நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் ஆ.இ.ஆ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினர். இதன் மூலம் இதனால் வரை ஆட்சி கட்டிலில் அமர்ந்து வந்த தி.மு.க வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது.
தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் மொத்தம் 234 தொகுதிகளில் வெறும் 31 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்திருக்கிறது. ஆ.இ.ஆ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் 203 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே தி.மு.க இந்த முறை தோல்வியை தழுவும் என்றும் அதற்கு முக்கிய காரணமாக அமையப்போவது 2ஜி அலைவரிசையில் நடந்த் ஊழல் என்பதால் தான் என்று கருத்துக்கணிப்புகள் வெளிவந்தன. இருந்த போதிலும் இவ்வளவு படுதோல்வியை சந்திக்கும் என்று எந்த கருத்துகணிப்பும் தெரிவிக்கவில்லை.
சென்னையில் கொளத்தூர் மற்றும் சேப்பாக்கம் ஆகிய இரு தொகுதிகளை தவிற மற்ற அனைத்து தொகுதிகளிலும் ஆ.இ.ஆ.தி.மு.க கூட்டணிக்கட்சிகள் தான் வெற்றி பெற்றுள்ளது. இதனால் வரை தி.மு.கவின் கோட்டையாக திகழ்ந்து வந்த சென்னை மாநகரம் தொகுதிகள் இந்த முறை தி.மு.க விற்கு பெறும் தோல்வியை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆ.இ.ஆ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்ட சகோதர கட்சியான மனித நேய மக்கள் கட்சி 2 இடங்களில் ( ராமநாதபுரம் மற்றும் ஆம்பூர்) தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நமது துறைமுகம் தொகுதியிலும் இந்த முறை அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் வரை தி.மு.க மற்றமு முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தான் வெற்றி பெற்று வந்தன். இந்த முறை தி.மு.க சார்ப்பில் போட்டியிட்ட திருப்பூர் அல்தாஃப் ஹுஸைன் ஆ.இ.ஆ.தி.மு.கவின் வேட்பாளர் பழக்கருப்பையாவிடம் தோல்வியடைந்தார். 10,000 ற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பழக்கருப்பையா வெற்றி பெற்றுள்ளார்.
இந்த சட்டமன்றத்தேர்தலில் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து களம் கண்ட எஸ்.டி.பி.ஐற்கு நான்காவது இடமே கிடைத்துள்ளது. தமிழகத்தில் மற்ற இடங்களிலும் எஸ்.டி.பி.ஐன் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.
எஸ்.டி.பி.ஐன் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விபரம்:
1. பி. முஹம்மது ஹுஸைன் - துறைமுகம் தொகுதி - 2237 ( நான்காவது இடம்)
2. ஃபைரோஸ் கான் - ராமநாதபுரம் தொகுதி - 2731 (ஆறாவது இடம்)
3. எஸ். முஹம்மது முபாரக் - கடயநள்ளூர் தொகுதி - 6649 (மூன்றாவது இடம்)
4. கே.எஸ். சாகுல் ஹமீது - பாளையங்கோட்டை தொகுதி - 7032 (மூன்றாவது இடம்)
5. டி.எம். உமர் கத்தாஃப் - தொண்டாமுத்தூர் தொகுதி - 4519 (நான்காவது இடம்)
6. எம்.ஒய். முஹம்மது தாரிக் - பூம்புகார் தொகுதி - 2984 (மூன்றாவது இடம்)
7. எம். முஹம்மது அமானுல்லாஹ் - திருப்பூர் (தெற்கு) தொகுதி - 2645 (நான்காவது இடம்)
8. ஹெச். பத்ருதீன் - நிறவிபுதுப்பட்டிணம் (புதுச்சேரி) - 243 ( ஐந்தாவது இடம்)
SDPI இன் மாநில தலைவர் KKSM தெஹ்லன் பாகவி இன்று விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது , நடந்துமுடிந்த சட்ட பேரவை தேர்தலில் தங்களது கூட்டணி பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்று அமோக வெற்றி பெற்றிருக்கிறது . குறிப்பாக தங்களது அ.இ.அ.தி.மு.க தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை பிடித்துள்ளது . மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்கும் தங்களை வாழ்த்துவதோடு சிறுபான்மை மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் வாழ்கை தரத்தை முன்னேற்றும் வகையில் நல்ல பல திட்டங்களை செயல்படுத்துவதோடு ஊழல் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி நல்லாட்சி செய்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
செய்தி: முத்து

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக