இது தொடர்பாக தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ராமர் பாலத்துக்கு சேதம் விளைவிக்காமல் தனுஷ்கோடி கரையை உடைத்து சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டத்தை "4ஏ' தடத்தில் நிறைவேற்றுவது சாத்தியமற்றது என்று நிபுணர் குழு கூறியள்ளதை தமிழக அரசும் ஏற்றுக் கொள்கிறது.
தனுஷ்கோடியில் 0.8 கி.மீ தூரத்தில் கடல் மணலைத் தோண்டி அகழ்வுப் பணி மேற்கொள்ள கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும். ஆனால், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு மேலாண்மை ஆணையம் இதுவரை இத்திட்டத்தை ஆய்வு செய்யவில்லை.
"4ஏ'' மாற்று வழியில் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய வன உயிரின வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியம் என்று தமிழக தலைமைச் செயலர் கடந்த மார்ச் மாதம் மத்திய கப்பல் அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆகையால், மாற்று வழியில் இத்திட்டத்தை செயல்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
பாரம்பரியம் மிக்க, புராதனச் சின்னமான ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கடந்த மார்ச் மாதம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். மாற்றுப்பாதையில் திட்டத்தைச் செயல்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
எனவே, "யுனெஸ்கோ'' சர்வதேச அமைப்பின் விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும் பாரம்பரியம் மிக்க ராமர் பாலத்தை "தேசிய நினைவுச் சின்னம்'' என அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை வரும் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது.
2 விமர்சனங்கள்:
ஏதோ என்னக்கு சாப்பாடூ வேண்டாம் என்று கூறவது போல் கூறுவது காவிஎய் திருப்தி படுத்தும் வார்த்தை .இத்தனை கோடி செலவு செய்தது எவன் அப்பன் வீட்டு சொத்து .காங் கூடங்குளம் அணுமின்நிலைய விசயத்தில் இவளவு செலவு செய்தகேவிட்டது ஆகவே இதை அமுல் படுத்து என்று குரியது.அதுபோல் இதையும் கூற வேண்டியது தானே.செம்மமொழி வந்தால் சோறு கிடைக்கும் என்று கூறும் மு.க , சேது இல்லையேல் நானும் மம்தா போல் ஆவேன் என்று கூற வேண்டியது தானே .எல்லாத்துக்கும் அரசியேல் .,,,,,
கருத்துரையிடுக