இன்றைய திருமணம் என்பது கோடிகளை கொட்டி கும்மாளமிடும் விழாவாக ஆகிவிட்டது. இன்றைய அரசியல் வாதிகளிலிருந்து விளையாட்டு வீரர்கள் உட்பட அனைத்து பண முதலைகளும் மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு காசை கரியாக்கி சினிமா செட் அமைப்பது போல் வெகு விமரிசையாக திருமணத்தை நடத்துவதை பார்க்க முடிகின்றது. ஒரு காலத்தில் எளிமையான திருமணத்தை நடத்தி மக்களில் நாங்களும் சமமானவர்கள் என்று கூறும் அளவுக்கு உள்ள அரசியல்வாதிகளும் உண்டு. ஆனால் இன்றைய பணம் படைத்த செல்வந்தவர்கள் தங்கள் செல்வாக்கினை நிலை நிறுத்த திருமணம் என்ற போர்வையில் வீண் வீரயங்கள் நடத்துவதை பார்க்க முடிகின்றது. திருமண விருந்து என்ற பெயரில் இன்றைய விருந்துகளில் எத்தனை ஆடம்பரங்கள் ஒன்றல்ல இரண்டல்ல.
ஆடம்பரம் இல்லாத விருந்து நபி(ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (உள்ள ‘சத்துஸ் ஸஹ்பா’ எனுமிடத்தில் ‘ஸஃபிய்யா பின்த் ஹுயை’ அவர்களை மணமுடித்து) மூன்று நாள்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா(ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் ‘வலீமா’ -(மணவிருந்துக்கு) முஸ்லிம்களை அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை.நபி (ஸல்) அவர்கள் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டு (அவ்வாறே அது கொண்டு வந்து விரிக்கப்பட்டபோது) அதில் பேரிச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் ஆகியவற்றை இட்டார்கள். (‘ஹைஸ்’ எனும் எளிய உணவு துரிதமாகத் தயாரானது.) இதுவே நபி (ஸல்) அவர்களின் வலீமா மணவிருந்தாக அமைந்தது. அறிவிப்பளர்.அனஸ்(ரலி)
திருமணத்தின் நோக்கமே பணமும் செல்வாக்கும் தான் இன்றைக்கு முன்னிலை படுத்தப்படுகின்றது. குணமும் ஒழுக்கமும் அளவுகோலாக பார்க்கப்படுவதில்லை.
திருமணத்தின் அளவுகோல்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1.அவளுடைய செல்வத்திற்காக
2.அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3.அவளுடைய அழகிற்காக
4.அவளுடைய மார்க்க (நல்லொழுக்க) த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து)வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! அறிவிப்பளர் : அபூ ஹுரைரா(ரலி).
பணக்கார மிடுக்கும் பளபளப்பான ஆடையும் இருந்தால் அவனுக்கு பெண் கொடுக்கலாம் என்ற நிலை ஏழை முதல் செல்வந்தவர்கள் வரை இருப்பதை பார்க்க முடிகின்றது.
இவர்தான் சிறந்நதவர்
ஒரு (பணக்கார) மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ‘இவரைப்பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்” என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மெளனமாயிருந்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்” என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அவரைப் போன்ற (வசதி படைத்த) வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்’ எனக் கூறினார்கள். அறிவிப்பளர் :ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) .
இஸ்லாமிய மணமகன்
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் மணிவந்து, ‘என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டேன்” என்று கூறிவிட்டு, நீண்டநேரம் நின்றிருந்தார். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘தங்களுக்கு இவள் அவசியமில்லையானால், இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘இவளுக்கு மஹ்ராகக் கொடுக்க உன்னிடம் ஏதேனும் உள்ளதா?’ என்று கேட்டார்கள். அவர், ‘என்னுடைய வேட்டியைத் தவிர என்னிடம் வேறொன்றுமில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அவளுக்கு நீர் இதைக் கொடுத்து விட்டால், வேட்டியில்லாமல் நீர் உட்கார்ந்து கொள்ள வேண்டியது தான். எனவே, (இவளுக்கு மஹ்ர் செலுத்த) ஏதேனும் தேடுக!” என்றார்கள். ‘அவர் (தேடிவிட்டு வந்து) ‘ஒன்றும் கிடைக்கவில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இரும்பினாலான ஒருமோதிரத்தையாவது தேடுக” என்று கூறினார்கள். அப்போதும அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘குர்ஆனில் ஏதேனும் உம்முடன் (மனனமாக) உள்ளதா?’ என்று கேட்டார்கள். அதற்கவர், ‘ஆம் இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம்” எனச் சில அத்தியாயங்களின் பெயரைக் குறிப்பிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உம்முடன் (மனனமாய்) உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துத்தந்தேன்” என்று கூறினார்கள். அறிவிப்பளர் :ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி)
இப்படியும் திருமணம் நடத்தலாம் திருமணத்தின் நோக்கமே பணமும் செல்வாக்கும் தான் இன்றைக்கு முன்னிலை படுத்தப்படுகின்றது. குணமும் ஒழுக்கமும் அளவுகோலாக பார்க்கப்படுவதில்லை.

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) ஒரு பேரிச்சங்கொட்டையின் எடையளவை (மஹ்ராகக்) கொடுத்து ஒரு (அன்சாரிப்) பெண்ணை மணந்தார்கள். (அவரின் முகத்தில்) திருமணத்தின் மகிழ்ச்சி(யின் ரேகை)யைக் கண்டநபி(ஸல்) அவர்கள் அவரிடம் அது குறித்துக் கேட்டார்கள். அதற்கு அப்துர்ரஹ்மான் (ரலி), ஒரு பேரிச்சங் கொட்டையின் எடையளவை (மஹ்ராக)க் கொடுத்து ஒரு பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்” என்று பதிலளித்தார்கள். அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து கத்தாதா (ரஹ்) அறிவித்துள்ள தகவலில் ‘அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) ஒருபேரிச்சங்கொட்டையின் எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து ஒரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார்கள்” என்று காணப்படுகிறது. அறிவிப்பளர் : அனஸ் இப்னு மாலிக்(ரலி)
எளிமையான திருமணம் தான் பரக்கத் (அபிவிருத்தி) நிறைந்ததாகும். மேலும் திருமணம் என்பது எளிமையானது, ஆடம்பரம் இல்லாதது அது எல்லோருக்கும் இலகுவாக அடையும் விதத்தில் இருப்பதை தான் இஸ்லாம் விரும்புகின்றது. ஆனால் இன்றைய முஸ்லிம்கள் உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று திருமணத்தில் போட்டி போட்டு ஆடம்பரமாக நடத்துபவர்கள் அல்லாஹ்வும் அவனது தூதரும் காண்பித்து தந்த அடிப்படையில் திருமணம் நடத்தி இறையருளை பெற்ற திருமணமாக ஆகுவதற்காக முயற்சிப்போமாக!
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக