புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

தேசத்தின் துக்கத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பங்கேற்கிறது

31 டிசம்பர், 2012

அண்மையில் டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்ட மாணவி மரணமடைந்த துயர சம்பவத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே. முஹம்மது ஷரீஃப் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் தலை நகரில் நிகழ்ந்த இந்த கொடூரமான சம்பவத்திற்கு அவர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 23 வயதான மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பலியான சம்பவம், இந்திய பெண்களின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது. அரசு மற்றும் காவல்துறையின் அணுகுமுறையே இத்தகைய கொடிய சம்பவங்கள் நிகழ முதன்மையான காரணமாகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுப்பதற்கு, ஆட்சியாளர்களின் கண்களை திறக்க சமீபத்திய இச்சம்பவம் உதவட்டும்.

இந்நிலையில் டெல்லியில் நிகழ்ந்தது போலவே இந்தியாவின் எல்லை மாநிலங்களிலும், பழங்குடியினர் வாழும் பகுதிகளிலும் ராணுவம், போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினரால் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழுவதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. இங்கெல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களுடைய உறவினர்களுக்கும் நீதி கிடைப்பதில்லை. மேலும் குற்றவாளிகல் தண்டிக்கப்படவும் இல்லை.

ஆனால் டெல்லி சம்பவத்தில் இந்திய மக்கள் தங்களது எதிர்ப்பையும், வேதனையையும் பேச்சிலும், எழுத்திலும் மட்டும் ஒதுக்கிவிடாமல் வீதிக்கு வந்து நீதிக்காக போராடுவது நல்லதொரு அறிகுறியாகும். நீதிக்கான இந்த உணர்வு, இந்த ஒரு சம்பவத்துடன் மட்டும் சுருங்கிவிடக்கூடாது. அனைத்து மனிதர்களுக்கும் அவர்கல் எந்த மதம், சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும் தங்களது அடையாளத்தையும்,  கண்ணியத்தையும் பாதுக்காக்கும் உரிமை உண்டு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

குற்றவாளிக்கு கடுமையான தண்டனையை அளிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படவேண்டும் என்று இந்தியா முழுவதும் குரல்கள் ஒளிக்கின்றன. கே. முஹம்மது ஷரீஃப் இது குறித்து கூறுகையில், இது சட்டத்டின் குறைபாடு இல்லை. மாறாக, அதிகாரிகளின் மன உறுதியில் ஏற்பட்ட் வீழ்ச்சியே இச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற காரணமாகும். சட்டம் கடுமையாகப்படும் பொழுது அவை பரவலாக துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன என்பது நமது அனுபவமாகும்.

எதிர்காலத்தில் அனைத்து குற்றவாளிகளுக்கும் பாடமாகும் விதமாக டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகல் மீது விரைவாக விசாரணையை நடத்துமாறு கே.எம். ஷரீஃப் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010