான் தேவையோ அதனை போன்ற நலனாகாவும் இருக்கலாம்.
பா ஜ க ஆட்சியும் ஊழலுக்கு சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் சவப்பெட்டி ஊழல் எவ்வாறு 2001 ம் ஆண்டு இந்தியாவெங்கும் முக்கிய செய்தியாக்கபட்டு பா ஜ க க்கு தர்மசங்கடமான் நிலை ஏற்பட்டு அதனை மறைக்க பாராளுமன்ற தாக்குதல் என்பது எவ்வாறு முக்கிய சம்பவமாக மாறியதோ அதனை போன்ற நலனாக கூட இருக்கலாம்.
காவி பயங்கரவாதம் என்ற தீவீரவாதத்தின் புதிய மற்றும் உண்மை அடையாளம் இந்தியாவில் தெரிய வரும் போது அதற்கு முஸ்லிம்கள் மட்டுமே தீவீரவாதத்திர்க்கு சொந்தமானவர்கள் என்பதற்கு அடையாளமாக மும்பை தாக்குதல் எவ்வாறு அமைந்ததோ அந்த சுயநலமாக கூட இருக்கலாம்.
முஸ்லிம்கள் அப்பாவிகள் பாசிஸ்ட்டுகள்தான் தீவிரவாதிகள் என்று கர்கரே உறக்க சொன்ன சமயத்தில் தீவீரவாதிகள் முஸ்லிம்களாகிய நாங்கள்தான் என்று கர்கரே கொள்ள பட்ட நாடகம் அரங்கேற்றபட்டதே அந்த சுயநலமாக கூட இருக்கலாம்.
தேர்தல் சமயத்தில் இந்திய குடிமக்களாக கருதப்பட்ட அஸ்ஸாம் முஸ்லிம்கள் கலவர நேரத்தில் மட்டும் பங்களாதேஷ் முஸ்லிம்களாக மாற்ற பட்டார்களே அந்த சுயநலமாக கூட இருக்கலாம்.
இது போன்ற சுய நல அரசியல்கள் ஏராளம் ஏராளம் ....
இது ஏதோ கற்பனையில் சொல்லப்படும் எடுத்துகாட்டுகள் அல்ல நமது நாட்டில் இது போன்ற அரசியல் கொள்கையில் யாருக்காவது நலன் ஏற்பட வேண்டும் என்றாலோ தம்முடைய ஆபத்திலிருந்து மீள வேண்டும் என்றாலோ அதற்கு முஸ்லிம்கள் மீது இறுதிகட்ட பலியை போட்டு பரபரப்பை முடிவுக்கு கொண்டு வருவதே தொடர்கதையாகி விட்டது.முஸ்லிம்களுக்கும் இது பளக்கமான ஒன்றாகி விட்டது.இந்திய குடிமக்களுக்கும் எனக்கேன் வம்பு என்று ஒதுங்கி போவதும் வாடிக்கையாகி விட்டது.
மாறுமா இந்த நிலை?
வளருமா எம் தேசம்?
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக