புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

சென்னையில் நடைபெற்ற ஏ.ஐ.ஐ.சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம்

9 ஜனவரி, 2013

ஆல் இந்தியா இமாம் கவுன்சிலின் தேசிய நிர்வாகிகளின் கூட்டம் நேற்றைய தினம் (08.01.2013) சென்னையிலுள்ள‌ மாநில தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேசிய தலைவர் மெளலானா உஸ்மான் பேக் ரஷாதி அவர்கள் தலைமை தாங்கினார்.



தேசிய தலைவர் தன்னுடைய தலைமை உரையில் வக்ஃபு நிலத்தில் கட்டப்பட்டிருந்த  கோஷியா மஸ்ஜித் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளை டெல்லி டெவலப்மெண்ட் அதாரிட்டியினர் சமீபத்தில் இடித்தனர். இதனை ஆல் இந்தியா இமாம் கவுன்சில் வன்மையாக கண்டிக்கிறது. இடிக்கப்பட்ட மஸ்ஜிதையும் குடியிருப்பையும் மீண்டும் கட்ட வேண்டும் என ஆல் இந்தியா இமாம் கவுன்சில் அரசு முன் கோரிக்கை வைக்கின்றது. நாட்டில் உள்ள பல வக்ஃபு நிலங்கள் சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டும் அபகரிக்கப்பட்டும் வருகின்றது. இதனை தடுத்திடும் வகையில் வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்க உரிய சட்டத்திருத்ததை கொண்டு வரவேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கின்றது" என கூறினார்.

பொதுச்செயலாளர் பேராசிரியர் மெளலானா ஷாஹித் கோட் அவர்கள் உரையாற்றும்போது " டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மூலம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதற்குண்டான போராட்ட வியூகங்கள் ஆரம்பித்துள்ளன. இது வரவேற்கத்தக்க விஷயமாக இருந்தாலும் டெல்லி சம்பவத்தோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. கஷ்மீர், குஜராத், ஒரிஸா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும் போராட முன்வரவேண்டும்." எனக்கூறினார்.

இந்த நிர்வாக கூட்டத்தில் செயலாளர் மெளலானா சாகுல் ஹமீது பாகவி, மெளலானா அஸ்ரார் ஃபலாஹி, மெளலானா மஜீத் காசிமி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரம், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், மஹராஷ்டிரா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், பிஹார், மணிப்பூர், கோவா மற்றும் டெல்லி ஆகிய மாநிலத்தைச்சேர்ந்த மாநிலத்தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.

தீர்மானங்கள்:

1. பெண்களுக்கெதிரான வன்கொடுமை:

பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து நீதிக்கான தொடரும் போராட்டங்கள் டெல்லி சம்பவத்தோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. நாட்டில் எந்த இடத்தில் எந்த பெண் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமென நாட்டு மக்கள் அனைவரையும் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் கேட்டுக்கொள்கிறது.

2. அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும்

விசாரணையின் பேரில் கைது செய்யப்பட்டு பல நாட்களாக சிறையில் அடைப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் விசாரணை முடிந்த பிறகு அவர்கல் குற்றமற்றவர்கள் என்றும் அப்பாவிகள் என்றும் கூறி விடுதலை செய்யப்படும்போது அவர்களுடைய முழு வாழ்க்கையும் சீரழிந்து விடுகிறது. அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து 5 முதல் 16 ஆண்டுகள் வரை சிறையில் அடைத்துவிட்டு பின்னர் அவர்கள் நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்யும் சம்பவம் நாட்டில் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. மத்திய அரசு இதில் உடனடியாக கவனம் செலுத்தி அப்பாவி இளைஞர்களை உடனே விடுதலை செய்வதோடு அவர்களுக்கு முறையான நஷ்டஈடு வழங்க வேண்டுமென ஆல் இந்தியா இமாம் கவுன்சில் வலியுறுத்துகிறது.

3. பாபரி மஸ்ஜிதிற்கான நீதி:

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி முஸ்லிம்களின் உரிமைக்கான நீதி மட்டுமல்ல மாறாக ஒட்டுமொத்த தேசத்தின் இறையான்மைக்கு கிடைக்க வேண்டிய நீதியாகும். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதியின்படி பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டப்படவேண்டும், அதே சமயத்தில் அதனை இடித்த குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என ஆல் இந்தியா இமாம் கவுன்சில் கோரிக்கை வைக்கிறது.


4. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு:

யுபிஏ அரசாங்கத்தால் வாக்குறுதி அளித்தபடி முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.  கடந்த உத்திர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது 27% பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான இடஒதுக்கீட்டில் 4.5% உள் ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்குவதாக கூறியது.  இது நாள் வரை அதனை நடைமுறைப்படுத்த எந்த முயற்ச்சியும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்ப‌டி முஸ்லிமளுக்கென்று 6% இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற பரிந்துரையையும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டினை அமுல்படுத்த வேண்டுமென ஆல் இந்தியா இமாம் கவுன்சில் கோரிக்கை வைக்கின்றது.

5. வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்க சட்டம்:

சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்க அரசு உரிய சட்டத்தை இயற்ற வேண்டுமென ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கின்றது.

6. "ஹுப்புன் நபி" தேசிய அளவிலான பிரச்சாரம்:

"ஹுப்புன் நபி" ( நபிகள் நாயகம் அவர்கள் சிறந்த சமூக சீர்த்திருத்தவாதி) என்ற தலைப்பில் தேசிய அளவில் பிரச்சாரத்தை தொடங்க வேண்டுமென ஆல் இந்தியா இமாம் கவுன்சில் முடிவெடுத்திருக்கிறது. ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15 வரை நடைபெறும் இப்பிரச்சாரத்தில் முஹம்மது நபி மேற்கொண்ட சமூக சீர்த்திருத்த தத்துவங்களை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010