புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

யார் இயேசுவின் கூற்றை சரியாக பின்பற்றுகிறார்கள்?

9 ஜூலை, 2011

Jesus_Test



இயேசுவை சரியாக பின்பற்றுகிறவர்கள் யார்? இந்த சோதனையை பரிசோதித்து பாருங்கள்!

டெக்ஸாஸ் மாகாணத்தைச்சேர்ந்த கிருஸ்தவராக இருந்து பின்னர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட சகோதரர் யூசுஃப் எஸ்டெஸ் தயாரித்த கேள்விகளாகும். அவர் இந்த சோதனையை உட்படுத்தி பதிலை தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


"இயேசு ஒரு தேவக்குமாரர்" - கிருஸ்தவர்களின் கூற்று"இயேசு ஒரு இறைத்தூதர்"  - முஸ்லிம்களின் கூற்று
ஆனால் கேள்வி என்னவெனில்.... யார் இயேசுவின் கூற்றை சரியாக பின்பற்றுகிறார்கள்?



இயேசுவின் போதனைகளைப்பற்றிய உங்களது அறிவை பரிசோதிக்க இந்த 14 கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்!
இயேசுவின் சோதனை
இறுதி மற்றும் தொலைந்த வேதத்தில் கூறப்பட்ட தீர்கதரிசியின் நற்செய்திகள் பற்றிய சிறு தொகுப்பு!
-யூசுஃப் எஸ்டெஸ்

1). தேவனுடைய கட்டளைகளை பின்பற்றுவதின் மூலம் தான் நித்திய வாழ்க்கையை அடைய முடியும் என்று இயேசு போதனை செய்தாரா?
ஆம்____   இல்லை____
பைபிளின் பதில்::
25. அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

26. அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.

27. அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.

28. அவர் அவனை நேரக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.

Luke 10: 25-28
நாம் தேவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதற்காகத்தான் நம்மை தேவன் படைத்துள்ளார்.
இறுதி ஏற்பாடான குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவேயென்றி நாம் படைக்கவில்லை. (Chapter 51, verse 56)
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கமாட்டான். இதைத்தவிர மற்ற எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் அல்லாஹ்விற்கு இணைவைக்கிறாரோ அவர்கள் நிச்சயமாக பெரும் பாவத்தையே கற்பனை செய்கிறார்கள். (4:48)
1. ( நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் ஒருவனே!
2. அல்லாஹ் எவரிடத்தும் தேவையற்றவன்.
3. அவன் யாரையும் பெறவுமில்லை, யாராலும் பெறப்படவும் இல்லை.
4. அவனுக்கு நிகராக யாரும் இல்லை. (112: 1-4)


2.) இயேசு தனது சீடர்களுக்கு தேவனை மட்டுமே வணங்க வேண்டும், அவருக்கை இணையாக யாதொன்றையும் வணங்கக்கூடாது என்று போதணை செய்தாரா?
ஆம்____   இல்லை____
பைபிளின் பதில்::29. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
Mark 12:29
தன்னை சோதனை செய்த சாத்தானிடம் இயேசு இவ்வாறு பதில் அளித்தார்.
பைபிளின் பதில்::10. அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
Matthew 4:10
இறுதி ஏற்பாடு (குர் ஆன்) கூறுகிறது 4:48
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கமாட்டான். இதைத்தவிர மற்ற எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் அல்லாஹ்விற்கு இணைவைக்கிறாரோ அவர்கள் நிச்சயமாக பெரும் பாவத்தையே கற்பனை செய்கிறார்கள்
3). தேவனுடைய எல்லா கட்டளைகளையும் பின்பற்ற வேண்டும் என்று இயேசு கூறினாரா??
ஆம்____   இல்லை____
புதிய ஏற்பாட்டின், மத்தேயு கூறும்போது இயேசு அவ்வாறு கூறியுள்ளார் என்பது தெளிவாகிறது..
பைபிளின் பதில்::17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
பைபிளின் பதில்::16. அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்;

17. அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
பைபிளின் பதில்::12. ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.
Matthew 7:12

பைபிளின் பதில்::
36. போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.

37. இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;

38. இது முதலாம் பிரதான கற்பனை.

39. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.

40. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.

Matthew 22:36-40
கட்டளைகளை பின்பற்ற வேண்டும் என்ற இயேசு கூறும்போது, நிச்சயமாக தேவனுடைய கட்டளைகளை பின்பற்ற வேண்டும் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
4.) சிலைகளுக்கு முன் நின்று வணங்குவதை இயேசு தடுத்தாரா??
ஆம்____   இல்லை____
பழைய ஏற்பாட்டில் உள்ள செய்திகளை பூர்த்தி செய்யவே நான் வந்துள்ளேன் என்று இயேசு கூறியுள்ளார். அப்படியிருக்க பழைய ஏற்பாட்டி சிலை வணக்கத்தைப் பற்றி கூறும்போது...
பைபிளின் பதில்::
4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

6. என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.
 
       EXODUS 20: 4-6 

5.) இயேசு தன்னை தேவனாக மக்கள் வணங்குவதை தடுத்தாரா??
ஆம்____   இல்லை____

பைபிளின் பதில்::"9. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்."
Matthew 15:9
தீர்கதரிசனம் கூறும்போதும், தன்னுடைய இறுதி நாட்களின் போது இயேசு தெளிவாக கூறியுள்ள தகவல்கள்:
பைபிளின் பதில்::
23. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.

24. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

John 4:23-24
6.) இயேசு தன்னை தேவன் என்று கூறினாரா? 
ஆம்____   இல்லை____
பைபிளின் பதில்::28. நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார். - John 14:28
7.) அற்புதங்களை நிகழ்த்திய இயேசு தனக்கு கடவுள் சக்தி இருக்கிறது என்று கூறினாரா?
ஆம்____   இல்லை____
பைபிளின் பதில்::"நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்."
- John 8:28

22. இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.
Acts 2:22
8.) தேவனுக்கு சமமானவர்கள் உண்டு என்று கூறினாரா?
ஆம்____   இல்லை____
பைபிளின் பதில்::22. இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.
John 8:42
பைபிளின் பதில்::
54. இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
John 8:54
பைபிளின் பதில்::17. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
John 20:17
9.) கிருஸ்துமஸ் மரம் போன்ற செயல்களை இயேசு தடுத்தாரா?
ஆம்____   இல்லை____
பைபிளின் பதில்::2. புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.

3. ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.

4. வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள்.


Jeremiah 10:2-4
10.) ஆண் பிள்ளைகளுக்கு விருத்தசேசனம் செய்து கொள்ள வேண்டும் என்று இயேசு கூறினாரா?
ஆம்____   இல்லை____
Genesis 17:10-11 
10. எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்;

11. உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.


பைபிளின் பதில்::
59. எட்டாம் நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள். (Luke 1:59)
21. பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள். (Luke 2:21)
11.) பன்றி இறைச்சி சாப்பிடுவதைவிட்டும் இயேசு தடுத்தாரா?
ஆம்____   இல்லை____
பைபிளின் பதில்::7. பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

8. இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

Leviticus 11:7-8

12.) இயேசு ஒரு தீர்க்கத்திரிசியா?
ஆம்____   இல்லை____
பைபிளின் பதில்::19. அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள். நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்.
Luke 24:19
பைபிளின் பதில்::
19. அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்.
John 4:19

பைபிளின் பதில்::
17. மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்.
John 9:17
13.) தன்னைப்போன்ற ஒரு தீர்க்கத்திரிசி தனக்கு பின்பு வருவார் என்று இயேசு முன்னறிவிப்பு செய்தாரா?
ஆம்____   இல்லை____
பைபிளின் போதனைகள் இஸ்லாத்தின் போதனைகளோடு ஒத்துப்போகின்றனவா? உதாரணத்திற்கு John 16:7-8
பைபிளின் பதில்::7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

8. அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
John 16:7-8
14.) இறுதி ஏற்பாடான குர் ஆன் மேற்கூரிய செய்திகளைப் பற்றி என்னக்கூறுகிறது? இவைகளை ஏற்றுக்கொள்கிறதா?
ஆம்____   இல்லை____
 குர்ஆனின் பதில்:மேலும் மரியமின் குமாரர் ஈஸா "இஸ்ராயீலின் மக்களே!, எனக்கு முன்னுள்ள தவ்ராத் வேதத்தை மெயிபிப்பவனாகவும், பின்னர் வரவிருக்கும் "அஹமது" என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக வந்துள்ளேன்" என்று கூறிய வேளையை நபியே நீர் நினைவுகூறுவீராக, எனினும் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது அவர்கள் "இது தெளிவான சூனியமாகும்" என்று  கூறினர்.
(61: 6)
சரி! இப்பொழுது உங்களுடைய பதிலை தேர்ந்தெடுங்கள்!

இயேசுவை யார் முழுவதுமாக பின்பற்றுகிறார்கள்?

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010