மும்பை: தேசிய புலானாய்வுக்குழு இறுதியாக மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றவளிகளாக கைது செய்யப்பட்ட 9 முஸ்லிம் இளைஞர்களையும் அப்பாவிகள் ( நிரபராதிகள்) என்று கூறி விடுதலை செய்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியானா மாலேகானில் குண்டுவெடித்தது. இதில் 30ற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாயினர். இந்த குண்டுவெடிப்பிற்கும் சிமி இயக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறி, 9 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தனர். அவர்கள அனைவர்களிடமும் சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் இருந்தது என்று கூறி அவர்கள் அனைவரும் ஐந்து வருடங்களுக்கு கைது செய்யப்பட்டனர்.
சமீபத்தில் சிபிஐ அதிகாரிகள் என்.ஐ.ஏவிடம் அறிக்கை ஒன்றை சமர்பித்தனர். அதில் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பிற்கு இந்துத்துவ இயக்கங்கள் தான் காரணம் என்றும், கைது செய்யப்பட்ட காவி பயங்கரவாதிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். சமீபத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சுவாமி அசிமானந்தா மாலேகான் குண்டுவெடிப்பிற்கும் இந்துத்துவ அமைப்பிற்கும் தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்டார்.
இதன் காரணமாக கைது செய்யப்பட்ட 9 அப்பாவி இளைஞர்களும் நிரபராதிகள் என அறிவிக்கப்பட்டனர். ஆனால் எந்த தவறும் செய்யாமல் ஐந்து ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்து வந்திருக்கின்றனர். ஆனால் உண்மை குற்றவாளிகளான இந்துத்துவ தீவிரவாத இயக்கங்களை குண்டுவெடிப்பு நடைபெற்று 3 ஆண்டுகள் கழித்து தான் அவர்களுடைய பெயரையே இந்த வழக்கில் சேர்த்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக