சென்னை : நீதி தேடும் பாபரி மஸ்ஜித் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் சென்னை மண்ணடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தியது. டிசம்பர் 6,2010 முதல் ஜனவரி 30,2011 வரை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் " நீதி தேடும் பாபரி மஸ்ஜித்" என்ற தலைப்பில் மாபெரும் பிர்ச்சாரத்தை நடத்தியது.
தமிழகத்தில் இப்பிரச்சாரம் பல்வேறு ஊர்களிலும் நடைப்பெற்றது. மக்கள் மத்தியில் பாபரி மஸ்ஜிதிற்க்கு ஏற்ப்பட்ட அநீதியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையிலே இப்பிரச்சாரம் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் நடைப்பெற்றது. இந்த பிரச்சாரத்தின் யுக்தி பொதுக்கூட்டங்கள், தெருமுனைக்கூட்டங்கள், கருத்தரங்கம், சுவரொட்டி பிரச்சாரம், நோட்டீஸ் பிரச்சாரம், குறுந்தகடு விற்ப்பனை, பாபரி மஸ்ஜித் வரலாற்றைக்கூறும் புத்தகம், ஸ்டிக்கர், போன்றவற்றின் மூலம் நடைப்பெற்றது. இப்பிரச்சாரத்தின் இறுதியாக மண்ணடி தம்பு செட்டி தெருவில் மாபெரும் பொதுக்கூட்டம்
நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்க்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் சகோதரர் ஷேக் அன்சாரி அவர்கள் தலைமை தாங்கினார். சென்னை மாவட்ட தலைவர் சகோதரர் முஹம்மது நாஜிம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்திற்க்கு பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் சகோதரம் ஏ.எஸ். இஸ்மாயில்
சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் பாபரி மஸ்ஜிதிற்க்கு ஏற்பட்ட அநீதியை விளக்கி கூறினார். மேலும் முஸ்லிம்கள் மனம் தளர்ந்து விடக்கூடாது என்பதையும் தெளிவாக எடுத்துக்கூறினார். அதன் பின் " நீதி தேடும் பாபரி மஸ்ஜித்" என்ற தலைப்பில் பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர்களால் மேடை நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதில் ஆரம்ப
கால முதல் இன்று வரை பாபரி மஸ்ஜிதிற்க்கு ஏற்பட்ட அநீதியை சித்தறிக்கும் வகையில் அமைந்தது. அதன் பின் "காவி பயங்கரவாதத்தின் பன் முகம்" என்ற தலைப்பில் மாநில செயற்க்குழு உறுப்பினர், மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் வழக்கறிஞர் முஹம்மது யூசுப் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் இந்த நாட்டில் நடைப்பெற்ற அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் பாசிஸ பயங்கரவாதம் தான் என்பதை ஆதாரத்தோடு எடுத்துக்கூறினார்.
மக்கள் அனைவரும் ஒன்றினைந்து இத்தீய சக்திகளை எதிர்த்து போராட வேண்டும் என்று கூறினார். பின்னர் உலக் பயங்கரவாதத்தின் ஊற்றுக்கன் மொஸாத் என்ற தலைப்பில் இலக்கியச்சோலை பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர் ஃபக்கீர் அகமது வெளியிட அதனை வழக்கறிஞர் முஹம்மது யூசுப் அவர்கள் பெற்றுக்கொண்டார். பின்னர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர் ரஃபீக் அவர்கள் பொதுக்கூட்டத்தின் தீர்மானத்தை வாசித்தார். சென்னை மாவட்ட செயலாளர் சகோதரர் முஹம்மது ஷாஹித் அவர்கள் நன்றி உரை கூற பொதுக்கூட்டம் நிறைவுற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியில் கழந்து கொண்டனர்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக