சமுகத்திற்கு தேவையான மாற்றங்கள் உருவாவதற்கு மாணவர்களின் பங்கு மிக இன்றியமையாததாகும். அந்த வகையில் சமூக மாற்றத்திற்கான பணிகளை தேசிய அளவில் செயல்பட்டு வரும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்கின்ற மாணவ அமைப்பு திறம்பட செயலாற்றிவருகிறது.
இன்று இந்திய தேசம் லஞ்சம், ஊழல், அநீதி, தீவிரவாதம் போன்ற எண்ணற்ற தாக்குதலில் சிக்கித் தவித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஒட்டு மொத்த தேசத்தையும் தலை கீழாக புரட்டிப்போட சக்தி கொண்ட மாண சமூகத்தில் இன்று பலரும் தங்களுடைய வாழ் நாளை கேலிக்கை விளையாட்டுகளிலும், இன்டெர்நெட் போன்ற பொழுதினை கழிக்கக்கூடிய விஷயங்களில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களில் இன்னும் சிலர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி, தங்களது உடல் நலத்தை கெடுத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சமூக மற்றத்தை உருவாக்குவதற்காகவும், அதற்கான மாணவர்களை தயார்படுத்தவுமே கேம்பஸ் ஃப்ரண்ட் என்று சொல்லக்கூடிய இந்த மாணவர் அமைப்பு தொடங்கப்பட்டு இன்று அகில இந்திய அளவில் மிகப்பெரும் மாணவ சக்தியாக வளர்ந்து வருகிறது.
அந்த வகையில் மக்கள் உரிமைகளுக்காக போராட்டம் என்ற தலைப்பில் தேசிய அளவில் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருப்பதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த பிரச்சாரத்தின் போது கருத்தரங்கங்கள், தெருமுனைக்கூட்டங்கள், பேரணிகள் வாயிலாக மாணவ சக்தியை உருவாக்கும் வகையில் பிரச்சாரத்தை நடத்த இருப்பதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று இந்திய தேசம் லஞ்சம், ஊழல், அநீதி, தீவிரவாதம் போன்ற எண்ணற்ற தாக்குதலில் சிக்கித் தவித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஒட்டு மொத்த தேசத்தையும் தலை கீழாக புரட்டிப்போட சக்தி கொண்ட மாண சமூகத்தில் இன்று பலரும் தங்களுடைய வாழ் நாளை கேலிக்கை விளையாட்டுகளிலும், இன்டெர்நெட் போன்ற பொழுதினை கழிக்கக்கூடிய விஷயங்களில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களில் இன்னும் சிலர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி, தங்களது உடல் நலத்தை கெடுத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சமூக மற்றத்தை உருவாக்குவதற்காகவும், அதற்கான மாணவர்களை தயார்படுத்தவுமே கேம்பஸ் ஃப்ரண்ட் என்று சொல்லக்கூடிய இந்த மாணவர் அமைப்பு தொடங்கப்பட்டு இன்று அகில இந்திய அளவில் மிகப்பெரும் மாணவ சக்தியாக வளர்ந்து வருகிறது.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக