தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ தமிழகம் முழுவது கவன் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: வட சென்னையில் மாநிலத்தலைவர் தலமையில் நடந்தது.
தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் எஸ்.டி.பி.ஐ மாநிலத்தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமையில் நடந்தது. ஊழலைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில் "லோக் ஆயுக்தா" அமைப்பு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அது போன்று தமிழகத்திலும் "லோக் ஆயுக்தா" அமைப்பை அமைக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ தமிழ்நாடு முழுவது மாவட்ட தலை நகரங்களில் (ஜூலை 7, 2011) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அவ்வகையில் வட சென்னை மாவட்டம் சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐயின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமையில் கவன் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட சென்னை மாவட்ட தலைவர் எஸ்.அமீர் ஹம்ஜா, பொதுச்செயலாளர் முஹம்மது ரஷீத், செயலாளர் ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத்தலைவர் தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்க வலியுறுத்தி பேசினார். அவர் தனது உரையில், "இன்று நாடு எதிர்கொள்ளும் பெரும் அபாயமாகவும், சவாலாகவும் ஊழல் மற்றும் கருப்பு பணமு உள்ளது. இதற்கெதிராக நாட்டு மக்கள் அனைவரும் போராட வேண்டும். ஊழல் 10 கோடி, 20 கோடி என்பது இன்று 100 லட்சம் கோடி என்ற அளவிற்கு முறைகேடுகளும், ஊழலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
சமீபத்தில் வெளிவந்துள்ள K,G ஊழல் மூலம் நாட்டிற்கு 100 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுளளதாக(கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய் ஊழல் )C.A.G.தனது தணிக்கை அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. 1966 ல் மொரார்ஜி தேசாய் தலைமையிலான A.R.C எனப்படும் நிர்வாக மறு ஆய்வுக்குழு ஊழலை கட்டுப்படுத்த 2 பரிந்துரைகளை செய்தது.

ஒன்று, ‘லோக்பால்‘ - மத்திய அரசு தான் வாக்குறுதியளித்தபடி ஜுலை 30 க்குள் சரியான முறையில் லோக்பால் மசோதாவை அமுல்படுத்த வேண்டும்.
மற்றொன்று, ‘லோக் ஆயுக்தா‘. இதை 10க்கும் மேற்பட்ட மாநிலங்கள் அமுல்படுத்தியுள்ளன. இதில் பல்வேறு குறைகள் இருப்பினும் அதன் குறைகளை அகற்றி மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக - நடவடிக்கை எடுக்கும் உரிய அதிகாரத்துடன் தமிழகத்திலும் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும். என கோரிக்கை விடுத்தார். மேலும், ‘இந்த கோரிக்கையை அனைத்து வகையிலும் நாங்கள் வலியுறுத்துவோம், தொடர்ந்து போராடுவோம். அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும், தமிழக உள்துறை செயலாளரையும் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். ஊழலுக்கு எதிராக SDPI தொடர்ந்து போராடும். அதற்கு அனைவரும் துணைநிற்க வேண்டும்.‘ எனக் கேட்டுக் கொண்டார். லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் அமைக்க வலியுறுத்தியும், ஊழலுக்கெதிராகவும் தொண்டர்கள் கோஷங்களை முழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராயல் கரீம், துணைத்தலைவர் ஜாகிர் ஹீசேன், தொகுதி கமிட்டி தலைவர்கள் அமீர் சுல்தான், காஜா முகைதீன், ஜியாவுல் ஹக் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். தொகுதிக் கமிட்டி செயலாளர் ரத்தினம் நன்றியுரையாற்றினார்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக