சென்னை: மண்ணடியில் உள்ள இந்திய தவ்ஹீத் ஜமாத் மர்கஸில் நேற்று (26.08.2011) அன்று மஃரிப் தொழுகைக்கு பின் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைதலைவரும் விடியல் வெள்ளி பத்திரிக்கையின் ஆசிரியருமான சகோதரர் இஸ்மாயில் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பாக ரமாலான் மாதத்தில் ஒவ்வொரு தினமும் மஃரிபு தொழுகைக்கு பின் சமூக தலைவர்களை அழைத்து தங்களது மர்கஸில் சிற்றுரை நிகழ்த்துவது வழக்கம். அதன் அடிப்படையில் நேற்றைய தினம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாநில துணைத்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு மஃரிபு தொழுகைக்கு பின் உரை நிகழ்த்தினார்கள்.
தனது உரையில் இன்றைய முஸ்லிம் சமூகம் இந்தியாவில் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை விளக்கினார். அல்லாஹ் தன் திருமறையில் கூறுவது போல பலஹீனமான சமூகம் இறுதி வரை பலஹீனமாகவே இருந்துவிடாது கண்டிப்பாக அது சக்திபெற்றே தீரும், அந்த வகையில் இந்தியாவில் வாழக்கூடிய இந்த முஸ்லிம் சமூகமும் சக்திபெற்றே தீரும் அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறினார்.
நம்மிடையே கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் நாம் அடையக்கூடிய லட்சியம் ஒன்றாக இருக்கிறது அது நம் முஸ்லிம் சமூகத்தை வலிமைபடுத்துவதும், அல்லாஹ் முஃமீன்களுக்காக தயார்படுத்தி வைத்திருக்ககூடிய சுவர்கமும் ஆகும். பொதுவான பிரச்சனைகளுக்கு நாம் அனைவரும் ஒன்றினைந்து போராடவேண்டும் என்றும் கூறினார்.
செய்தி: முத்து

0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக