புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

குஜராத்தை விட மேற்குவங்காள‌ முஸ்லிம்களின் நிலை மோசம்!

10 மே, 2011

Original_mg-develop-bengalபத்து ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வரும் மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்களின் நிலை குஜராத்தில் வாழும் முஸ்லிம்களின் நிலையை விட மோசமாக இருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய தேசத்திலும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்ட, ஆதிவாசி மக்களின் நிலையைவிட கீழான நிலையில் தான் வாழ்ந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் என அனைத்து துறைகளிலும் மற்ற சமுதாய மக்களை விட பின் தங்கிய நிலையிலேயே முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்து வருகிறது.


சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் நடைப்பெற்ற் கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் டாக்டர் அபு சாலிஹ் ஷரீஃப் மேற்கூறியவாறு கூறினார். மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 25% சதவிகிதமாகும். ஆனால் முஸ்லிம்கள் மிகக் குறைந்த அளவிலேயே பயன் பெற்றுள்ளனர். அரசு பணிகளில் வெறும் 2% சதவிகித முஸ்லிம்கள் தான் வேலை செய்கிறார்கள். 50% சதவிகத்திற்கும் அதிகமான முஸ்லிம் குழந்தைகள் தொடக்கப்பள்ளிகளுக்கு செல்வதில்லை. மீது 50 சதவிகிதத்தில் வெறும் 26 சதவிகத குழந்தைகள் தான் அடிப்படை கல்வியை கற்கின்றனர். வெறும் 12% சதவிகித குழந்தைகள் தான் மெட்ரிகுலேஷன் படிப்பை முடிக்கின்றனர். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மேற்கு வங்கத்தில்தான் 85% சதவிகித முஸ்லிம்கள் கிராமத்தில் வசிக்கின்றனர். அப்படி வசிப்பவர்களின் வாழ்க்கை தரம் எந்த விதத்திலும் முன்னேறியதாக இல்லை. நகர் புரத்தில் வாழக்கூடிய முஸ்லிம்களின் நிலையாவது சரியாக இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. நகர் புரங்களில் வாழும் முஸ்லிம்களின் நிலை தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் வாழ்க்கை தரத்தை விட மோசமாக இருக்கிறது. அரசாங்கம் வழங்க வேண்டிய அடிப்படை வசதிகள், சலுகைகள என அனைத்தும் முஸ்லிம்களுக்கு சரியாக கிடைப்பதில்லை என்று கூறினார்.

சென்ற 2010ஆம் வருடம் அரசாங்கம் 10% சதவிகித இடஒதுக்கீட்டை முஸ்லிம் பிற பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி) வகுப்பினருக்காக ஒதுக்குவதாக அறிவித்தது. இந்த 10% சதவிகித இடஒதுக்கீடு என்பதே ஏமாற்று வேலை, ஏனென்றுச்சொன்னால், ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டின் சதவிகிதம் 7% அதில் 10% சதவிகிதம் என்றுச்சொன்னால் வெறும் 0.7% சதவிகிதம் மட்டுமே! மொத்த மாநில மக்கள் தொகையில் 25% சதவிகிதம் இருக்கும் சமுதாயத்திற்கு கிடைக்கும் இடஒதுக்கீடு வெறும் 0.7% சதவிகிதம் தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
மேற்கு வங்காளத்தில் எல்லா முஸ்லிம்களும் ஓ.பி.சி வகுப்பைச்சார்ந்தவர்கள் தான். அப்படியிருக்கு அவர்களுக்கு வழங்க வேண்டியது 20% சதவிகித இடஒதுக்கீடு. குஜராத்திற்கு அடுத்ததாக  மேற்கு வங்காளத்தில் தான் முஸ்லிம்கள் அதிக அளவில் வசதிகள் மறுக்கப்பட்டு வருகிறார்கள். மேற்கு வங்காளத்தில் இது வரை ஒரு முஸ்லிம் மாணவர்களுக்கு கூட மெட்ரிக் கல்வி கற்பதற்காக படிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டதில்லை.

மேலும் அவர் கூறும்போது, இந்தியாவில் 90க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையான மக்களாக வாழ்கிறார்கள். மேற்கு வங்கத்தில் மட்டும் 12 மாவட்டங்களில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அரசாங்கம் எத்தனையோ சலுகைகள், வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்துகிறத. ஆனால் இந்த 12 மாவட்டங்களுக்கு மட்டும் அப்பேற்பட்ட திட்டங்கள் சரியாக சென்றடைவதில்லை. மத்திய அரசால் ஒதுக்கப்படுகிற நிதியிலிருந்து வெறும் 6% சதவிகிதம் மட்டுமே இம்மாவட்டங்களுக்கு செலவு செய்யப்படுகிறது. இதிலிருந்து சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். காலங்காலமாக முஸ்லிம் சமுதாய மக்கள் இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவளித்து வருகிறார்கள். இருந்த போதிலும் இந்த அரசாங்கம் முஸ்லிம்களை முன்னேற்றுவதற்கான எந்த ஒரு செயல்திட்டத்தையும் இதுவரை நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை.

டாக்டர் ஷரீஃப் அவர்கள் உரையாற்றும்போது குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுடைய நிலையையும் மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்களுடைய நிலையையும் ஒப்பிட்டு பேசினார். கல்வி அறிவில் முஸ்லிம்களுடைய நிலையைப் பற்றி அதிகாமாக பேசினார். மேலே குறிப்பிட்ட புள்ளி விபரங்களை சென்சஸ் கமிஷனிடம் இருந்து பெற்றதாக அவர் கூறினார். இப்பேற்பட்ட புள்ளி விவரங்கள் அதுவும் குறிப்பாக முஸ்லிம்களின் நிலையை தெரிவிக்கும் புள்ளி விபரங்கள் மாநில அரசாங்கத்தால் மறைக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

முஸ்லிம்கள்:
50% (கல்வி அறிவு)
26% (அடிப்படை கல்வி அறிவு)
12% (மெட்ரிக் அளவில் படிப்பு)
(அரசு பணிகளில் வெறும் 2.1% சதவிகித முஸ்லிமகள் பணி புரிகிறார்கள்)

பிற்படுத்தப்பட்ட/ பழங்குடியினர் (SC/ST ): 
54% (கல்வி அறிவு)
30% (அடிப்படை கல்வி அறிவு)
13% (மெட்ரிக் அளவில் படிப்பு)

பிற மக்கள் (முஸ்லிம் அல்லாதவர்கள்):
80% (கல்வி அறிவு)
58% (அடிப்படை கல்வி அறிவு)
38% (மெட்ரிக் அளவில் படிப்பு)

இந்த புள்ளி விபரத்தை குஜராத் மாநிலத்தோடு ஒப்பிடும்போது, ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 9.1% சதவிகிதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அதில் 5.4% சதவிகித முஸ்லிமகள் அரசு பணிகளில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிக்கட்சிகளுக்கு மிகுந்த பின்னடைவு ஏற்பட்டது. காரணத்தை கண்டறிந்த போது முஸ்லிம்களுக்காக எந்த ஒரு வசதியையும் செய்து தராதது தான் என புரிந்து கொண்டு நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலுக்கு முன்பாக புத்தாதேப் அரசு அவசரமாக 10% சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க காரணம் உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட நிலை தொடர்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். முஸ்லிம்களை கவர்வதற்காகவும், திரிணாமூல் காங்கிரஸுடன் கடும் போட்டி நிலவியதாலும்தான் இடதுசாரிகட்சிகள் இந்த முறை முஸ்லிம் வேட்பாளர்களை அதிகப்படுத்தியுள்ளது. 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 42 முஸ்லிம் வேட்பாளர்கலை நிறுத்திய அரசாங்கம் இந்த முறை 56 வேட்பாளர்களை நிறுத்தியது.

 மேற்குவங்கத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் கூட முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக இலகுவாக பயன்படுத்தப்படக்கூடிய வார்த்ததை "இட ஒதுக்கீடு" 3.5% சதவிகிதம் தந்துவிட்டார்கள்! 5% சதவிகிதம் தரப்போவதாக வாக்களித்துள்ளார்கள்! எனவே நாம் அவர்களுக்கே வாக்களிப்போம்! என்று நம்பி மீண்டும் மீண்டும் கேடுகெட்ட அரசியல் வாதிகளையே ஆட்சியில் அமர்த்துகிறோம். இந்த நிலை மாற வேண்டும், கேட்கும் சமுதாயம் அல்ல நாம்! பிறருக்கு கொடுக்கும் சமுதாயம் நாம்! கேட்கவேண்டிய இடத்திலிருந்து கொடுக்க வேண்டிய இடத்திற்கு பயனிப்போம்! சமுதாயத்தை வளமான பாதைக்கு அழைத்துச்செல்வோம்! இன்ஷா அல்லாஹ்!

கட்டுரை : முத்து

1 விமர்சனங்கள்:

farook சொன்னது…

inshaallah

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010