கோழிக்கோடு: எஸ்.டி.பி.ஐ-ன் தேசிய நிர்வாகியும், கேரள மாநில நிர்வாகியுமான நஸ்ருதீன் இளமரம் கேரள மாநில எஸ்.டி.பி.ஐன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநில நிரவாகிகள் கூட்டத்தில் முந்தைய தலைவர் கே.பி. முஹம்மது ஷரீஃப் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு நஸ்ருதீன் இளமரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாநில தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்தை எஸ்.டி.பி.ஐன் தேசிய செயற்குழு உறுப்பினரும் "தேஜஸ்" பத்திரிக்கையின் எடிட்டருமான பேராசிரியர் கோயார் அவர்கள் நடத்தித்தந்தார்கள்.
மாநில பொதுச்செயலாளர்கள் எம்.கே. மனோஜ் குமார், அப்துல் மஜீத் ஃபைஜி, துணைத்தலைவர் அஷ்ரஃப் மெளலவி, ஐயப்பன் மாஸ்டர், பொருளாளர் சாம்குட்டி ஜேகப், வி.டி. இக்ராமுல் ஹக், நூர்ஜஹான் மற்றும் துலசீதரன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் கருணங்கபள்ளி தொகுதியில் மாநில அமைச்சர் திவாகரனை எதிர்த்து போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற காலங்களில் நஸ்ருதீன் இளமறம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில தலைவராக பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது. முன்னால் தலைவர் கே.பி.ஷரீஃப் தனது சொந்த பிரச்சனைக்காரணமாக பொறுப்பிலிருந்து விடுப்பு பெற்றுக்கொண்டார்.
2 விமர்சனங்கள்:
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
இப்போது கேரளா மாநில Popular Front தலைவர் யார்?
அஸ்ஸலாமு அலைக்கும்!
தற்போது கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட்டின் தலைவர் சகோதரர் அஷ்ரஃப் மெளலவி.
கருத்துரையிடுக