சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட சார்பாக டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு "மறுக்கப்படும் நீதி" என்ற தலைப்பில் புதுப்பேட்டை மற்றும் வண்ணாரப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதுப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் மற்றும் சன் டிவி புகழ் வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அதே போன்று வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம், எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் நேதாஜி ஜமால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
Você está em: Home » பொது நிகழ்ச்சிகள் » சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக