புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

சென்னையில் எஸ்.டி.பி.ஐ நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

15 செப்டம்பர், 2011

            
                சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பாக ஈகை பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (09.09.2011) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமுதாய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் SDPI ன் மாநில தலைவர் கேஎஸ் எம் தெஹ்லான் பாகவி பேசுகையில்:
வருகை தந்துள்ள அனைவருக்கும் புனித ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.சமுதாய மற்றும் அரசியல் தலைவர்களுக்கும், பிரமுகர்களுக்கும் மத்தியில் நெருக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் விதத்தில் SDPI  இரண்டாவது வருடமாக இந்த பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.

SDPI துவங்கி இரண்டு வருடம் மாத்திரமே ஆகியிருந்தாலும் நாடு முழுவதும் நாங்கள் எதிர்பார்த்த வளர்ச்சியை பெற்று வருகிறது. எந்த பணபலத்தின் பின்னணியும் இல்லாமல் சமுதாய மக்களின் உதவி கொண்டு மாத்திரமே SDPI முன்னேறி வருகிறது.

SDPI  துவங்கி ஒன்றரை வருடத்திலேயே தமிழக சட்ட மன்ற தேர்தலை துணிச்சலுடன் சந்தித்தது.  தனித்து போட்டியிட வேண்டாம் என பலபேர் அச்சுறுத்தினாலும் துணிந்து களம் கண்டோம். அதிகமான தொகுதிகளில் போட்டியிட முடியும் எனினும் பொருளாதாரத்தை மனதில் கொண்டு 8 தொகுதிகளில் மாத்திரம் களமிறங்கினோம்.  தமிழகத்தில் இஸ்லாமிய சமுதாயத்தின் பின் புலம் உள்ள எந்தக் கட்சியும் எந்தக் கட்சிகளின் ஆதரவுமின்றி பெறமுடியாத வாக்குகளை SDPI பெற்றது.

SDPI பொருத்தவரை தேர்தலில் வெற்றி தோல்விகளை பற்றி கவலை படாமல் போராட்ட அரசியலையே (AGITATIVE POLITICS)  முக்கியமானதாக கருதுகிறது.
இன்று தேசிய அளவில் முஸ்லிம் சமுதாயம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுவதோடு முஸ்லிம்களுக்கான சலுகைகள் நிராகரிக்கப்படுவதோடு முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு தொடர்கிறது. நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 12 பேர் பலியானதோடு 80 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.      இந்த சம்பவத்தை SDPI வன்மையாக கண்டிக்கிறது. இதற்கு யார் காரணம் எனினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஆனால் சம்பவம் நடந்த உடனேயே முஸ்லிம் பெயர்களை கொண்ட இளைஞர்கள் குற்றவாளிகளாக்கப்படுவதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. 

உள்துறை அமைச்சர் இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. புலனாய்வு பிரிவினர் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அரபி- உர்து பெயர் கொண்ட அமைப்புகள் தான் காரணம் என எல்லா மீடியாக்களும் பகிரங்கப் படுத்துகின்றன. அஃப்சல் குருவை தூக்கிலிடக் கூடாது என்பதற்காகத்தான் இது நிகழ்த்தப்பட்டது என கூறுகின்றன. நாம் கேட்கிறோம் அஃப்சலை தூக்கிலிடுவதை நிர்பந்தப்படுத்துவதற்காக யாரேனும் இதை ஏன் நடத்தியிருக்கக் கூடாது என நாம் சந்தேகிக்கூடாது?    எனவே முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இது போன்ற தாக்குதல்களை எதிர் கொள்ள வலுவான கட்டுப்பாடான, யாருக்கும் அடிபணியாத, எதற்கும் தலை வணங்காத அனைவரையும், அனைத்து சமூகத்தையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஓர் தேசிய அரசியல் கட்சி தேவை. இந்த நிர்பந்தத்திற்காக SDPI துவக்கப்பட்டுள்ளது. 

இந்த சமுதாயத்திற்கெதிரான சதிகள் தமிழக அளவிலானதல்ல. இது தேசிய அளவிலானது. எனவே தேசிய அரசியல் இயக்கமான SDPI ல் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக பிற சமூக மக்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக வேண்டும். SDPI அனைத்து சமூக மக்களும் இணைந்து செயல்படும் விதத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலித்கள் - முஸ்லிம்களும் அரசியல் ரீதியாக ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.என்று தனது உரையில் குறிப்பிட்டார். 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக 

1. தொல். திருமாவளவன் எம்.பி.,(தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)  
2. M.முஹம்மது இஸ்மாயில் எம்.ஏ, (மாநில துணைத்தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) 
3. த.வெள்ளையன் , (மாநில தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கம்)
4. அ.கு. பாத்திமா முசஃபர் (அகில இந்திய பொதுச் செயலாளர், தமிழ்நாடு தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக். ) 
5. A.V.Aகஸ்ஸாலி (மாநில துணைத் தலைவர் பா.ம.க)  
6. K.M.  சரீப்,(மாநில தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி ). 
7. எ. அண்டன் கோமஸ், (தலைவர், அகில இந்திய மீனவர் சங்கம்) 
8. ஐ.முஹம்மது முனீர், (மாநில துணைத்தலைவர், இந்திய தவ்ஹீத் ஜமாத்)
9. மௌலவி தர்வேஷ் ரஷாதி, (பொதுச்செயலாளர். இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்) 
10. சீமா பஷீர் (மதிமுக மாநில அமைப்பு செயலாளர். ) 
11. அ.ஓ. முஹம்மது ஹனீபா, (சமுதாய ஒருங்கிணைப்பாளர்) 
12. தடா அப்துல் ரஹீம் , (தலைவர் இந்திய தேசிய லீக்)  
13. M.G.K நிஜாமுதீன் B.L Ex M.L.A,(N.C.H.R.O மாநில துணைத் தலைவர்) 
14. மேலை நாசர், (மாநில பொதுச்செயலாளர், சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை),
15. செங்கம் ஜப்பார் (முன்னாள் பால் வள வாரிய தலைவர்) , 
16. காயல் இளவரசு(தனம் வீடியோ விஷன். ) 
17. பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொருளாளர் அன்சர் இப்ராஹிம், 
18. மாநில செயலாளர் அன்சாரி 
19. கொரியர் உரிமையாளர் நவாஸ் கனி, 
20. பெரியார் தாசன் என்ற அப்துல்லாஹ் 
21. முன்னாள் டி.ஐ.ஜி முஹம்மது அலி, 
22. மௌலவி ஹாமித் பக்ரி, 
23. தமிழ்நாடு வணிகர் சங்க பொதுச் செயலாளர் தேவராஜ், 
24. மனித உரிமை வழக்கறிஞர் புகழேந்தி, 
25. தனிச்செயலாளர் சேகுவேரா, 
26. அப்துல் ரஹ்மான் 

ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010