புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லையாம்... சொல்கிறார் ஜெயா!

1 ஜனவரி, 2013

சென்னை: வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என முதலைமைச்சர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

சென்னை வானகரத்திலுள்ள மண்டபத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக்கத்தின் பொதுக்குழு நடைபெற்றது. இப்பொதுக்குழு கூட்டத்தில் மாநிலம் முழுவதிலிருந்தும் கட்சியின் பிரமுகர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.


வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் ஆ.தி.மு.க கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்து வந்தது. தற்போது நடைபெற்ற பொதுக்கூழு கூட்டத்தில் பா.ஜ.கவுடனோ அல்லது காங்கிரஸ் கட்சியுடனோ கூட்டணி வைக்கப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு நமக்கு எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை, காரணம் தமிழகத்தில் செல்லா காசாகிப்போன பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தால் எந்த லாபமும் இல்லை என்பதை நன்கு அறிந்திருந்தே ஜெயலலிதா இம்முடிவை எடுத்திருப்பதாகவே தெரிகிறது.

இவர் முதல்வர் பதவி ஏற்கும் போது பா.ஜ.கவின் நரபலி மோடியை அழைப்பதும், அவர் பதவி ஏற்கும்போது இவரை அழைப்பது என இரண்டு கட்சிகளுக்குமிடையே பாச மழை பொழிந்து வந்ததை அனைவரும் அறிவோம். ஜெயாவின் இரகசிய ஆலோசகரரான திருவாளர் "துக்ளக்" அவர்களின் கட்டளைக்கிணங்க ஜெயாவின் பா.ஜ.கவுடனான நட்புறவு வலுத்துக்கொண்டே இருக்கும் சமயத்தில் தமிழகத்தில் ஏன் அவர்களுடன் கூட்டணி வைக்க தயாராக இல்லை. அதற்கு முக்கிய காரணம் கடந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்களின் பெருவாரியான வாக்குகளை பெற்று மீண்டும் முதலைமைச்சர் நாற்காலியில் அமர்ந்த ஜெயா பதவியேற்கும் போது நரபலி மோடியை விழாவிற்கு அழைத்ததன் மூலம் முஸ்லிம்களின் வெறுப்பை நன்றாக பெற்றுக்கொண்டார்.

இச்சமயத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடனான கூட்டணி ஏற்பட்டுவிட்டால் நிச்சயம் தனக்கு கிடைத்த சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்காமல் போய்விடும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே தேர்தலில் மட்டும் பா.ஜ.கவினரிடமிருந்து ஒதுங்கி நிற்கிறார் என்பது நமக்கு புலனாகிறது.

ஒட்டுமொத்தத்தில் ஜெயாவின் ஆசியைக்கொண்டு தமிழகத்தில் கால்பதிக்க நினைக்கும் பா.ஜ.கவுக்கு ஜெயாவின் அரசியல் தெரியவில்லை அதே சமயம் தமிழகம் மற்றும் புதுவையில் மட்டும் கட்சியை நடத்திக்கொண்டிருக்கும் ஜெயாவை அடுத்த முதல்வர் என்ற மாயை கூறி அரசியல் நடத்தும் பா.ஜ.கவின் தில்லுமுல்லுக்கு மயங்கி கனவு கண்டு வரும் ஜெயாவிற்கு பா.ஜ.கவின் அரசியல் தந்திரமும் புரியவில்லை.

இவர்கள் வேண்டுமானால் ஏமார்ந்து தொலைக்கட்டும். இந்த பாராளுமன்ற தேர்தலிலாவது முஸ்லிம்கள் விழித்துக்கொள்வார்களா....? பொருத்திருந்து பார்போம்.

கட்டுரை: முத்து

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010