பாட்னா: பீகார் மாநிலம் குஜராத்தாக மாற்றப்படுவதற்கு முன் நிதிஷ் அரசிற்கெதிராக ஒன்று சேருங்கள் என்று லாலு பிரசாத் யாதவ் அழைப்புவிடுத்துள்ளார்.
ஜூன் 3 அன்று போர்ப்ச்கஞ் என்ற முஸ்லிம் கிராமத்தில் நடந்த போலீஸ் அத்துமீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பொருட்டு, லாலு பாட்னாவிலிருந்து பஜன்பூர் கிராமத்திற்கு பேரணி மேற்கொண்டார். அப்போது போலீஸ் தாக்குதலில் மரணமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்குதலா பத்தாயிரம் ரூபாயும் அவர் வழங்கினார்.
மக்களிடையே உரையாற்றும்போது லாலு பேசியதாவது, போர்ப்ச்கஞ்சில் நடந்த கொடூரத்தை கண்டு உலகமே நடுங்கியது, ஆனால் நிதிஷ் அசைய கூட இல்லை. நிதிஷ் தற்போது பி.ஜே.பி.யின் மடியில் அமர்துள்ளதாகவும், அவருக்கெதிராக மக்கள் ஒன்று கூடவில்லை என்றால் பீகார் குஜராத்தாக மாற்றப்படும் என்றார்.
நிதிஷ் அரசிற்கெதிரான எங்கள் போராட்டம் போர்ப்ச்கஞ்சிலிருந்து துவங்கும் என்றும் அவர் சூளுரைத்தார்.
முன்னதாக ஜூன் 3 அன்று பீகாரில் உள்ள போர்ப்ச்கஞ் கிராமத்தில் போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், ஒரு குழந்தை, கர்ப்பிணிப்பெண், இரண்டு இளைஞர்கள் என நன்கு பேர் உயிரிழந்தனர், பலர் பலத்த காயமடைந்தனர்.
நன்றி: தூது ஆன்லைன்
நன்றி: தூது ஆன்லைன்
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக