தமிழகம் முழுவதும் மது ஒழிப்பிற்கு எதிராக பிரச்சாரங்களும் போராட்டங்களும் தீவிரம் அடைந்து வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 500 மதுபானக்கடைகள் அகற்றப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் 15422 சாலை விபத்துக்கள் நடந்துள்ளது என்பதும் அதற்கு வாகனங்களை ஓட்டும் வாகன் ஓட்டுனர்களின் குடிபோதையும் காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழக அரசின் இது போன்ற நடவடிக்கைகள் மூலம் விபத்துக்கள் குறைந்து, பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியும்.
இன்று நடக்கும் பாலியல் வன்முறைகளும், கொலை, கொள்ளை போன்ற கொடிய குற்றங்களும், போதை ஆசாமிகளின் செயல்பாடுகள் காரணம் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. ஒட்டுமொத்தமாக தமிழ் நாட்டில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவதன் மூலம் பெரும்பாலான குற்றங்களை தடுக்க முடியும் என்பதால் தமிழக அரசு தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த மதுக்கடைகளை மூடி குற்றங்களை தடுப்பதற்கும் பொதுமக்கள் பாதுகாப்புடனும் நிம்மதியுடனும் வாழ்வதற்கும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

2 விமர்சனங்கள்:
சிறந்த ஊடகத்தின் பண்பில் சரியான எழுத்து நடையும் கூட உண்டு. எழுத்து பிழையின்றி பார்த்துக்கொள்ளவும்.
தவறை சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் இனி வரும் நாட்களில் திருத்திக்கொள்கிறொம்.....
கருத்துரையிடுக