புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

மோடியின் பதவி

31 டிசம்பர், 2012

குஜராத்தில் மீண்டும் ஒரு கெட்ட ஆட்சியாளர் முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார். இவரது வெற்றியை தேர்தலுக்கு முனும் சரி பின்னும் சரி பரவலாக விளம்பரம் செய்யப்பட்டாலும் அவர்களது கட்சியின் கூட்டணி ஆட்களும் நாட்டின் நடுநிலையாளர்களும் இவர்கள் கூறுவது போல் இந்த வெற்றியை எடுத்துக் கொள்ள வில்லை என்பது வெளிச்சமாகியுள்ளது.


என்னதான் விளம்பரம் செய்தாலும் குஜராத்தில் இன்னும் சில முக்கிய பிரச்சனைகல் தீர்க்கப்படவில்லை என்பதே உண்மை. 2005-2010 வளர்ச்சியில் அதிவேக கீழ் இறங்கும் 17 மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று என்ற இடத்தை பிடித்துள்ளது.  இதைப்பற்றி உச்ச நீதிமன்றத்தின் முன்னால் நீதிபதியும் தற்போது இந்திய ஊடகத்துறையின் தலைவருமான மார்கண்டேய கட்சு கூறுகிறார்; குஜராத்தில் சிசுகொலை அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் 33% ஊட்டச்சத்து குறவான குழந்தைகள் உள்ளனர். இது பஞ்சத்தில் உள்ள சோமாலியாவை காட்டிலும் அதிகமாகும்.

மோடி மஸ்த்தான் வேலைகளை செய்து வெற்றி  பெற்ற மோடி பதவி ஏற்பு விழாவிற்கு பா.ஜ.கவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பிஹார் நிதீஸ்குமார் மற்றும் ஒடிசாவின் முதல்வர் நவீன்பட்நாயக் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் இருவரும் இந்தக்கூட்டணியின் பிரதம வேட்பாளராக மோடியை முன்னிருத்துவதை கடுமையாக எதிர்த்து வருபவர்கள் ஆவர். மேலும் பீஹாரின் துணை முதல்வர் சுசில் குமார், தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த மோஹன் பகவத் ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை. அதிமுகவின் ஜெயலலிதா, வி.ஹெச்.பி.யின் அசோக் சிங்கால், நவநிர்மான் சேனாவின் ராஜ்தாக்ரே, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, கோவாவின் முதல்வர் மனோகர், சத்தீஸ்கர் முதல்வர் ராம்சிங், மத்திய பிரதேசம் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அகாலி தளம் சார்பாக பிரகாஷ் சிங் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

47% வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பா.ஜ.கவின் அழிவுப் பாதையை தொடங்கியதாக அரசியல் பிரமுகர்கள் கருதுகின்றனர். காரணம் அமைப்பு சாராத தொழலாளர்களின் தனி நபர் வருமானம் தமிழகத்தை விட குறைவு. அரசு நிலங்கள் அடிமாட்டு விலையைவிட மிகக் குறைவாகவே பெரும் முதலாளிகளுக்கு ஒதுக்கியுள்ளதால், அந்த நிலங்களை விற்றுப் பெரும் இலாபம் அடைந்து வருகின்றனர். குஜராத்தில் முதலாளிகள் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளனர். அவர்கள்  அடைந்த இலாபம் சுவிஸ் வங்கியில் குவிந்துள்ளது. இவர்கள் செய்யும் "குஜராத்தில் நல்ல நிர்வாகம்" என்ற விளம்பரம் உணையாக இருக்குமானால் பா.ஜ.கவை சார்ந்த 7 அமைச்சர்கள் ஏன் தோல்வி அடைந்தார்கள். கடந்த 2007ல் பெற்ற 117 இடங்களில் 2 இழந்துள்ளது. நல்ல ஆட்சியாக இருந்திருந்தால் கூடுதலாக இடங்களை பிடித்திருக்க வேண்டும். காங்கிரஸ் கடந்த 2007ல் பெற்ற 59 இடங்களைவிட 2 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. மோடியின் வெற்றிக்கு காங்கிரஸ் ஒரு முக்கிய காரணமாகும். சங்கர்சிங் வதேலா போன்ற சங்கப்பரிவாரத்தினர்களால் வழி நடத்தப்படும் குஜராத் காங்கிரஸ், பா.ஜ.கவிற்கு எதிரான உறுப்படியான பிரச்சாரத்தை சோனியாவும் பிரமரும் மேற்கொள்ளவில்லை. காரணம் இந்துக்களின் ஓட்டு எங்கு கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சம் ஏற்படுத்தப்பட்டதால் ஆகும்.

மோடியின் மீது கொண்ட பயம் குஜராத் மக்களுக்கு இன்னும் நீங்கவில்லை என்று விமர்சனங்கள் ஏற்பட்டாலும், மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகள், ஊடகங்கள், அரசு இயந்திரம் போன்றவைகளை இந்துத்துவ மனநிலை ஊட்டப்பட்டதால் தான் 3வது முறையாக பயங்கரவாத மோடிக்கு வெற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010